February 19 U.Ve.Sa. Birth Day

Status
Not open for further replies.
பிப்ரவரி 19 தமிழ் தாத்தா பிறந்த நாள்

தமிழ் தாத்தா உ.வே.சா. பற்றி பாரதி


செம்பரிதி ஒளிபெற்றான்;பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது;ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல்,இதற்கென்கொல்
பேருவகை படைக் கின்றீரே?


அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்,
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவுன் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?


‘நிதிய றியோம்,இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய்,அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே. (பாரதியார் பாடியது)
 
Dr_U_V_Swaminatha_Iyer_stamp.jpg


I forgot to add the postage stamp issued by Govt. of India in 2006 to honour U .Ve. Saminatha Iyer.
 
Status
Not open for further replies.
Back
Top