• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Cuddalore District Temple-அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோ&#299

Status
Not open for further replies.
Cuddalore District Temple-அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோ&#299

Cuddalore District Temple-அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி - 607 401. கடலூர் மாவட்டம்.

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

91-4142-224 328


T_500_851.jpg



தல சிறப்பு:
மூலவர் சுயம்பு மூர்த்தி. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 228 வது தேவாரத்தலம் ஆகும்.

பாடியவர்கள்:

சம்பந்தர்
தேவாரப்பதிகம்



மந்த மலர் கொண்டுவழி பாடுசெயு மாணி யுயிர் வவ்வமனமாய் வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டன் இடமாம் சந்தினொடு காரகில் சுமந்துநட மாமலர்கள் கொண்டு கெடிலம் உந்துபுனல் வந்துவயல் பாயுமண மார்உதவி மாணி குழியே.



-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 17வது தலம்.

பொது தகவல்:

மூன்று பிரகாரங்களுடன் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. உள்பிரகாரத்தில் செல்வ விநாயகர், உதவி விநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், பஞ்சமூர்த்திகள், யுகலிங்கங்கள், விஷ்ணு லிங்கம், சமயக்குரவர்கள், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சூரிய, சந்திரன் சன்னதிகள் உள்ளது. திரிசங்கு மகாராஜா, அரிச்சந்திரன் போன்ற சூரிய குல வம்சத்தினரால் இக் கோயில் சீரமைக்கப் பட்டுள்ளது.

தலபெருமை:


சிறப்பம்சம்: தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர் களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது.

சம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது "உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன்' என பாடுகிறான். எனவே இறைவனுக்கு "உதவிநாயகன்', அம்மனுக்கு "உதவி நாயகி' என்ற பெயரும் உண்டு. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் கெடிலத்தில் சங்கமம் ஆகும் தல தீர்த்தமாகவும் விளங்குகின்றனர்.

பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை நேரத்தின் போது சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் இத்தலத்தில் இரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்து விட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார்.


இறைவனும் இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11ருத்ரர்களில் ஒருவரான "பீமருத்ரர்' திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை. அதன் பின் திரை நீக்கப்பட்டு ஒரு சில வினாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது. விநாயகருக்கு மூஷிக வாகனம் எதிரில் இல்லாமல் அருகில் அமைந்துள்ளது விசேஷம். துர்க்கையின் பாதத்திற்கு கீழ் எருமை தலை கிடையாது, கையில் உள்ள கரம் திரும்பி உள்ளதுடன் கதாயுதமும் தாங்கியிருக்கிறாள்.

சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந் துள்ளன. திரைக்கு பின் அம்மனும், சுவாமியும் இருப்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டி நந்தி நேர் திசையில் உள்ளது. வழக்கமான தலை சாய்த்த நிலை இல்லை. மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்று இங்கு அம்மனின் அம்புஜாட்சியின் ஆட்சி நடக்கிறது. அம்மனின் இரண்டு கைகளிலும் பூ. ஒன்றில் தாமரை. மற்றொன்றில் நீலோத்பவம் இருக்கிறது. பூ உள்ள அம்மன் களை தரிசிப்பதால் துன்பம் பூப்போல்ஆகி விடும் என்பது ஐதீகம்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள மலைமீது மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். விநாயகர் முதல் சண்டிகேஸ்வரர்வரை அனைவருக்கும் ஆதித்ய விமானம் உள்ளது.

தல வரலாறு:


பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக் கும், அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார். மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர் வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார்.ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி,"" இந்த உலகை ஆளும் என் னையே அளந்து கொள்ளுங்கள்,'' என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக் கினார்.

இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வழிபட்டதால் இத்தலத் திற்கு "திருமாணிக்குழி' என பெயர் ஏற்பட்டது.


பிரார்த்தனை

குழந்தை வரம் வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் ஈரத்துணியுடன் அம்மனை 11முறை சுற்றி வரவேண்டும். பின் அம்மனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து அதை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.

திருவிழா:


மகா சிவராத்திரி, நவராத்திரி

இருப்பிடம் :
கடலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். கடலூரிலிருந்தும் பண்ருட்டியிலிருந்தும் அடிக்கடிபஸ் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
கடலூர்

அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை

தங்கும் வசதி :
கடலூர்

ஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91- 4142 - 233 178, 233 179.
ஹோட்டல் வைகை போன் : +91- 4142 -224 321.
ஹோட்டல் உட்லண்ஸ் போன் : +91- 4142 -230 717,230 707.
ஹோட்டல் துரை போன் :+91- 4142 - 224 746,224 646.
ஹோட்டல் பிரியா இன் போன் : +91-9894626157.




Vamanapureeswarar Temple : Vamanapureeswarar Temple Details | Vamanapureeswarar- Tirumanikuzhi | Tamilnadu Temple | ??????????????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top