இந்த தலைப்பை படிக்கும்பொழுது எனக்கு பேரரசர் கிருஷ்னதேவராயர் காலத்து கதை ஒன்று நினைவுக்கு வருகின்றது...
கிருஷ்னதேவராயருக்கு அவசரமாக மந்திரிகள் தேவைப்பட்டனர். என்ன செய்வது,எப்படி செய்வது என்று தெரியாமல் வேறு வழி இன்றி தெனாலி ராமனை அழைத்து ,
" ராமா எனது அரண்மனைக்கு அவசரமாக நேர்மையான மந்திரிகள் தேவைப்படுகின்றார்கள். எனவே அரண்மனைக்கு நேர்மையான மந்திரிகளை தேர்ந்துஎடுக்கும் பொருப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன் "
என்றார்.
" இந்த காலத்தில் நான் எப்படி ஒருவனை நேர்மையானவன் என்று கண்டுபிடிப்பது? " என்றான் தெனாலி...
எப்படி செய்வாயோ ... ஏது செய்வாயோ... இது அரச கட்டளை... நிறைவேற்றுவது உன் கடமை...
உன் மதி நுட்பத்தை பயன்படுத்தி நம் நாட்டுக்கு நேர்மையான மந்திரியை தேர்ந்தெடு என்றார் மன்னர்.
சரி இந்த தேர்வுக்கு நான் என்ன கேட்டாலும் நீங்கள் தரவேண்டும் ... இது தெனாலி..
சரி தருகிறேன்... என்ன வேண்டும் கேள்...இது அரசன்..
ஒரு குகையும் ஒரு மூட்டை நிறைய பொற்காசுகளும் வேண்டும்... தெனாலி.
நேர்மையான மந்திரியை தேர்ந்தெடுக்க நான் ஏன் உனக்கு பொற்காசுகள் தரவேண்டும் ? மன்னன்.
மன்னா பொற்காசுகள் என்க்கல்ல . உங்களுக்கு நான் நேர்மையானவரை தேர்ந்தெடுத்து தரவேண்டுமல்லவா? அதற்க்கு தான். உங்களிடம் வாங்கும் பொற்காசுகளை நான் தேர்வு முடிந்தபின் திருப்பி தந்து விடுகிறேன்.. தெனாலி..
சரி நீ சொன்னால் சரியாகத்தானிருக்கும்.. சரி தேர்வுக்கும் குகைக்கும் என்ன சம்பந்தம் ? புரியவில்லையே...
மன்னா தேர்வு செய்யும் பொறுப்பை என்னிடம் நீங்கள் விட்டுவிட்ட மாத்திரதில் எனக்கு தனி சுதந்திரம் கிடைத்து விட்டது... அதில் நீங்கள் தலையிடக்கூடாது.. பொறுத்திருந்து பாருங்கள்.. இது தெனாலி..
நாடு முழுக்க தண்டோரா அடித்தாகிவிட்டது.. பலபேர் விண்ணப்பிதிருந்தனர்..
மந்திரி பதவிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் ஒன்றாக கூடிவிட்டனர்..
தேர்வு நாளும்,தேர்வு நேரமும் வந்துவிட்டது.. செலக்க்ஷன் ஆபிசர் தெனாலியும் வந்துவிட்டார். மன்னரும் கூடிவிட்டார்.
தெனாலி என்ன கேள்வி கேட்பார் ? அதற்க்கு என்ன பதில் ?
ஒவ்வொருவர் மனதிலும் திக்...திக் என்று அடித்து கொண்டது..
இறுதியாக தெனாலி கூறினார்... " மந்திரி பதவிக்கு விண்ணப்பித்திருந்தவர்களே.. உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.. நீங்கள் அனைவரும் உங்களுக்காக நமது மாமன்னரால் அமைக்கப்பட்ட இந்த மாபெறும் குகை வழியாக வரிசையாக ஒவ்வொருவராக சற்று இடைவெளி விட்டு நுழைந்து மறு முனை வழியாக வரவேண்டும். மறு முனையில் நானும் மன்னரும் உங்களுக்காக காத்திருப்போம்..வாருங்கள் " ...என்று அறிவித்தார்...
ச்ச ...அவ்வளவு தானா? என்று அனைவரும் ஒவொருவராக குகைக்குள் நுழைந்தனர்..
மன்னருக்கு தலை சுற்றியது... " தெனாலி நீ இப்போழுது தேர்ந்தெடுப்பது மந்திரியைத்தானே? ... என்று சந்தேகத்தை தீர்த்துகொண்டார்...
ஆமாம் மன்னா.... சற்று பொறுங்கள்...
தெனாலி சொன்னபடியே மந்திரி பதவிக்கு விண்ணப்பித்திருந்தவர்களும் அவன் சொன்னபடியே குகை வழியாக மறு முனையை அடைந்தனர்.
மறு முனையில் மன்னரும்,தெனாலியும் இருந்தனர்...
தெனாலி சொன்னார்... மன்னா இந்த வழியாக வந்த அத்தனை பேரையும் குதிக்க சொல்லுங்கள்.. குதிப்பவன் நல்ல மந்திரி.. குதிக்க மறுப்பவனை சிறையிலிடுங்கள்..என்று தெனாலி கூறினார்..
விண்ணப்பித்திருந்தவர்கள் அத்தனை பேறும் மன்னனிடம் " மன்னா தெனாலி ஒரு கோமாளி...அவனிடம் மந்திரியை தேர்ந்தெடுக்கும் இந்த உயர்ந்த பொறுப்பை அளித்தீர்களே...உங்கள் முன்னிலையில் அவனது கோமாளித்தனத்தைப் பார்தீர்களா? என்றனர்..
மன்னர் கேட்டார்... தெனாலி அவசியம் இவர்கள் குதிக்கவேண்டுமா? இது என்ன கோமாளித்தனம்? குதிப்பவன் மந்திரி.. குதிக்க மறுப்பவன் குற்றவாளி?..."
தெனாலி தனது முடிவில் கண்டிப்பாக இருந்தார்.. மன்னா நமது நாட்டிற்கு நல்ல மந்திரியை தேர்ந்தெடுக்கவேண்டிய உன்னதமான பணியை என்னிடம் தாங்கள் அளித்தீர்கள்.
அதை செவ்வனே செய்து முடிப்பது எனது கடமை. இவர்கள் அனைவரும் கண்டிப்பாக குதிக்கவேண்டும். குதிப்பவன் மந்திரி. குதிக்க மறுப்பவன் குற்றவாளி...என்றான் தெனாலி.
மன்னரும் தெனாலி சொன்னால் ஏதாவது காரணம் இருக்கும்.. சரி அனைவரும் ஒவொருவராக எனது முன்னிலையில் குதியுங்கள். என்றார் மன்னர்.
ஒவொருவரும் குதிக்கும்போது ஜல்.. ஜல்.. என்று சத்தம் கேட்டது.
ஒருவன் மட்டும் குதிக்கும்போது சத்தம் கேட்கவில்லை. இவனை மந்திரியாக ஏற்றுக்கொள்ளலாமா? என்றார் மன்னர்.
மன்னா.. சற்று பொறுங்கள்... நான் குகைக்குள் சென்றுவிட்டு வருகிறேன்.. என்றபடியே குகைக்குள் சென்றுவந்தான் தெனாலி..
சரி தான் மன்னா ... நம் நாட்டுக்கு இவனே சரியான மந்திரி.
குகைக்குள் இவர்கள் வரும் வழியில் தாங்கள் எனக்கு அளித்திருந்த பொற்காசுகளை கொட்டியிருந்தேன். ஆளுக்கு கொஞ்சமாக எல்லோரும் வேட்டியில் முடிந்திருந்தனர்.இவன் மட்டும் குதிக்கும் போது சத்தம் கேட்கவில்லை என்றதால் ஒரு வேளை இவனக்கு மீதி வைக்காமல் அனைத்தையும் மற்றவர்கள் எடுத்துவிட்டனரோ என்று தான் நானும் போய் பார்த்தேன். ஆனால் சிந்திய பொற்காசு சிதறல்களை ஒன்றுகூட்டி வைத்திருந்தான் இவன்.
அரசு கருவூலத்திற்கு பொருள் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் இவனிடம் உள்ளது.. எனவே இவன் தான் நம் நாட்டுக்கு சரியான மந்திரி என்றான் தெனாலி...
மன்னரும் அனைவரையும் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.. தெனாலியின் மதி நுட்பத்தையும் பாராட்டினார்...