• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Chennai Temples-அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில&

Status
Not open for further replies.
Chennai Temples-அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில&

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை-600 041. சென்னை மாவட்டம்

காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

91 - 44 - 2441 0477.


T_500_14.jpg


பொது தகவல்:

இத்தல விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர். ராஜகோபுரம் 5 நிலை உடையது. நைவேத்தியம் பொங்கல் படைக்கப்படுகிறது.
தல வரலாறு:


வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை கருடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார். கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் "பால்வண்ணநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.

பாடல்: தேவாரப்பதிகம் மந்த மாகிய சிந்தை மயக்கறுத்து அந்த மில்குணத்து ஆனை யடைந்துநின்று எந்தை ஈசனென் ஏத்திட வல்லீரேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே. திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம்.





தலபெருமை:


தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே இத்தலம் விளங்குகிறது. பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இவ்விடத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளன. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது.

அகத்தியருக்கு உபதேசம்: அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் "மருந்தீஸ்வரர்' எனப்படுகிறார்.

மேற்கு திரும்பிய சிவன்: அபயதீட்சிதர் எனும் பக்தர் ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டும்தான் தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர், "சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?' என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.

பாடியவர்கள்:

தேவார பதிகம்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார்

மந்த மாகிய சிந்தை மயக்கறுத்து அந்த மில்குணத்து ஆனை யடைந்துநின்று எந்தை ஈசனென் ஏத்திட வல்லீரேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம்.

பிரார்த்தனை


சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும், சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிவனுக்கும் அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வணங்குதல்.

இருப்பிடம் :
சென்னை திருவான்மியூரில் கிழக்கு கடற்கரை சாலையில் கோயில் அமைந்துள்ளது. திருவான்மியூருக்கு பஸ் வசதி உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவான்மியூர்

அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை

தங்கும் வசதி :
சென்னை
தாஜ் கோரமண்டல் +91-44-5500 2827
லீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343
சோழா ஷெரிட்டன் +91-44-2811 0101
தி பார்க் +91-44-4214 4000
கன்னிமாரா +91-44- 5500 0000
ரெய்ன் ட்ரீ +91-44-4225 2525
அசோகா +91-44-2855 3413
குரு +91-44-2855 4060
காஞ்சி +91-44-2827 1100
ஷெரிமனி +91-44-2860 4401
அபிராமி +91-44-2819 4547
கிங்ஸ் +91-44-2819 1471.



Marundeeswarar Temple : Marundeeswarar Temple Details | Marundeeswarar- Tiruvanmiyur | Tamilnadu Temple | ?????????????



Please also read from here:

Marundeeswarar Temple ? Thiruvanmiyur Chennai

Marundeeswarar Temple, Thiruvanmiyur, Chennai

Marundeeswarar Temple (Thiruvanmiyur) | thechennai - Tourist places
 
Paddu Sir

What a pleasant surprise !!

I have been associated with this Temple since 1977 and member of various Committees involved
in the renovation and upkeep.

I will [ with her permission ] upload an article by a leading Advocate - a resident of Tiruvanmiyur, Ms T.S.Satya Bhama associated with this Temple since 1953. This article was published in the souvenir that we released in 2008
to mark the construction and consecration of the third Raja Gopuram.

I will be most willing to accompany you [ and all members of the TBF ] to the Temple and show you around.

I do have a few pictures from the '60s and will try to upload them here.

B Rgds

Yay Yem
 
Thanks for your Feed Back Anand Sir

Please continue your posting regarding அருள்மிகு மருந்தீஸ்வரர் Temple for the benefit of all.

Yes, i will try to make it with my wife and i will give you prior info about it

Regards


P J
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top