Gita Charam

Status
Not open for further replies.
பகவத் கீதா சாரம்

உபநிஷத்துக்கள் , பிரம்மசூத்திரம் , பகவத் கீதை
இவை மூன்றும் பிரஸ்தானத்ரயம் எனக் கூறப்படும் .
பிரஸ்தானம் என்றால் மார்க்கம் என்பதாகும் .
ஆத்ம சாட்சாத்காரத்தை அடைவதற்கான மிகச் சிறந்த
மார்கங்களாக இந்த மூன்றும் இருப்பதால் இவற்றை
பிரச்தானத்ரயம் என அறிஞர்கள் போற்றுகின்றனர் .
இவை மூன்றிலும் பகவத் கீதை தனிச் சிறப்புடையது.
இந்த 700 ஸ்லோகங்கள் 18 அத்தியாயங்கள் ,
இவற்றில் 42 மணிகளான ஸ்லோகங்களை ரமணர் தமிழில்
ஆக்கியுள்ளார் . அதுவே பகவத் கீதா சாரம்

முதல் பாடல் .........

கருணை மிகுந்த கருத்தனாய்த் துக்கம்
பெருகி விழிநீர் பெருக வருந்துமப்
பார்த்தன் துயர் அகலப் பார்த்து மதுசூதனன் இவ்
வார்த்தை உரைத்தான் வகுத்து .
..................பகவத் கீதா சாரம் ..



மிகுந்த இரக்கம் மேலிட்ட உள்ளம் படைத்தவனாய்
அடக்க முடியாத துக்கத்தின் மேலீட்டால் விழிகளில்
கண்ணீர் பெருகிட வருத்தத்தினால் ஏங்கித்தவிக்கும்
அப்பார்த்தனுக்கு மனதில் படிந்த துயரம் நீங்கும்படியாக
அருட்கண்ணோக்கி மது சூதனன் ஆகிய கண்ணன் இந்த
உபதேசத்தை பதினெட்டு அத்தியாயங்களாக கூறலானான் .

அருசுனனுக்கு யுத்தம் புதியதல்ல .எத்தனையோ யுத்தங்களை
புரிந்து வெற்றி வாகை சூடியவன் . அப்போதெல்லாம் இந்த
கருணை காட்டாதவன் இப்பொழுது சொந்தங்கள் எதிரில்
நிற்கும்போது வருந்துகிறான் . இது கருணையினால் அல்ல .
மமகாரத்தால் . மமகாரம் என்பது எனது எனும் எண்ணம் .

ஆனால் பார்த்தனுக்கு அர்ஜுனன்பால் ஏற்பட்டது கருணை .
அதனால் அர்ஜுனன் "துயர் அகலப் பார்த்து "
என்னும் பதத்தை பகவான் ரமணர் பயன்படுத்தி உள்ளார்
 
To akura: sir Arjun was full of EGO,and he thought that Beeshimaras G.father,Dhronar as Teacher,Kirupachari as Kula guru,Ausvathama as frient will not participate in the battle and kept themself away. This kind of Arjuns high negative thoughts he came to the battle field and saw a huge Army lined up headed by Grand Father Beeshimacharier,totaly shocked and his total confident was last and started crying for the mercy from the Lord.s.r.k
 
Status
Not open for further replies.
Back
Top