Hanuman Song in Tamil Vetrilayila Maalai KAttunga

Status
Not open for further replies.
வெற்றிலையில மாலை கட்டுங்க மாலை கட்டுங்களேன்
வீர மாருதியை போற்றி போற்றி மாலை கட்டுங்களேன்

துளசி இலை கொழுந்தெடுத்து கோர்த்து கட்டுங்களேன்
ராம தோத்திரத்தை சொல்லி சொல்லி மாலை கட்டுங்களேன் (வெற்றிலை)

கோடி பணம் கேட்டதில்லை மாருதி ராஜா
அவன் கொட்டும் பனி நேரத்திலும் பூத்திடும் ரோஜா
இராம ஜெயம் சொன்னீங்கன்னா வந்து நிற்பானே
தினம் ராம நாத சாமி பேரை பாடி நிற்பானே (வெற்றிலை)

பொட்டு வைத்து பட்டு வைத்து பூஜை செய்தாலே
அவன் எட்டு வச்சு வாசக்கதவை தட்டிடுவானே
மெட்டெடுத்து ராமனுக்கு பாட்டெடுத்தாலே
அவன் மெல்ல வந்து தாளமிட்டு கேட்டிடுவானே (வெற்றிலை)

ஆதரிக்கும் நெஞ்சுக்குள்ளே பூத்திருப்பானே
பொன் அந்தியிலே பூத்த மல்லி போல் சிரிப்பானே
பட்ட மரம் போல் இருக்கும் வாழ்கை எல்லாமே அவன்
சொட்டு சொட்டாய் தேன் வழிய மாற்றி வைப்பானே (வெற்றிலை)

சந்தனத்தை பூசி வைத்த பொன்னிற மேனி
அவன் சாத்திரமாய் வேதமெல்லாம் மிஞ்சிய ஞானி
வட்ட நிலா பூத்தது போல் பூ முகம் பாரு அவன்
வானரத்தின் தலைவனம்மா வந்தனம் கூறு (வெற்றிலை)
 

Attachments

Status
Not open for further replies.
Back
Top