காலை நேர ஸ்லோகங்கள் (Morning Prayers)
1.
கராக்ரே வசதே லக்ஷ்மி
கரமத்யே சரஸ்வதி |
கரமூலே து கோவிந்த:
பிரபாதே கரதர்ஷணம் ||
பொருள்: என் கையில் முதலிலே லக்ஷ்மி, நடுவில் சரஸ்வதி, அடியில் விஷ்ணு இருக்கிறார். காலையில் எழுந்தவுடன் என் கையைப் பார்க்கிறேன்.
2.
ஸங்கச்சத்வம் ஸம்பதத்வம்
ஸம்வோ மனாம் ஸி ஜாநதாம் |
தேவா பாகம் யதா பூர்வே
ஸஞ்சாநாநா உபாஸதே ||
பொருள்: அனைவரும் மனவாக, செயலில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது வேத காலத்தில் தேவர்கள் செய்ததுபோல் இருக்க வேண்டும்.
3.
ஜாபாகுசுமஸங்காஷம்
காஷ்யபேயம் மகாத்யுதிம் |
தமோஅரிம்ஸர்வபாபக்னம்
பிரணதோஸ்மி திவாகரம் ||
பொருள்: சிவந்த பூவுபோல் ஒளி வீசும், காஷ்யப மஹரிஷியின் பையனான, பாவங்களை நீக்கும் சூரிய பகவானுக்கு நான் வணங்குகிறேன்.
மாலை நேர ஸ்லோகங்கள் (Evening Prayers)
4.
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துஸ்ச ஸகா த்வமேவ |
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ ||
பொருள்: நீயே என் தாயும் தந்தையுமாக இருக்கிறாய். நீயே என் நண்பனும் உறவுமாக இருக்கிறாய். நீயே என் கல்வியும் செல்வமும். என் எல்லாமும் நீயே.
5.
காயேன வாசா மனசெந்திரியைவா

புத்த்யாத்மனா வா ப்ரகிருதே: ஸ்வபாவாத் |

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை

நாராயணாயேதி சமர்ப்பயாமி ||
பொருள்: என் உடலாலும், மனதாலும், பேசும் வார்த்தைகளாலும், இயல்பான செயல்களாலும் நான் செய்த அனைத்து காரியங்களையும் நாராயணனுக்கு அர்ப்பணிக்கிறேன்.
6.
சுபம் கரோதி கல்யாணம்

ஆரோக்யம் தனசம்பதாம் |

சத்ரு புத்தி விநாசாய

தீபஜோதி நமோஸ்துதே ||
பொருள்: தீப ஒளி நன்மையும் ஆரோக்கியமும் செல்வமும் தருகிறது. பகைவரின் எண்ணங்களை அழிக்கிறது. அந்த ஜோதிக்கு நான் வணங்குகிறேன்.