Dakshinamurthy 108 Potri in Tamil

praveen

Life is a dream
Staff member
தட்சிணாமூர்த்தி 108 போற்றி

ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அழிவிலானே போற்றி
ஓம் அடைக்கலமே போற்றி
ஓம் அருளாளனே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி

ஓம் அடியாரன்பனே போற்றி
ஓம் அகத்துறைபவனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அபயகரத்தனே போற்றி
ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி
ஓம் ஆன்மீகநாதனே போற்றி
ஓம் ஆச்சாரியனே போற்றி
ஓம் ஆசாரக்காவலே போற்றி
ஓம் ஆக்கியவனே போற்றி
ஓம் ஆதரிப்பவனே போற்றி
ஓம் ஆதி பகவனே போற்றி
ஓம் ஆதாரமே போற்றி
ஓம் ஆழ்நிலையானே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
ஓம் இருமை நீக்குபவனே போற்றி
ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
ஓம் ஈடேற்றுபவனே போற்றி
ஓம் உய்யவழியே போற்றி
ஓம் ஊழிக்காப்பே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எளியோர்க்காவலே போற்றி
ஓம் ஏகாந்தனே போற்றி
ஓம் ஏடேந்தியவனே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓங்கார நாதமே போற்றி
ஓம் கயிலை நாதனே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் கலையரசே போற்றி
ஓம் கருணைக்கடலே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் சதாசிவனே போற்றி
ஓம் சச்சிதானந்தமே போற்றி
ஓம் சாந்தரூபனே போற்றி
ஓம் சாமப்பிரியனே போற்றி
ஓம் சித்தர் குருவே போற்றி
ஓம் சித்தியளிப்பவனே போற்றி
ஓம் சுயம்புவே போற்றி
ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
ஓம் ஞானமே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞானநாயகனே போற்றி
ஓம் ஞானோபதேசியேபோற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தனிப்பொருளே போற்றி
ஓம் திருவுருவே போற்றி
ஓம் தியானேஸ்வரனே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் தேவாதிதேவனே போற்றி
ஓம் தேவருமறியா சிவனே போற்றி
ஓம்நன்னெறிக்காவலே போற்றி
ஓம் நல்யாக இலக்கே போற்றி
ஓம் நாகப்புரியோனே போற்றி
ஓம் நான்மறைப்பொருளே போற்றி
ஓம் நிலமனே போற்றி
ஓம் நிறைந்தவனே போற்றி
ஓம் நிலவணியானே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பசுபதியே போற்றி
ஓம் பரப்பிரம்மனே போற்றி
ஓம் பிரம்மச்சாரியே போற்றி
ஓம் பிறப்பறுப்போனே போற்றி
ஓம் பேறளிப்பவனே போற்றி
ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி
ஓம் பொன்னம்பலனே போற்றி
ஓம் போற்றப்படுவனே போற்றி
ஓம் மறைகடந்தவனே போற்றி
ஓம் மறையாப் பொருளே போற்றி
ஓம் மஹேசுவரனே போற்றி
ஓம் மங்கலமளிப்பவனே போற்றி
ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி
ஓம் மாமுனியே போற்றி
ஓம் மீட்பவனே போற்றி
ஓம் முன்னவனே போற்றி
ஓம் முடிவிலானே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் முக்தியளிப்பவனே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் மூர்த்தியே போற்றி
ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி
ஓம் மோன சக்தியே போற்றி
ஓம் மௌன உபதேசியே போற்றி
ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி
ஓம் யோக நாயகனே போற்றி
ஓம் யோக தட்சணாமூர்த்தியேபோற்றி
ஓம் யம பயமழிப்பவனே போற்றி
ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி
ஓம் வித்தகனே போற்றி
ஓம் விரிசடையனே போற்றி
ஓம் வில்லவப்பிரியனே போற்றி
ஓம் வினையறுப்பவனே போற்றி
ஓம் விஸ்வரூபனே போற்றி
ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி போற்றி
 
Back
Top