• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Garuda Panchami Special

ஆதிமூலமே என்று தன் பக்தன் கஜேந்திரன் கூப்பிட்ட குரலுக்கு கருடன் மேல் ஓடோடி வந்தார் ஸ்ரீ மஹா விஷ்ணு.

ஸ்ரீராம ராவண யுத்தத்தில் நாக அஸ்திரத்தால் கட்டுண்ட ஸ்ரீராம லஷ்மணரை ஹனுமனின் வேண்டுதலால் கருடன் காப்பாற்றினார்.

ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாக சதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப் படுகின்றது.

வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்துக்குமுன், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

இந்த இரு பண்டிகைகளும், சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் இரு முக்கிய பண்டிகைகளாகும்.

ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது.

ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இதேபோல், சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும்.

சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள்.

அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது.

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள்.

அவர்களில், கத்ரு என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர்கள்.

தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரு சாபம் கொடுத்தாள்.

அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன.

ரிஷிகள், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார்.

அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.

இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்து அபிஷேகம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள்.

கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள்.

ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது.

அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர்.

உஜ்ஜைரவஸ் குதிரையின் வால் கருப்பு என்றாள் கத்ரு இல்லை என்றால் வினதை.

கத்ரு தன் கருப்பான நாக பிள்ளைகளை குதிரைகளின் வாலில் சுற்றி கொள்ள உத்தரவிட்டாள்.

அதனால் போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள்.

கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான்.

இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான்.

அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள்.

கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான்.

தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது.

இறுதியில், கருடன் வெற்றி பெற்றார்,

விபரீதத்தை உணர்ந்த தேவேந்திரன் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் உதவியை நாடினார்.

ஸ்ரீமஹாவிஷ்ணு கருடனுடன் போர் புரிந்து நாடகமாடினார்.

கருடனின் சுயநலமற்ற தியாகமும் மஹாவிஷ்ணுவை ஈர்த்தது.

கருடா போர் வேண்டாமே என்ன வரம் வேண்டும் கேள் என்றார் பரமாத்மா.

கோபமும் ஆணவமும் கொண்ட கருடன் நீ யார் எனக்கு வரம் கொடுக்க என்றார்.

வேண்டுமானால் நீ எண்ணிடம் வரம் கேள் என்றார்.

அப்போது சூட்சும தாரியான ஸ்ரீமஹாவிஷ்ணு சரி வாக்கு தவற மாட்டாயல்லவா என்றார்

ஆம் என்றார் கருடன்.

உடனே நீ எனக்கு எப்போதும் வாகனமாக இருக்க வேண்டும் என்றார் பரமாத்மா.

அப்போது தான் கருடனின் ஆணவம் அகன்றது.

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாத காலங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார்.

தன் தாய் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டி வரமும் கேட்டார்.

அப்படியே ஆகட்டும் என்றார் பரமாத்மா.

மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தார், கருட பகவான்.

கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது.

நாக தோஷம் போக்கும் கருட பஞ்சமி விரதம் குழந்தை வரம் தரும் கருட ஹோமம்

கருடனை நினைத்து திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் நாக தோஷம் நீங்குவதோடு, கருடனைப் போல புத்திமானாகவும்,
மஹா வீரனாகவும் பிள்ளைகள் பிறப்பார்கள்.

விபத்து நோய் நீக்கும் மருத்துவராகவும், பஞ்ச பக்ஷியின் ராஜாவாகவும் திகழ்பவர் ஸ்ரீகருட பகவான்.

மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள்.

எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு ஸ்ரீமஹாவிஷ்ணு போதித்ததே 'கருட புராணம்' ஆகும்.

மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன் என்ற பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படும் கருட பகவான் கஷ்யபர், விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாக ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர்.

பெரிய திருவடி கருடாழ்வார்
கருடன், மஹா பலம் உடையவர்.

அழகான முகம், உறுதியான நகங்களை உடையவர்.

கூர்மையான மூக்கு கண்கள், பருத்த கழுத்து, குட்டையான கால்கள் மற்றும் பெரிய தலையையும் பெற்றவர்.

அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர்.

சர்ப்பங்களைக் கூட நொடியில் விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர்.

ஸ்ரீமஹா விஷ்ணுவின் ஸ்தலங்களில் 'பெரிய திருவடி" என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

கருட தரிசனத்தின் சிறப்பு

கருடன்! மங்கள வடிவமானவன்.
பஷிராஜன் அதாவது பறவைகளின் அரசன்.

கருடனைத் தரிசிப்பது சுபசகுனம். ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி.

இன்றளவும் கும்பாபிஷேகத்தின்போது எத்தனை விதமான பூஜைகள், யாகங்கள் நடந்தாலும் பூஜையின்போது கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுகிறது.

கருடனைத் தரிசிக்கும்போது நம் மனம் நிறைவடைகிறது.

ஸ்ரீமந் நாராயணன் எத்தனை விதமான வாகனத்தில் தரிசனம் தந்தாலும் கருட வாகனத்தில் தரிசனம் தருவதே தனிச்சிறப்பு ஆகும்.

திருமலையில் கூட கருடோத்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ‌

ஸ்ரீகருடாழ்வர் எல்லா கோவில்களிலும் அழகுடன் சிறப்பாக காட்சி தருகிறார்.

இவர் விஷ ஜந்துக்களால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்கும் வகையிலும், பஞ்சபக்ஷி தோஷங்கள், சர்ப்ப தோஷங்கள் போன்றவைகளால் ஏற்படும் தடைகளை விலக்கும் விதமாக இவருக்கு சுவாதி நட்சத்திரத்தில் கருட ஹோமம் செய்து அபிஷேகம் செய்த தேனை பருகுவதால் பக்ஷி தோஷங்கள் நீங்கவும், வாகன விபத்துகள் ஏற்பட்டவர்கள் விரைவில் குணமாகும்

கருட ஹோமம்

விபத்து நோய் நீக்கும் மருத்துவராகவும், பஞ்ச பக்ஷியின் ராஜாவாகவும் திகழும்
ஸ்ரீகருடாழ்வர் புற்று நோய் தீர்க்கும் கருட ஹோமம் கருட யாகமும் தேன் அபிஷேகமும் பாவங்கள், நோய்கள் அகலவும், குடும்ப நலம், தைரியம் ஏற்படவும், எதிரிகள் தொல்லை அகலவும், நீண்ட ஆயுள், பணவரவு ஏற்படவும், ஸர்ப்ப தோஷம், ராகு கேது திசா புக்திகளால், ஏற்படும் துன்பங்கள், விபத்து, மரண பயங்கள், புத்தி பேதலிப்புகள் சர்ம வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள் விலகவும், துர் ஆவிகள் பாதிப்புக்களில் இருந்து விலகும், இரத்த புற்று நோய், எலும்பு புற்று நோய், போன்ற பலவிதமான புற்று நோய்கள், பித்ரு, பிரம்ம ஹத்தி தோஷங்கள், பரம்பரை பரம்பரையாக வரும் பூர்வ தோஷங்கள், கால சர்ப தோஷங்கள், பில்லி, சூன்யம், ஏவல், சத்ரு தொல்லைகள், தீராதநோய் நீங்கவும், மறுபிறவியற்ற நிலையை அடையவும், குடும்பத்தில் சுபிட்சம் உருவாகவும், பிறக்கும் குழந்தைகள் அறிவும் வீரமும் உடையவர்களாக விளங்கவும், ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும் கருட ஹோமம் கருட யாகமும் நடைபெறுகிறது.

இந்த யாகத்தில் நவக்கிரக சமித்துக்கள், சீந்தில் கொடி, மிளகு, மருதாணிவிதை, அருகம்புல், ஓமம், வலம்புரி, வசம்பு, கருடகொடி, நல்லெண்ணெய், தேன், நெய், சேர்க்கின்றனர்.

கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

முடிந்தால் கருட பகவானுக்குரிய மந்திரங்களை அதாவது கருட தண்டம் காயத்ரியை 9 27 54 108 என்ற எண்ணிக்கையில் பாராயணம் செய்து வணங்குவது நல்லது.

பின்பு பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி கோவிலை மூன்று முறை வலம் வந்து வீடு திரும்பலாம்.

கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும்.

வீட்டில் விஷப்பாம்புகள், பூச்சிகள் போன்றவை நுழையாமல் தடுக்கும்.

கண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் போன்றவை ஒழியும். மனதிற்கினிய வாழ்க்கைத் துணை, நிறைவான செல்வம், புகழ் போன்றவை கிடைக்கப் பெறுவார்கள்.

உடலில் விஷ பொருட்களால் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி உடல் பழைய நிலையை அடையும்.

எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை மற்றும் மனோதிடம் உண்டாகும்.

வீட்டில் கருட விக்ரஹம் இருந்தால் சாளக்கிராம பூஜையுடன் அபிஷேகம் செய்ய வேண்டும். தூப தீபம் காட்டி நைவேத்தியம் செய்து ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யுங்கள்.

இப்படி செய்வதால் கருடன் மற்றும் ஆதிசேஷனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சர்வ மங்களம் உண்டாகும்.

கருட காயத்ரி

ஓம் தத் புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்.

கருடனை ஆகாயத்தில் பார்த்தால் வலதுகை மோதிர விரலால் கன்னத்தில் தொட்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லுங்கள்.

குங்குமாங்கித வர்ணாய
குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாஹன நமஸ்துப்யம்
பஷி ராஜாயதே நமஹ.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

1628840111104.png
 

Latest ads

Back
Top