• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dwadesi Paranai

ஏகாதசி நிர்ணயம்.: பக்கம் 368.


ஸம்க்ஷேப தர்ம சாஸ்திரம். வெங்கடராம சாஸ்திரிகள்; ராமமூர்த்தி சாஸ்திரிகள்; க்ருஷ்ண சர்மா இவர்களால் எழுதப்பெற்றது. வைத்தினாத தீக்ஷிதீயத்தின் சுருக்கம். ஸ்ம்ருதி முக்தா பலம் ஸங்கிரஹமாக எழுத பெற்றது. ஹெரிடேஜ் இந்தியா எஜுகேஷனல் ட்ரஸ்ட் 1985 ல் ப்ரசுரித்த புத்தகம்.

சனத் குமாரர்:- சுக்ல க்ருஷ்ண பக்ஷங்களில் வரும் இரண்டு ஏகாதசிகளிலும் எப்போழுதும் உபவாசம் இருக்க வேண்டும்..கருட புராணே:


சுக்ல க்ருஷ்ண பக்ஷங்களில் வரும் ஏகாதசிகளில் உபவாசம் அவசியம் இருக்க வேண்டும். இது நித்யம் என கூறப்படுகிறது.ஏகாதசியை த்யாகம் செய்யக்கூடாது. அவசியம் அநுஷ்டிக்க வேண்டும்.

விஷ்ணு ரஹஸ்யே: தனக்கு விஷ்ணு ஸாயுஜ்யம் , இஹ லோக ஸெளக்கியம் , ஸம்பத்துக்கள் அடைய விருப்பமுள்ளவர்கள் இரண்டு ஏகாதிசிகளிலும் உபவாஸமிருக்கவும்.

ஸனத் குமாரர்: ஸுராபாணம் செய்தவனுக்கு ப்ராயஸ்சித்தம் உண்டு. ஆனால் ஏகாதசியை விட்டவனுக்கு ப்ராயஸ்சித்தம் சொல்லபடவில்லை. ஆதலால் ஏகாதஸீயை அவசியம் அநுஷ்டிக்க வேன்டும். விட்டல் பாபம் ஸம்பவிக்கும்.

இந்த வசனங்களிலிருந்து ஏகாதசி வ்ரதம் காம்யம்., அதாவது தனக்கு க்ஷேம லாபங்கள் உத்தேசித்து அநுஷ்டிக்கலாம். தனக்கு செளகரியமிருக்கிறது என்று நினைத்து அநுஷ்டிக்காமல் இருக்க கூடாது. அப்படியிருந்தால் பாபம் சம்பவிக்கும் என்பதால் நித்யம், ஆக நித்ய காம்யம் ஏகாதசி வ்ருதம் என்பது கருத்து,

தசமீ வேதமுள்ள ஏகாதசீ திதீ உபவாசத்திற்கு உகந்தது இல்லை.இந்த விஷயத்தில் ஶ்ரீ வைஷ்ணவர்களுக்கும் ஸ்மார்தர்களுக்கும் மத பேதம் காணப்படுகிறது. வைஷ்ணவர்கள் பாஞ்ச ராத்ர ஆகம ரீதியில் தீக்ஷை உடையவர்கள்..

திதிகளில் அதி வேதை, மஹா வேதை என்று சொல்லுகிறோம். அவைகள் வேதைகள் ஆகாது. ஸூர்யோதயா கால வேதை தான் வேதை என்று சொல்லப்படுகிறது.. இது ஸ்மார்தர்களுக்கு ப்ரமாண வசனம்.

அருணோதய காலமென்பது ஸூர்யோதயத்திற்கு முன்பு நாலு நாழிகைகள். அதாவது 96 நிமிடங்கள்.. அதில் ஆரம்பத்தில் 12 நிமிடம் தசமீ சம்பந்தம் வேதை என்பது. 24 நிமிட ஸம்பந்தம் இருந்தால்

அதிவேதை என்பது. ஸுர்யோதய காலம் மட்டும் அதாவது 96 நிமிடங்களும் தசமி இருந்தால் அதற்கு மஹா வேதை எனப்படும். ஸூர்ய உதய காலத்தில் தசமீ சுமார் இரண்டு நிமிடங்கள் தசமி இருந்தாலும் போதுமானது. உதய வேதை என்பது வேதைகளுடைய லக்ஷணம்.

அருணோதய காலத்தில் அதாவது சூர்யோதய காலத்திற்கு 96 நிமிடங்கள் முன்னிலிருந்து தசமி இருந்த பிறகு ஏகாதசி வருகிறது. இது ஶ்ரீ வைஷ்ணவர்களுக்கு பூஜை, உபவாசத்திற்கு உகந்தது அல்ல..என்பது கருத்து.

ஆகையால் உதய காலத்தில் தசமீ இருந்தால் அந்த தசமீ வித்தகமான ஏகாதசி ஸ்மார்தர்களுக்கு உபவாசத்திற்கு உகந்தது இல்லை.

நாரதர்:-- ஸூர்யோதய காலத்தில் தசமீ சம்பந்தத்துடன் ஏகாதசி காணப்பட்டால் அந்த ஏகாதசியை ஸ்மார்த்தர்கள் அநுஷ்டிக்க கூடாது.

விஷ்ணு ரஹஸ்யம்:--த்வாதசீ திதியானது பாரண தினத்தில் சில வினாடிகளாவது ( குறைந்த பக்ஷம் இரண்டு நிமிடங்கள்)இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தசமி வேதையுடன் இருந்தாலும் ஏகாதசி உபவாசம் இருக்கலாம்.இது ஸ்மார்த்தர்கள் விஷயம்.

ஏகாதசி பூர்ணமாக இருந்து த்வாதசி திதி மட்டும் வ்ருத்தி அடைந்து மறு நாளும் சில நாழிகைகள் காணப்பட்டால் அதற்கு வஞ்சுலி த்வாதசி என்று பெயர். ஆகையால் ஏகாதசியை அந்த விஷயத்தில்

விட்டு த்வாதசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் பாரணை செய்ய வேண்டும். விதவைகள், ஸன்யாசிகள் இவர்கள் வித்தமான ஏகாதசியை அநுஷ்டிக்க கூடாது. பாரணைக்கு த்வாதசி இல்லாவிட்டலும் பாதகமில்லை.

க்ருஹஸ்தன் சுக்ல பக்ஷ ஏகாதசியில் சுத்தமான உபவாசமிருப்பது சிலாக்கியமானது. க்ருஷ்ன பக்ஷ ஏகாதசியில் க்ருஹஸ்தன் சம்ஸாரியாக உள்ளவன் ஏதாவது ஒரு வேளை பலகாரம் சாப்பிடலாம் .

ஞாயிற்று கிழமை, மாத பிறப்பு, க்ருஷ்ண ஏகாதசி, வ்யதீபாதம், சிராத்த தினம் இவைகளில் உபவாஸம் இருக்க வேண்டாம். ஒரு வேளை பலகாரம் சாப்பிடலாம் என்றே சொல்கிறது..

ஏகாதசி கடைசி எட்டு நாழிகைகளும் ( மூன்றே கால் மணி நேரம்). )த்வாதசியின் முன்பு எட்டு நாழிகைகளும் ( மூன்றே கால் மணி நேரம்)

மொத்தம் இந்த ஆறரை மணி நேரம் ஹரி வாஸரம் எனப்படும்..

ஆகையால் த்வாதசி முன் பாகத்தில் பாரணம் செய்யக்கூடாது.

அல்ப த்வாதசி விஷத்தில் த்வாதசி முடிவுக்குள் போஜனம் செய்வது முக்யமாகையால் காலை ஸந்திய வந்தனம், -மாத்யானிகம்,-ப்ருஹ்ம

யக்ஞம், ஒளபாசனம், பூஜை வைச்வதேவம், ஆகிய எல்லா கர்மாகளையும் விடியற்காலத்தில் ஆரம்பித்து செய்யலாம் என்று கருடன் கூறுகிறார்.

தேவல மஹரிஷி: ஸங்கடமான விஷயத்தில் த்வாதசிக்குள் பாரணம் செய்ய முடியா விட்டால் துளசி சேர்ந்த ஜலத்தினால் பகவானை ஸ்மரித்து(


( கோவிந்தா நாமம்) சாப்பிட்டு விட்டு பிறகு நித்ய கர்மாவை முடித்து விட்டு போஜனம் செய்யலாம். தோஷமில்லை என்பது கருத்து.

கால மாதவம்---ப்ரகரணம் 4- பக்கம் -349. “”யதா ஸ்வல்பா த்வாதஸீ ஸ்யாத் அபகர்ஷோ புஜேர் பவேத் ப்ராதர் மாத்யாணிக ஸ்யாபி தத்ர ஸ்யாத பகர்ஷ்ணம்””

எட்டு வயது முதல் என்பது வயது வரை உள்ள அனைவரும் ஜாதி மத வேறுபாடின்றி ஏகாதசி வ்ரதம் அநுஷ்டிக்க வேண்டும். கர்பிணி பெண்கள், வ்யாதி உள்ள நபர்களுக்கு விலக்கு அளிக்க பட்டுள்ளது. ஜலம், பால் பழம், கஞ்சி சாப்பிடலாம். எப்போது வேண்டுமானாலும் இதை தொடங்கலாம்.

“”அஷ்ட வருஷாதிகோ மர்த்யோ ஹ்யசீதி ந்யூன வத்ஸர: ஏகாதஸ்யா முபவஸேத் பக்ஷயோ

ருபயோரபி. ப்ருஹ்மசாரி ச நாரீ ச சுக்லாமேவ ஸதா க்ருஹீ. ((நிர்ணய ஸிந்து- பக்கம் 32.). அஷ்டெள தான்யவ்ருதக்னாநி ஆபோ மூலம் பலம் பய: ஹவிர் ப்ராஹ்மண காம்யா ச குரோர் வசன மெளஷதம் (நிர்ணய ஸிந்து பக்கம் -33.))

(நிர்ணய ஸிந்து பக்கம்-20.)அஸக்ருத் ஜல பாநாச்ச ஸக்ருத் தாம்பூல சர்வணாத் உபவாஸ: ப்ரணச்யேத்தி வா ஸ்வாபாஸ்ச மைதுனாத்.

கந்தாலங்கார தாம்பூல புஷ்ப மாலாநுலேபனம் உபவாஸே ந துஷ்யந்தி
தந்த தாவன மஞ்சனம்.. இந்த வாகியங்கள் படி

உபவாஸ நாளன்று அடிக்கடி நிறைய ஜலம் குடிப்பதாலும் ஒருமுறை தாம்
பூலம் போட்டுக் கொள்வதாலும் பகலில் படுத்து தூங்குவதாலும் உபவாஸம் முறிவடைகிறது



என்கிறார் வ்யாஸர். ப்ருஹ்மசர்யம் ததா செளசம் ஸத்யம் ஆமீஷ வர்ஜனம் வ்ரதேஷ்வேதானி சத்வாரி வரிஷ்டா நீதி நிஸ்சய:

என்பதாக இந்திரிய கட்டுபாடு, உடல்-உள்ள தூய்மை, உண்மை பேசுதல், உபவாசமிருத்தல் அல்லது உப்பு, காரம், பூண்டு வெங்காயம், முள்ளங்கி, பெருங்காயம், போன்ற சாஸ்திரத்தால் நிஷேதிக்கப்பட்ட பொருட்களை விலக்குதல்.


இருந்தாலும் சந்தனம், அலங்காரம், தாம்பூலம் புஷ்ப மாலை மை இட்டுக்கொள்ளுதல் பல் தேய்த்தல், எண்ணைய் தேய்த்து கொள்ளுதல் வாசனை திரவியங்களை பூசிக்கொள்ளுதல் ஆகிய செயல்களை பெண்கள் உபவாஸ நாட்களிலும் செய்யலாம் என்கிறது இந்த ஹேமாத்ரி புத்தகம். கட்டுபாடில்லை என்று தெரிகிறது.

ஜலம், கிழங்கு வகைகள், பழங்கள், பால், ஹவிஸ், மருந்து ஆகியவற்றை சாப்பிடலாம். இதனால் வ்ரததிற்கு பங்கம் ஏற்படாது. ஒரு மாதத்தில் நிகழும் இரண்டு ஏகாதசிக்குள் சுக்ல பக்ஷ (வளர்பிறை)

ஏகாதசி வ்ரதத்தை அநுஷ்டித்தாலே போதும். என்வே மாதமொரு முறையாவது ஏகாதசி வ்ரதம் இருக்க வேண்டும்.

IT IS ONLY FASTING AND NOT STARVATION..





குருவாயூரப்பனிடம் ஶ்ரீ நாராயண பட்டத்ரி ப்ரார்திக்கிறார்_ இவ்வுலகில் மோக்ஷம் வரையிலுள்ள அனைத்து பலன்களயும் தருவதாக-ஸ்ரீ விஷ்ணுவின் அம்சமாக—நமக்கு கிடைக்கும். 1. கங்கை.2. பகவத் கீதை. 3. காயத்ரீ. 4. துளஸீ. 5. கோபீசந்தனம்.6. ஸாளகிராம. பூஜை. 7. ஏகாதஸீ;. 8. நாம

ஸங்கீர்த்தனம். ஆகிய இந்த எட்டு பொருட்களுடன் என்னை சேருமாறு செய் என்கிறார்.. ஆகவே நமக்கு தேவையான அனைத்து பலன்களையும் அளிக்கும் சக்தி ஏகாதஸி வ்ரதத்திற்கும் உண்டு.
.

ஹரி வாஸரம்:---ஹரி என்றால் விஷ்ணு. வாஸரம் என்றால் நாள். ஶ்ரீ மஹா விஷ்ணூக்கு உகந்த நாள். த்வாதசி திதியின் முதல் பகுதிக்கு ஹரி வாஸரம் என பெயர்..

த்வாதஸ்யா மாத்ய பாதஸ்து கீர்த்திதோ வாஸர: ந கார்யம் பாரணம் தத்ர விஷ்ணு ப்ரணீந தத் பரை: (திதி நிர்ணயம்).

ஹரிவாஸரம் என்பது த்வாதசி திதியின் முதல் பகுதி. இதில் போஜனத்தை தவிர்க்க வேண்டும். முதல் பகுதி முடியும் வரை உபவாஸம் இருந்துவிட்டு அதன் பிறகு த்வாதசியில் போஜனம் செய்ய வேண்டும்.

ஏகாதசி, ப்ரதோஷம், திருவோணம், க்ருத்திகை, சஷ்டி, போன்ற நாட்களில் எதுவும் சாப்பிடாமல் உபவாஸம் (வ்ரதம்). இருந்துவிட்டு மறு நாள் காலையில் சாப்பிடுவது உபவாசம் (வ்ரதம்) எனப்படும்.

அவ்வாறு மறு நாள் காலையில் நமது வீட்டில் நமது சாப்பாட்டை தான் சாப்பிட வேண்டும். மற்றவர் வீட்டில் சாப்பிட்டால் உபவாஸ புண்யம் நமக்கு சாப்பாடு போட்டவரை சென்றடையும்.

வ்ரதே ச தீர்த்தே (அ)த்ய்யனே சிராத்தே (அ)பி ச விசேஷத: பரான்ன போஜனாத் தே வியஸ்யான்னம் தஸ்ய தத் பவேத். (நிர்ணய ஸிந்து—19.)


நாம் புண்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று யாத்திரை, ஸ்நானம், ,தானம் செய்யும் போது அங்கு நமது சாப்பாட்டையே தான் நாம் சாப்பிட வேன்டும். மற்றவர் சாப்பாட்டை நாம் சாப்பிட்டால் யாத்ரையின் பலன் உணவளித்த வருக்குத்தான் சென்றடையும்.

மேலும் வேத பாராயணம் ,திவ்ய ப்ரபந்தம், ராமாயணம், பாகவதம் போன்றவற்றை கற்றுக்கொள்ளும் போதோ பாராயணம் செய்யும் போதோ சிராத்த சாப்பாட்டிலும் யாருடைய சாப்பாட்டை நாம் சாப்பிடுகிறோமோ அவருக்குத்தான் அந்த பலன் கிட்டும்..

ஆகவே நாமே தயார் செய்த , அல்லது நமது சொந்த சிலவில் தயார் செய்யப்பட்ட சாப்பாட்டையே சாப்பிட வேண்டும். மேற்கூறிய காலங்களில் மற்றவருக்கு நாம் உணவளித்து அவர்கள் புண்யத்தை நாம் ஸுலபமாக அடைந்து விட முடியும். என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முப்பத்து மூன்று கோடி தேவர்களும் வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை சேவித்து வழி படுகிறார்கள். அன்றைய தினம் பெருமாளை ஆராதிப்பவர்களுக்கு முப்பத்து மூன்று கோடி தேவர்களின் அநுகிரஹமும் கூட கிடைக்கிறது. என்பதால் வைகுண்ட ஏகாதசி யானது முக்கோட்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
 

Latest ads

Back
Top