Chakrathalvar Mantram

praveen

Life is a dream
Staff member
சக்ரத்தாழ்வார் மந்திரம் :

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

திருமாலின் ஸ்ரீ சக்கரமான சக்ரத்தாழ்வரை போற்றும் ஸ்லோகம் இது. திருமாலின் வழிபாட்டிற்குரிய புதன் மற்றும் சனிகிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், விஷ்ணு கோவிலுக்கு சென்று, பெருமாளுக்கு முன்பு நின்று சக்ரத்தாழ்வாரின் இந்த மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வந்தால் வாகனங்களில் செல்லும் போதோ அல்லது ஆபத்தான பணிகளில் ஈடுபடும் போதும் விபத்துகள் மற்றும் திடீரென்று ஏற்படும் ஆபத்துகளிலிருந்து காக்கும். உங்களுக்கு தொழில், வியாபாரங்களில் தொல்லைகள், இடைஞ்சல்கள் ஏற்படுத்துபவர்கள் அடங்கிபோவார்கள். வைணவ கடவுளான திருமாலின் கைகளில் திருச்சங்கு ஒரு கையிலும் ஸ்ரீ சக்ரம் மற்றொரு கையிலும் இடம்பெற்றிருக்கும். இந்த ஸ்ரீ சக்ரம் தீமைகளை வேரறுக்க திருமால் பயன்படுத்திய ஆயுதமாகும். அந்த சக்ராயுதமும் ஒரு ஆழ்வாராக கருதப்பட்டு சக்ரத்தாழ்வார் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இந்த சக்ரத்தாழ்வாரின் மந்திரம் மிகவும் சக்திவாய்ந்ததாகும். திடீரென்று ஏற்படும் ஆபத்துகளிலிருந்து நம்மை காக்கும் அற்புத மந்திரம் இது.
 
Back
Top