Chennai Temples-அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்க&

Status
Not open for further replies.
Chennai Temples-அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்க&

அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி - 600 005. சென்னை.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

+91-44 - 2844 4054

T_500_32.jpg


பொது தகவல்:


இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர், நைவேத்யம் சர்க்கரைப் பொங்கல், இங்குள்ள விமானம் கமல விமானம்,

சுவாமியின் பிறபெயர்கள்: அகத்தீஸ்வரர், சர்வேஸ்வரர், நோய்தீர்த்தபிரான் என இவருக்கு பலபெயர்கள் உள்ளன.

தல வரலாறு:

கயிலையில் சிவன் திருமணம் நடந்தபோது, உலகை சமநிலைப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு சென்றார். வழியில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. வன்னி மரத்தடியில் இளைப்பாறினால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. எனவே, இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தடியில் அமர்ந்து சிவபெருமானைத் தியானித்தார். அவருக்கு காட்சிதந்த சிவன், வங்கப்பெருங்கடலில் நீராடி அதன் தீர்த்தத்தால் தன்னை அபிஷேகம் செய்து வணங்கிட நோய் தீரும் என்றார். அகத்தியர் கடலில் நீராடி, கமண்டலத்தில் நீர் எடுத்து, சுவாமிக்கு பூஜை செய்து நோய் நீங்கப்பெற்றார். கடல்தீர்த்தத்தால் தன்னை பூஜை செய்யும்படி கூறிய சிவன் என்பதால், இவர் "தீர்த்த பாலீஸ்வரர்' என்றழைக்கப் படுகிறார். அகத்தியரின் நோயை தீர்த்ததாலும் இப்பெயரில் அழைக்கப்படுவதாக கூறப்படுவதுண்டு.

தலபெருமை:


வெள்ளரி வடிவம்: இத்தலத்து சிவனும், அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளனர். சுவாமி சற்றே இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார். அகத்தியர் குள்ள முனிவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே அவர் உயரம் குறைவாக இருக்கிறார். இவருக்கு கடல்தீர்த்தத்தை கொண்டே பிரதான பூஜைகள் செய்யப்படுகிறது

பாஸாக்கும் கணபதி:
இங்குள்ள பிரகாரத்தில் சிதம்பர விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார். இவரைச் சுற்றிலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் வகுப்பை எழுதி வைத்துள்ளனர். இவரை "பாஸாக்கும் கணபதி' என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.மகாமண்டபத்தில் லட்சுமியை மடியில் தாங்கியபடி நாராயணன், சூரியன் ஆகியோர் சுவாமியை நோக்கியபடி உள்ளனர். தெட்சிணாமூர்த்திக்கு எதிரே மகுடம்பூ மரமும், விநாயகருக்கு எதிரே வன்னி மரமும் இருக்கிறது. ஞானம் தரும் இவ்விருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்தால் மாணவர்கள் கல்வியில் சிறப்பர் என்பது மற்றொரு நம்பிக்கை. சுற்றுப்பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் உள்ள சிவன் மற்றும் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

தீர்த்தவாரி திருவிழா: ஆண்டுதோறும் மாசிமகத்தன்று "தீர்த்தவாரி திருவிழா' நடக்கிறது. இத்தினத்தில், சுவாமி கடலுக்கு சென்று நீராடிவிட்டு திரும்புகிறார். சென்னை யிலுள்ள சிவாலயங் களில் இவரே, முதலில் கடலில் தீர்த்தநீராட வருகிறார்.

தல சிறப்பு:

சூரியபூஜை: மாசிமாதம் மகாசிவராத்திரி தினத்தன்று மட்டும் சூரியன் தனது ஒளியை சுவாமியின் மீது பரப்பி பூஜைசெய்வது சிறப்பு.

பிரார்த்தனை
திருமணதோஷம், புத்திர தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கவும், நோய் இல்லாத வாழ்க்கை அமையவும் இத்தலத்தில் வேண்டலாம்.

இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

இருப்பிடம் :
திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டையில் இக்கோயில் அமைந்துள்ளது. லாய்ட்ஸ் ரோட்டிலுள்ள ஐஸ் ஹவுஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்லலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
சென்னை.. Triplicane

அருகிலுள்ள விமான நிலையம் :
மீனம்பாக்கம்

தங்கும் வசதி :
சென்னை

தாஜ் கோரமண்டல் +91-44-5500 2827
லீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343
சோழா ஷெரிட்டன் +91-44-2811 0101
தி பார்க் +91-44-4214 4000
கன்னிமாரா +91-44-5500 0000
ரெய்ன் ட்ரீ +91-44-4225 2525
அசோகா +91-44-2855 3413
குரு +91-44-2855 4060
காஞ்சி +91-44-2827 1100
ஷெரிமனி +91-44-2860 4401
அபிராமி +91-44-2819 4547
கிங்ஸ் +91-44-2819 1471


Theerthapaleeswarar Temple : Theerthapaleeswarar Temple Details | Theerthapaleeswarar- Tiruvallikeni | Tamilnadu Temple | ?????????????????
 
Status
Not open for further replies.
Back
Top