Ayul Vrithi Mantram

praveen

Life is a dream
Staff member
ஆயுள் விருத்தி மந்திரம்

மகாமிருத்யுஞ்சய மந்திரம், காயத்ரி மந்திரம் ஆகியன மந்திரங்களிலேயே மிகவும் உயர்வானவையாகதாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் சொல்லப்படுகின்றன.

இவற்றை எவர் ஒருவர் தினமும் சொல்லி வருகிறாரோ அவரை இந்த மந்திரங்கள் கவசம் போல் இருந்து பாதுகாக்கும் என்பது நம்பிக்கை..

இதில் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்காக மற்றவர்களும் சொல்லலாம்.

மஹா மிருத்யுஞ்சய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்* உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

இதன் பொருள்

இயக்கையாகவே நறுமணம் கொண்டவரும், அடியவர்களுக்கு கருணையை ஊட்டி வளர்பவருமான முக்கண் கொண்ட எம் பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறோம். காம்பில் இருந்து வெள்ளரிப்பழம் எப்படி விடுபடுகிறதோ அது போல மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து நன்னெறியில் இருந்து பிறழாமல் வாழ்ந்திட அருள்பாலிக்க வேண்டுகிறேன்.
 
Back
Top