Do you know the 16 names of Maha Vishnu?

மஹா விஷ்ணுவுக்கு உரிய 16 பெயர்கள் தெரியுமா?

கண்ணன் கீதையில் இவ்வாறு சொல்கிறார்

எவர்கள் எவ்வாறு என்னை நாடுகிறார்களோ அவர்களை அவ்வாறே அனுக்கிரகிக்கிறேன்; என்று

யார் என்னை எந்தப் பெயரால் அழைத்தாலும், அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொண்டு ஆசிர்வதிப்பேன் என்பது
இதன் பொருள்.

அதனால் தான், மகா விஷ்ணுவுக்கு 16 பெயர்கள் கூறப்படுகின்றன .

அந்தப் 16 பெயர்களில் எப்பொழுதும் மக்களை ஆட்கொள்ள அவர் தயங்குவதில்லை.

அப்பெயர்கள் பின்வருமாறு.

1. மருந்தை உட்கொள்ளும் பொழுது , அவனை நினைத்தால் - விஷ்ணு,

2. உணவை உட்கொள்ளும் பொழுது அவனை நினைத்தால் - ஜனார்த்தனன் ,

3. படுக்கச் செல்லும் பொழுது அவனை நினைத்தால் - பத்மநாபன்,

4. திருமணத்தின் பொழுது அவனை நினைத்தால் - பிரஜாபதி,

5. யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் - சத்ரதாரி,

6. வெளியில் கிளம்பும் பொழுது அவனை நினைத்தால் - திரிவிக்ரமன்,

7. நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது - ஸ்ரீதரன் ,

8. கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் - கோவிந்தன்,

9. கஷ்டம் வரும் போது , அவனை அழைத்தால் - மதுசூதனன்,

10. காடுகளில் செல்லும் பொழுது - நரசிம்மனாக தம்மை அண்டியவர்களைக் காப்பவன் ,

11.நெருப்பால் துன்பம் வரும் பொழுது, அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீமகாவிஷ்ணு ,

12.தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீவராகன்,

13.ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவன் நாமத்தை நினைக்கும் பொழுது அவனே -ஸ்ரீராமன்,

14. நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் அவனே - வாமனன்,

15.இறக்கும் தருவாயில் அவன் நமக்கு - நாராயணன்,

16. எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் - மாதவன்.

இதுபோல யுகங்கள் தோறும் பகவானுக்கு பல நாமங்கள் உண்டு.

அவைகள் பின்வருமாறு :

துவாபர யுகம் - ஸ்ரீ தேவராஜன்

திரேதா யுகம் - ஸ்ரீ ரங்கநாதன்

கிருதயுகம் - ஸ்ரீ ஜெகந்நாதன்

கலியுகம் - ஸ்ரீ வெங்கடேசன்

கலியுகம் பாவங்கள் நிறைந்த யுகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பெருகி வரும் துன்பங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்களை போர்கால அடிப்படையில் ஆட்கொள்ளத்தான் ஸ்ரீநிவாசனாக, அந்த நாராயணன் நின்ற
கோலத்தில் உள்ளார்.

நின்ற கோலத்தில் இருந்தால் தான், பக்தன் அழைக்கும் பொழுது ஓடிச் சென்று உதவ முடியுமாம்

மற்ற மூன்று யுகங்களில், கலியுகம் அளவுக்கு பாவங்கள் இல்லை.

அதனால் தான் அமர்ந்த கோலத்தில் தேவராஜனாகவும், படுத்த ( சயன) கோலத்தில் ரங்கநாதனாகவும் இருந்து உள்ளார் பகவான் என்பது தாத்பர்யம்.

ஓம் நமோ நாரயணா
 
We generally say after Achamanam 12 names of Lord Vishu. We should also chant other 4 later so automatically all the 16 names would be recited everyday.
 
Back
Top