• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Cuddalore District Temple-அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக&#302

Status
Not open for further replies.
Cuddalore District Temple-அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக&#302

Cuddalore District Temple-அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) கோயில், எருக்கத்தம்புலியூர், இராஜேந்திர பட்டினம் -608 703 . கடலூர் மாவட்டம் .

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


+91- 4143-243 533, 93606 37784



T_500_845.jpg



பொது தகவல்:

இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும், மரங்களை வெட்டவும் முயன்றனர். உடனே அனைவரையும் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடுங்கள்'' என கூறிமறைந்தார். எனவே இவ்வூர் எருக்கத்தம்புலியூர் ஆனது.

மூலவர் திருக்குமாரசாமி, சுவேதார்க்வனேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை வீறாமுலையம்மன், அபின்னகுசநாயகி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

தல சிறப்பு:

மார்ச் 16 முதல் 20 வரையிலும் சூரியஒளி மூலவர் மீது படுகிறது. திருநீலகண்டநாயனார் அவதரித்த தலம். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 215 வது தேவாரத்தலம் ஆகும்.

பாடியவர்கள்:

அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

மறையான் நெடுமால் காண் பரியான் மழுவேந்தி நிறைய மதிசூடி நிகழ்முத் தின்றொத்தே இறையான் எருக்கத்தம் புலியூர் இடங்கொண்ட கறையார் மிடற்றானைக் கருதக்கெடும் வினையே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 4வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி

தலபெருமை

ராஜராஜ சோழன் புத்திரபாக்கியம் வேண்டி இத்தல ஈசனை வணங்கினார். அதன் பலனாக ராஜேந்திர சோழன் பிறந்தான். இதனால் இத்தலத்திற்கு ராஜேந்திரபட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது.

சுவேதன் என்ற அரசனுக்கு முன்வினைப்பயனால் வெண்குஷ்டம் ஏற்பட்டது. சிவபக்தனான இவன் எருக்கத்தம்புலியூர் தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து, நோய் நீங்கப் பெற்றான். எருக்கிற்கு வெண்குஷ்டத்தைப் போக்கும் சக்தியுண்டு.

மார்ச் 16 முதல் 20 வரையிலும் சூரியஒளி மூலவர் மீது படுகிறது. அறிவில் சிறந்த முருகப்பெருமானுக்கு ஊமைத்தன்மை நீங்கியது போல், திறமையிருந்தும் பயம், கோபம் முதலியவற்றால் பேசத் தெரியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.

தல வரலாறு:

கைலாயத்தில் சிவன் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்து கொண்டிருந்தார். பார்வதி அதை சரியாக கவனிக்காததால், அவளை பரதவர் குல பெண்ணாக பிறக்குமாறு சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார்.

இக்குற்றத்திற்காக சிவன் முருகனை, மதுரையில் வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். முருகன் மதுரையில் தனபதி, குணசாலினி என்ற பெற்றோருக்கு "உருத்திரசன்மர்' என்ற பெயரில் அவதரித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.

கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் "குமாரசாமி' ஆனார். உருத்திரசன்மரின் உருவம் இங்கிருக்கிறது.

பிரார்த்தனை

பேச்சில் குறைபாடு உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.


இருப்பிடம் :
விருத்தாசலத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ. தூரத்தில் ராஜேந்திரபட்டினம் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
விருத்தாசலம்

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி

தங்கும் வசதி :
கடலூர்

ஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91- 4142 - 233 178, 233 179.
ஹோட்டல் வைகை போன் : +91- 4142 -224 321.
ஹோட்டல் உட்லண்ஸ் போன் : +91- 4142 -230 717,230 707.
ஹோட்டல் துரை போன் :+91- 4142 - 224 746,224 646.
ஹோட்டல் பிரியா இன் போன் : +91-9894626157.


Swedaranyeswarar Temple : Swedaranyeswarar Temple Details | Swedaranyeswarar- Rajendrapattinam | Tamilnadu Temple | ?????????????????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top