Guru peyarchi - guru transit predictions

Status
Not open for further replies.
மேஷம் -
நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான முட்பாதைகளையும் மலர் பாதைகளாக மாற்றும் சக்தி கொண்டவர்களே, உங்களைப் பற்றி மதீப்பீடு செய்வது மிகவும் கடினம். மிகவும் மன உறுதி உடையவர். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும் மேஷ இராசி வாசகர்களே, எப்படி இருக்கப் போகிறது குருப்பெயர்ச்சி?

இங்கு க்ளிக் செய்யவும்.

ரிஷபம்:
"எருதொடு மாறேல்" என்ற கூற்றுப்படி - எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் ரிஷப இராசி நேயர்களே! பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள். எப்படி இருக்கப் போகிறது குருப்பெயர்ச்சி? இங்கு க்ளிக் செய்யவும்.


மிதுனம்:
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மிதுன இராசி வாசகர்களே!நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். எப்படி இருக்கப் போகிறது குருப்பெயர்ச்சி? இங்கு க்ளிக் செய்யவும்.

கடகம்:
"Cancer is Sensitive" என்பதற்கேற்ப எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் கடக இராசி வாசகர்களே! எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். கொஞ்சம் சந்தேகப்புத்தி(Detective Mind) உடையவர்கள் நீங்கள். எப்படி இருக்கப் போகிறது குருப்பெயர்ச்சி? இங்கு க்ளிக் செய்யவும்.



ஸிம்ஹம்:
"ஸிம்ஹத்தானோடு சிணுங்கேல்" என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள். எப்படி இருக்கப் போகிறது குருப்பெயர்ச்சி? இங்கு க்ளிக் செய்யவும்.



கன்னி:
"கன்னியான் ஏய்க்கப்படுவான்" என்பதற்கேற்ப யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். நீங்கள் இந்து மதத்தில் பிறந்தவர் என்றால் பொதுவாக உங்களுக்கு முருகன், விஷணு, ஐயப்பன் சம்பந்தப்பட்ட பெயர்கள் அமைந்திருக்கும். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். எப்படி இருக்கப் போகிறது குருப்பெயர்ச்சி? இங்கு க்ளிக் செய்யவும்.

துலாம்:
"துலாத்தான் எங்கும் உண்டு" என்பதற்கேற்ப எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் துலா இராசி வாசகர்களே, நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர். எப்படி இருக்கப் போகிறது. இங்கு க்ளிக் செய்யவும்.



விருச்சிகம்:

எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள விருச்சிகம் இராசி வாசகர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.எப்படி இருக்கப் போகிறது. இங்கு க்ளிக் செய்யவும்.

தனுசு:

எதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு இராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர். எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி. இங்கு க்ளிக் செய்யவும்.

மகரம்:
எதிலும் வழக்கு போடும் மகர ராசிக்காரர்களே நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி. இங்கு க்ளிக் செய்யவும்.

கும்பம்:
எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத கும்ப இராசி வாசகர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி. இங்கு க்ளிக் செய்யவும்.

மீனம்:
நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். எப்படி இருக்கப் போகிறது இந்த குருப் பெயர்ச்சி. இங்கு க்ளிக் செய்யவும்.
 
Status
Not open for further replies.
Back
Top