• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Cuddalore District Temple-அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திரு&#296

Status
Not open for further replies.
Cuddalore District Temple-அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திரு&#296

Cuddalore District Temple-அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில்

அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு- 607 801 கடலூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

+91-94434 45055

T_500_610.jpg


பொது தகவல்:

வில்லேந்திய ராமன், அர்ஜூனன் ஆகியோரை கோயில்களில் பார்க்கிறோம். ஆனால், வேலேந்தும் முருகப்பெருமானும், வில்லேந்தி அருள்பாலிக்கும் கோயில் நெய்வேலி அருகேயுள்ள வில்லுடையான் பட்டு கிராமத்தில் இருக்கிறது.


தல சிறப்பு:

இக்கோயிலில் உள்ள முருகன் சிலை பூமியில் புதைந்து கிடந்ததாகவும், அதை உழுத போது, அவர் வெளிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உழும் போது கலப்பை தட்டி நின்றதாகவும், மண்வெட்டி கொண்டு அவ்விடத்தில் வெட்டிய போது மூர்த்தியின் இடது தோளில் சிறு வடு ஏற்பட்டதையும் இப்போதும் பார்க்கலாம். இங்கு முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இவருக்கு நெற்றிக்கண்ணும் இருக்கிறது.


கோயில் எதிரே அமைந்துள்ள திருக்குளத்தில் பங்குனி உத்திரத்தன்று தெப்ப உற்சவம் நடக்கும். கார்த்திகை, தைப்பூசம் மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.

தலபெருமை:

கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கொடிமரத்திற்கு முன்பாக பெரிய அளவில் ஏழு வேல்கள் முருகனின் உத்தரவுக்காக காத்திருக்கும் சேவகர்கள் போல காட்சியளிக்கிறது. அடுத்து இருபுறங்களிலும் 8 அடி உயர துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சிவசுப்பிரமணியசாமி வள்ளி, தெய்வானையுடன் கையில் வில்லும் அம்பும் ஏந்தி பாதங்களில் இறகு அணிந்து அருள்பாலிக்கிறார். இந்த மூலஸ்தான சிற்பம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சமாகும். கோயிலில் காணிக்கையாக பாதக்குறடுகளை செலுத்தும் பழக்கம் இங்கு உள்ளது.கோயிலுக்கு எதிரே அரசும், வேம்பும் உள்ளது. மரத்தின் அடியில் விநாயகப்பெருமான், நாகதேவதைகள் சன்னதியும், கோயிலின் பின்புறம் வன்னிமரமும், நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளது.


தல வரலாறு:

சில யுகங்களுக்கு முன்பு காடாக இருந்த இந்த பகுதியில் தேவர்களும், ரிஷிகளும் தவம் செய்தனர். அவர்களின் தவத்தைக் காக்க முருகன் வில்லேந்தி காவல் காத்தார். அதாவது, சூரசம்ஹாரத்தின் போது தான் முருகனுக்கு வேல் கிடைத்தது. அதுவரை அவரது ஆயுதமாக வில் தான் இருந்துள்ளது. எனவே இது மிகவும் பழமை வாய்ந்த தலமாகும். முருகன் முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வீரனாகவும் காட்சியளித்தார் என்றும் தல வரலாறு கூறுகிறது.

இருப்பிடம் :
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அமைந்துள்ளது வேலுடையான்பட்டு. இத்தலத்திற்கு நெய்வேலியிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
நெய்வேலி

அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை

தங்கும் வசதி :
கடலூர்
ஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91-4142-233 178, 233 179
ஹோட்டல் வைகை போன் : +91-4142-224 321
ஹோட்டல் உட்லண்ஸ் போன் : +91-4142-230 717,230 707
ஹோட்டல் துரை போன் : +91-4142-224 746,224 646
ஹோட்டல் பிரியா இன் போன் : +91-98946 26157.


Sivasubramaniaswamy Temple : Sivasubramaniaswamy Temple Details | Sivasubramaniaswamy - Puduvandipalayam | Tamilnadu Temple | ??????????????????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top