என்னை எப்போதும் தங்கள் இதயத்தில் நிலை
நிறுத்திக்கொள்வோர் பலவீனர்கள் ஆகமாட்டார்கள்-
ஷிர்டி சாய்பாபா
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”.
எண்ணி: எண்ணக்கூடிய தகுதி படைத்தோரை தங்கள் எண்ணத்தில்
சதா நிலை நிறுத்திக்கொள்ளகூடிய தகுதி கொண்டவர்களுக்கு
துணிவு என்பது அவர்களது எண்ணங்களில் இயல்பாகவே குடிகொண்டிருக்கும்.
அத்தகைய துணிவின் துணையோடு அவர்கள் செய்யக்கூடிய கருமங்கள்
எதுவாயினும் எங்கும் எதிலும் ஜெயமே.
அஃதின்றி (இயல்பாகவே தோன்றக்கூடிய துணிவு இல்லாமல்)
வலுவில் தாங்களாகவே எண்ணங்களில் துணிவான தோற்றத்தை
வரவழைத்துக்கொண்டு செயலில் இறங்கி, அதன்பின் உருவாகும்
சூழ்நிலைகளை கண்டு அஞ்சி, அதனால் தாம் அதுவரை
கொண்டிருந்த அசட்டு துணிச்சல் மறைந்து போக, பின்
மெய்யான துணிவை பெறவேண்டி, அத்தகைய துணிவை தரவல்ல
தகுதி கொண்டோரை எண்ணுதற்கு மேற்கொள்ளப்படும்
முயற்சிகளை இழுக்கு என்று இடித்துரைக்கின்றார்
வள்ளுவர் பெருமான்.
Sairam