V
Vritra
Guest
கவுண்டமணி சொன்ன மாதிரி, ‘நாமெல்லாம் தேவையில்லாம பிறந்துட்டமா?’ பிக்பாஸ்?! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (52-ம் நாள்) #BiggBossTamilUpdate
இத்தனை நாள் பிக்பாஸ் விளையாட்டை கவனித்துக் கொண்டிருந்ததில் அதிகபட்சமான எரிச்சலை அடைந்தது, இன்றுதான். மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக நடித்த task-ஐ விட அதிக பொறுமையை சோதித்தது, இந்தக் கொடுரமான பேய் task.
மிக மிக சுமாரான இந்த ஐடியாவை மூன்று நாட்களுக்கு மேல் இழுத்தது ஒருபுறம் என்றால் போட்டியாளர்களின் ஓவர்ஆக்டிங் உள்ளிட்டு (குறிப்பாக வையாபுரி) வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இவற்றை விரிவாக பார்ப்போம்.
அதற்கு முன் -
…………………
ஓவியா, ஜூலி போன்ற முக்கியமான போட்டியாளர்கள் விலகி விட்ட நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்து விட்டதால் புதிய போட்டியாளர்களை இறக்க வேண்டிய கட்டாயம் பிக் பாஸிற்கு. கடந்த வாரமே இது சார்ந்த சூசகமான அறிவிப்பை கமல் வெளியிட்டிருந்தார்.
மட்டுமல்லாமல் பிடிவாதம் பிடிக்கும் ரைசாவிற்கும் பிக்பாஸ் ஒரு செக்மேட் வைத்தாக வேண்டும். எனவே புதிய வரவாக சுஜா வரூணி அந்தரத்தில் தொங்கிக் கொண்டே வந்து இறங்கினார்.
மக்களுக்கு நன்கு அறிமுகமான நபர்களை நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்தால்தான் கவனிக்க வைக்க முடியும் என்பது சரிதான். ஆனால் திரைத்துறையில், அதிலும் நடிக, நடிகையர்களையே தேர்ந்தெடுப்பது ஏன்? அதிலும் ‘பிரபலங்கள்’ என்கிற பில்டப்புடன், திரைத்துறையில் புகழ் மங்கியிருப்பவர்களைத்தான் அழைத்து வர முடிகிறதா? ஆடி மாத கோயில் விழாக்களில் அழைத்து வரும் மைக்ரோ பிரபலங்களைப் போலவே பிக்பாஸூம் இருப்பது பரிதாபம்.
ஒரு சமூகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்களை அழைத்து வந்தால் நிகழ்ச்சியின் சுவாரசியம் கூடும். இதிலும் நடிகர்கள்தான் முக்கியமா? கவுண்டமணி சொன்னது போல ‘நாமெல்லாம் தேவையில்லாம பிறந்துட்டமா?’
சுஜா வருணி வந்தவுடனேயே அதிகமான தன்னம்பிக்கையுடன் மிகையாக எல்லோரையும் பார்த்து சிரித்து வைத்தார். சினிமாவில் நடனக்காட்சிகளில் ஆடுபவர் என்பதால் காயத்ரி மாஸ்டருக்கு குரு வணக்கம் வைத்தார். இது போன்ற தேர்வுகள், ஒரு குறிப்பிட்ட போட்டியாளருக்கு சார்பாக சென்று
முடியலாம் என்பது பிக்பாஸிற்கு தெரியாதா, அல்லது அதுதான் திட்டமா?
………….
இரவில் பெண்கள் அறையில் ஓர் உரையாடல். பேய் சம்பந்தமான சம்பவங்களை புதுவரவான சுஜாவிடம் சொல்லி அவருக்கு பீதியூட்ட மற்றவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். இதில் என்ன கொடுமை என்றால் பாதிக்கப்பட்ட பிந்துவும் இந்த வரிசையில் இணைந்ததுதான்.
முதலில் அடிமையாக இருந்து கொடுமைப்பட்டவர்கள், பிறகு தங்களுக்கு சிறுஅதிகாரம் கிடைத்தால் கூட அந்த அதிகாரத்தைக் கொண்டு அடிமைகளுக்கு ஆதரவாக இல்லாமல் அவர்களும் அதிகாரவட்டத்தில் இணைந்து மேலதிக கொடுமைகளைச் செய்யத் துவங்கி விடுவார்களாம். இதன் மூலம் தான் இன்னமும் முன்னேற முடியும் என்கிற சுயநலமே அவர்களை அப்படிச் செய்ய தூண்டுமாம்.
பிந்துவின் நிலைமையைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. மனித இயல்புகளில் கணத்திற்கு கணம் எத்தனை மாற்றங்கள்.
‘புதிய விருந்தினரைப் பற்றி இதர உறுப்பினர்கள் உடனே புறம்பேசத் துவங்கி விட்டனர்’ என்று பிக்பாஸ் டீமின் அசரிரீக்குரல் கவலைப்படுகிறது. அதுதானே உங்களுக்கு வேண்டும் பிக்பாஸ்?
Read more at: http://www.vikatan.com/cinema/bigg-...heading-to-happenings-of-biggboss-day-52.html