• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai -

Status
Not open for further replies.
Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai -


The Temple

p6a.jpg



Sri Kapaleeshwarar temple was built in 7th century CE by the Pallavas. The original Kapaleeshwarar Temple was built where Santhome Church is located currently in Chennai. This original temple was demolished by the Portuguese and the present temple was built in the 16th century by the Vijayanagar Kings.


One of the sacred shrines in Tamil Nadu is Arulmigu Kapaleeswarar Temple in Mylapore, in Chennai City.It is a Siva Temple, and the name of the Lord is ARULMIGU KAPALEESWARAR. The name of the Goddess is ARULMIGU KARPAGAMBAL.It is a loverly temple with a Stately Spire or ‘Gopuram’ as it is called. There is a big tank on its West. The temple and the tank are surrounded by Broad streets on the four sides. The view of the temple and the tank is picturesque.


Mylapore is on the sea coast and the shore is away by half a mile of thickly populated residential area.

The name Mylapore is derived from the legend that the Goddess Uma worshipped Siva in the form of a peacock (or mayil in Tamil). We can see a representation of this legend on stone in a small Shrine under a Punnai tree (Sthala Vriksha) in the Courtyard of the temple.



Temple History:


Mother Uma wanted to know the full meaning of the five lettered Mantra – Na Ma Shi Va Ya – and the glory of the sacred ash. She begged Lord Shiva to teach Her on these topics. While Lord was teaching Her, Mother Uma was attracted by the beauty of a peacock dancing before Her. Lord, for Her inattention, cursed Her to become a peacock. For relief from the curse, He advised Her to go to Earth and perform penance on Him. Mother Uma worshipped the Shivalinga under the Punnai tree in this place. Moved by Her penance, Lord appeared before Her and and confirmed Her release from the curse and named Her Karpagavalli. As requested by Mother Karpagavalli, Lord approved the name of the place Mayilai-now Mylapore.

The Legend Behind The Temple

Mother Uma performed penance here on Lord taking the form of a peacock. Lord Muruga got His Sakthivel from Lord. Lord Brahmma got back His creation job with blessings of Lord here shedding His pride. Vedas worshipped Lord Kapaleeswara, hence the place is known as Vedapuri. It is also known as Shukrapuri as planet Shukra-Venus worshipped Lord here. Lord Sri Rama stayed here, performed pujas to Lord Shiva with festivals. The is the holy soil where Poompavail was restored to life from her preserved bones, a miracle by saint Tirugnana Sambandar. Saint Arunagiriar has sung the glory of Lord Singaravela – Muruga in his famous Tirupugazh. Adding to the reputation of the land, this is birth place of Tiruvalluvar whose Tirukkural is honoured with translations in many advanced languages of the world.
Thalami, a researcher from Greece, visited this place 2000 years ago and had mentioned the name of the place as Malliarpa. This was the habitat of peacocks. As they made sounds – Arpu in Tamil – the place was known as Mayil (peacock) – Arpu, changed as Mayilappu and finally stayed with the name Mylapore.

Lord Brahmma thought that He was as great and equal as Lord Shiva as He too had five heads as Shiva. To teach Him a lesson and to check His pride. Lord Shiva nipped one head and held the skull in His hand. Kapala in Sanskrit means skull, hence Lord Shiva was praised as Kapaleeshwara and the place KAPALEESHWARAM.

The first piece of literature on this holy soil was the song of Saint Tirugnana Sambandar beginning with the line ‘Mattitta Punnayam Kanal’. These are the lines that brought Poompavai, daughter Sivanesar back to life who died of snake bite while plucking flowers for Shiva Puja. After cremating her body, Sivanesar preserved the bones and ashes in a pot. After the visit of Sambandar to the place, as required by the Saint Sivanesar placed the ash-bone pot before him.

One of such songs addressed to Poompavai then in ash pot said that by her death she was the loser missing the Thai Poosam festival dedicated to Lord Shiva. The girl came alive after this song. However, Sambandar could not accept Poompavai for his wife as requested by the father, as he himself had now become her father by restoring her to life back. Poompavai spent the rest of her life as a virgin serving Lord Shiva and attained salvation then.

Before waging His war on demon Surapanma, Lord Muruga performed penance in this temple. Lord Shiva and Mother Uma blessed the Son and gifted the weapon VEL to conquer the demon. Muruga returned triumphantly as Singaravela on the demon peacock – demon Surapanma was changed a peacock vahan of Muruga. Indira gave his daughter Deivanai to Lord Muruga in marriage. Iravadham elephant belonging to Indira could not bear the separation of Deivanai and chose to stay with her. Both consorts of Lord Muruga, Valli and Deivanai grant darshan to devotees sitting on Iravadham. This is a rare darshan.

Each Poornima-full moon day is a day of special pujas to Lord and Mother. As the divine Karpaga tree offers all wishes to a devotee, Mother Ambica offers all that Her devotees wish, hence praised as Karpakambika. All the 63 Nayanmars-Shiva devotees- come in procession during the Panguni Uthiram festival in March-April.


Singers:

Great Saivite Saints Tirugnana Sambandar, Tirunavukkarasar and Sundarar had sung the glory of Lord Kapaleeswara in their Thevaram hymns. This is the 24th Shiva temple in Thondai Nadu-Nadunadu region praised in Thevaram hymns.The temple is closely associated with the history of Saint Tirugnana Sambandar who restored Poompavai to life from the bones and ashes preserved by her father Sivanesar. The father was intending to give his daughter to the saint in marriage. But fate had it that she died of snake bite. Yet, the father preserved her bones in a pot to be handed over to the child saint when he visited the place. Sambandar did visit the place. Narrating his sad story, he placed the pot before the saint. Sambandar sang a pathigam-10 verses, beginning with the line, ‘Mattitta Punnai’ listing the various festivals of Lord Shiva in the first three lines asking her in the final line, how she could miss the festivals dedicated to Lord Shiva. The pot broke off and Poompavai came alive in her full beautiful form. His joy knowing no bounds, the father asked the saint to accept his daughter. Sambandar told him that he had now become her father as he gave her life again and could see her only as a daughter. Poompavai spent the rest of her life alone praying to Lord Shiva attaining salvation in the end.

To Be Continued


OM NAMA SHIVAYA

http://temple.dinamalar.com/en/new_en.php?id=628
http://kapaleeswarartemple.com/
http://www.mylaikapaleeswarar.tnhrce.in/
 
Last edited:
Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai - Continued

Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai - Continued

மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் - அபூர்வ சேதிகள்


[SIZE=+2]தொ[/SIZE]ண்டை நாட்டில் உள்ள 32 சிவத் தலங்களில் 24-வது தலம் திருமயிலை. இது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கே, சுமார் 8 கி. மீ. தொலைவில் உள்ளது. சென்னையின் அனைத்து இடங்களில் இருந்தும் திருமயிலைக்கு பேருந்து வசதிகள் உண்டு.
bulletflo.gif
மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரம்மாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது.

bulletflo.gif
உமையவள், மயிலாக வந்து, இங்கு ஈசனை வழிபட்டதால்- மயிலை, சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகா விஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால்- வேதபுரி, சுக்ராச்சார்யார் இங்குள்ள ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால்- சுக்ரபுரி, மயிலை மற்றும் திருவொற்றியூரில் வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனை போற்றி வழிபட்டதால்- கபாலீச்சரம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது திருமயிலை.

p6a.jpg
bulletflo.gif
மூவேந்தர் காலத்தில், புலியூர் கோட்டத்துப் புலியூர் நாட்டைச் சேர்ந்ததாக விளங்கிய மயிலை, வடமொழியில் ‘கேகயபுரி’ எனப்பட்டது.

p7.jpg



bulletflo.gif
‘மயிலாப்பி’ என்றும் இந்தத் தலம் அழைக்கப்பட்டதை அப்பர் பெருமானின், ‘மயிலாப்பிலுள்ளார்...’ என்ற திருத்தாண்டகத்தின் வரிகளில் இருந்து அறியலாம்.
bulletflo.gif
கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வார்- ‘மாமயிலை’ என்றும், கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார்- ‘மயிலை’ மற்றும் ‘மாமயிலை’ ஆகிய பெயர்களாலும், சுந்தரர் ‘தொன்மயிலை’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

bulletflo.gif
கி.பி 7-ஆம் நூற்றாண்டில் இந்தத் தலம், ‘மயிலாப்பில்’ ‘மயிலாப்பு’ ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டது. கி.பி.9-ஆம் நூற்றாண்டில் திருமயிலை, ‘மயிலாபுரி’ என்று வழங்கப்பட்டதை, நந்திக் கலம்பகம் உணர்த்துகிறது. சமணர்கள், இந்தத் தலத்தை பத்மநாதபுரம், வாமநாதபுரம் ஆகிய பெயர்களால் அழைத்தனர். முதலாம் குலோத்துங்கன் காலத்தில், ஜயங் கொண்டாரால் பாடப் பெற்ற கலிங்கத்துப்பரணி (11-ஆம் நூற்றாண்டு) ‘பண்டை மயிலை’ என்று குறிப் பிடுகிறது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த வெனிஸ் வணிகர் மார்கோபோலோ, ‘மயில்கள் நிறைந்த பகுதி’ என திருமயிலையைக் குறிப்பிடுகிறார்.

14-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜான் டி. மரிக்நோலி என்ற மேலை நாட்டு யாத்திரிகர், ‘மைரா போலிஸ்’ ( Myropolis ) என்றும் 16-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த டூரேட் பார்போஸா என்பவர் ‘மைலா பூரா’ என்றும் குறிப்பிடுகின்றனர். மேல்நாட்டு புவியியல் அறிஞர் தாலமி (காலம்: கி.பி.119-161), தனது புவியியல் நூலில், ‘மலியார்பா’ என்று குறிப்பிடுவது, திருமயிலையையே என்பர் வரலாற்று அறிஞர்கள்.
p8.jpg
bulletflo.gif
போர்ச்சுக்கீசியர்கள் மயிலையை, ‘மெலிய பூர்’ ( Meliyapur ) என அழைத்தனர். இவர்களது வருகைக்குப் பிறகு, மயிலையின் கடற்கரை பகுதி புனித தாமஸ் என்பவரது நினைவாக ‘சாந்தோம்’ எனப்படுகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிலாப்பூர் ( Milapur ) என வழங்கப்பட்டது மயிலை. ஆங்கிலேயர்கள் மயிலாப்பூர் என்று அழைத்தனர். சென்னை வாழ் மக்களும் அதையேப் பின்பற்றுகின்றனர்.
bulletflo.gif
பல்லவ மன்னன் நந்திவர்மனை, ‘மயிலைக் காவலன்’ என்கிறது ‘நந்திக் கலம்பகம்’.

bulletflo.gif
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் மற்றும் சேக்கிழார் ஆகியோரால் பாடப் பெற்ற அற்புதத் தலம் மயிலை.

திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், திரு மயிலை யமக அந்தாதி, கபாலீசர் பதிகங்கள், திருமயிலைக் கபாலீசர் இரட்டை மணிமாலை, திருமயிலைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருமயிலாப்பூர் பதிகங்கள், கங்காதர நாவலர் இலக்கியங்கள், ஸ்ரீகபாலீச்சரர் தோத்திரம், சென்னைத் திருமயிலை ஸ்ரீகபாலீச்சரர் துதிப்பா மாலை, கபாலீசர் குறுங்கழி நெடில், திருமயிலை நான்மணிமாலை, பாபநாசம் சிவன் கீர்த்தனைகள், திருமயிலைக் குறவஞ்சி, திருமயிலைக் கபாலீசன் மாலை, திருமயிலை வெண்பா அந்தாதி, திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர் துதி, ஆகியன கபாலீஸ்வரரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள்.

bulletflo.gif
கற்பகவல்லியம்மை பதிகம், திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம், கற்பகவல்லி மாலை, கற்பகவல்லியார் பஞ்சரத்தினம், ஸ்ரீகற்பகாம்பாள் பாடல்கள், கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம், திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலை, திருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ் ஆகியன ஸ்ரீகற்பகாம்பாள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள்.

bulletflo.gif
திருமயிலை சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ், திருமயிலைக் கோவை, சிங்கார வேலர் மாலை, திருமயிலைக் குகன் பதிகங்கள், மயிலைச் சண்முகப் பஞ்சரத்தின மாலை, அருட்புகழ், மயிலைச் சிங்காரவேலர், இரட்டை மணிமாலை, திரு மயிலைச் சிங்கார வேலர் பதிகம் ஆகியன மயிலை ஸ்ரீசிங்காரவேலரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள்.

p9a.jpg



bulletflo.gif
தவிர, திருமயிலைப் பிள்ளைத் தமிழ், திரு மயிலைக் கோவை, திருமயிலை உவமை வெண்பா, திருமயிலை வெண்பா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பதிகங்கள், திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகளின் பதிகங்கள், தாச்சி அருணாசல முதலியார் பதிகங்கள், கி.ஊ.பா. கங்காதர நாவலரின் நூல்கள் ஆகியனவும் மயிலைவாழ் தெய்வங்களைப் போற்றும் நூல்கள் ஆகும்.

p9.jpg
bulletflo.gif
‘வைத்தீஸ்வரன் கோவில்- விளக்கழகு; மாயூரம்- கோபுர அழகு; திருவாரூர்- தேர் அழகு...’ என்பர். அந்த வரிசையில், திருமயிலையின் அழகு அதன் மாட வீதிகள்! ‘மங்குல்மதி தவழும் மாட வீதி மயிலாப்பூரில்...’ என்று திருநாவுக்கரசர் பாடியுள்ளார். திருமயிலை உலா எனும் நூல், ‘நீரும் மணி மாட வீதிகள்’, என்றும் ‘வானளக்கும் பொன் மாட வீதி’ என்றும் மயிலையின் மாட வீதி களைச் சிறப்பிக்கிறது.



bulletflo.gif
ஏழு என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட விஷயங்கள் மயிலையின் தனிச் சிறப்பு. ஏழு சிவன் கோயில்கள் (கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்த பாலீஸ்வரர்). ஏழு பெருமாள் கோயில்கள், ஏழு குளங்கள் (கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடவுள் தீர்த்தம் (கடல்), ராம தீர்த்தம்) என்று இந்தப் பட்டியல் நீளுகிறது. இங்குள்ள ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் முறையாக தரிசித்தால் எல்லாப் பேறுகளும் கிடைக்குமாம். அதனால் ‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ என்று பெயர் பெற்றது.


bulletflo.gif
பேயாழ்வார், திருவள்ளுவர் மற்றும் வாயிலார் நாயனார் ஆகியோர் அவதரித்த தலம் இது. மயிலை யில் வள்ளுவருக்கு தனிக்கோயில் ஒன்று உண்டு.

bulletflo.gif
உமையவள் உட்பட பல்வேறு தெய்வங்கள், தேவர்களால் வழிபடப்பட்டது திருமயிலை. சோமுகாசுரனால் கைப்பற்றப்பட்டு, திருமாலின் மச்ச அவதாரத்தால் மீட்கப்பட்ட வேதங்கள், தமது பெருமையையும் புனிதத்தையும் மீண்டும் பெற்றது திருமயிலையில்தான்.

bulletflo.gif
சிக்கல் திருத்தலத்தில் சக்தி வேல் பெற்ற முருகப் பெருமான், மயிலைக்கும் வந்து வழிபட்டு சிங்கார வேல் ஒன்றைப் பெற்றாராம். எனவே, இங்குள்ள முருகனுக்கு சிங்கார வேலன் என்று பெயர். இவ்வாறு தன்னை வணங்கிய முருகப் பெருமானிடம், ‘அண்ணன் விநாயகனையும் வணங்கு!’ என்று பணித்தார் ஈசன். அதன்படியே இங்குள்ள கணபதியையும் வணங்கி வழி பட்டார் கந்தவேள். இதனால் மகிழ்ந்த விநாயகர் ஆனந்தக் கூத்தாடினார். இவரே இங்கு நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.


p11a.jpg
p11.jpg
bulletflo.gif
அரக்கர் பலரைக் கொன்ற தால், ஸ்ரீராமனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இந்த தோஷம் நீங்க ஸ்ரீராமன், மயிலைக்கு வந்து கபாலீஸ்வரரை வழிபட்டு திருவிழா எடுத்தார். இன்னும் பல தேவர்களும் இங்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். இந்தத் தகவல்களை ஸ்ரீஅமிர்தலிங்கத் தம்பிரானின், ‘திருமயிலைத் தல புராணம்’ கூறுகிறது.
bulletflo.gif
காஞ்சி மகா பெரியவர் 28.9.32 அன்று சென்னையில் முதன்முதலாக பட்டினப் பிரவேசம் செய்தார். அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக் கப்பட்டது. சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருத பாடசாலையில் முகாமிட்டிருந்த காஞ்சி மகான், மயிலை கபாலீஸ்வரரின் பெருமை குறித்து விரிவான உபன்யாசம் செய்தார்.


TO BE CONTINUED

http://www.vikatan.com/astrology/article.php?nid=7657
 
Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai - Continued

Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai - Continued

முற்காலத்தில் சமண மதத்தினர் ஆதிக்கம் பெற்று திகழ்ந்த திருமயிலையில், 22-ஆம் தீர்த்தங்கரர் நேமிநாதருக்கு ஒரு கோயிலும் இருந்தது. அதனால், அப்போது இது ‘நேமிநாதபுரம்’ எனப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கடல் அரிப்புக்குப் பிறகு இங்கிருந்த நேமிநாதர் சிலை, அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் என்ற ஊருக்கும், இன்னும் பிற செப்புச் சிலைகள் வந்தவாசி அருகில் உள்ள இளங்காடு என்ற ஊருக்கும் எடுத்துச் செல்லப்பட்டடனவாம்.

bulletflo.gif
கந்த புராணம், கூர்ம புராணம் மற்றும் வராக புராணம் ஆகியன மயிலை மற்றும் ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலய மகிமைகள் குறித்து விளக்குகின்றன.

p10.jpg


bulletflo.gif
ஒரு காலத்தில் சிவபெருமானை போன்று, ஐந்து முகங்களுடன் திகழ்ந்த பிரம்மதேவன், ‘தானும் சிவனாருக்கு இணையானவனே!’ என்று கர்வம் கொண்டிருந்தான். அதை அடக்க எண்ணிய சிவனார், பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஆகாயத்தை நோக்கி இருந்த ஒன்றைக் கிள்ளி எறிந்தார். கீழே விழுந்த பிரம்ம கபாலத்தைத் கையில் ஏந்தினார். இதனால் பிரம்மன் தனது படைப்பாற்றலையும் இழந்தான். பிறகு, தன் தவறுணர்ந்த பிரம்ம தேவன் திருமயிலைக்கு வந்து, சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தான். இதனால் மகிழ்ந்த சிவனார், அவனுக்கு படைப்பாற்றலை அருளியதுடன், அவன் வேண்டுகோளுக்கு இணங்கி கபாலீஸ்வரர் எனும் திருநாமத்துடன் இங்கேயே கோயில் கொண்டார்.



bulletflo.gif
திருமயிலையில் வாழ்ந்து வந்த வணிகர் சிவநேச செட்டியார்; சிறந்த சிவபக்தர். இவரின் ஏழு வயது மகள் பூம்பாவை. ஒரு நாள் பூப்பறிக்கச் சென்ற பூம்பாவையை பூநாகம் ஒன்று தீண்டியது. அவள் இறந்தாள். பெரும் துயரத்துடன் பூம்பாவையின் உடலை தகனம் செய்த சிவநேசர், அவளின் எலும்பு மற்றும் சாம்பலை ஒரு குடத்தில் அடைத்து கன்னி மாடத்தில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் திருஞான சம்பந்தர் திருவொற்றி யூருக்கு விஜயம் செய்தார். இதையறிந்த சிவநேசர் அங்கு சென்று, ஞானசம்பந்தரை வணங்கி அவரிடம், பூம்பாவைக்கு நிகழ்ந்ததை விவரித்தார். அவர் மேல் இரக்கம் கொண்ட சம்பந்தப் பெருமான் திருமயிலைக்கு வந்தார். ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்கினார். பிறகு, பூம்பாவையின் சாம்பல் நிறைந்த குடத்தை எடுத்து வரச்செய்த ஞானசம்பந்தர், ‘மட்டிட்ட புன்னையங் கானல்...’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். மாண்ட பூம்பாவை உயிர்ப் பெற்று, 12 வயதுப் பெண்ணாக வெளி வந்தாள். இதைக் கண்டவர்கள் அதிசயித்தனர்.பெரிதும் மகிழ்ந்த சிவநேசர், தன் மகள் பூம்பாவையை மணந்துகொள்ளுமாறு திருஞான சம்பந்தரை வேண்டினார். ஆனால், சம்பந்த பெருமான் மறுத்து விட்டார்.அப்போது சம்பந்தருக்கு வயது 16. இதன் பிறகு நெடுநாள் வாழ்ந்த பூம்பாவை தொடர்ந்து சிவ வழிபாட்டில் திளைத்திருந்தாள். இறுதியில் சிவ தியானத்தில் இருந்த நிலையில் முக்தியடைந்தாள்.


p12.jpg
p12a.jpg


bulletflo.gif
முற்காலத்தில் துறைமுகப் பட்டினமாக திகழ்ந்தது மயிலை. மூன்று முறை கடல் பொங்கி, பெரும் நிலப்பகுதியை விழுங்கியதால், மயிலையின் பரப்பளவு சுருங்கி விட்டது என்கிறார்கள். புராதனமான கபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் கடற்கரை அருகில் இருந்தது. அருணகிரி நாதர் தனது திருப்புகழில் ‘கடலக் கரை திரையருகே சூழ் மயிலைப்பதிதனில் உறைவோனே’ என்று குறிப்பிடுகிறார். எனவே அவர் காலத்திலும் (கி.பி.1540) கோயில் கடற்கரை அருகிலேயே இருந்திருக்க வேண்டும் என்பதை அறியலாம். ‘பிற்காலத்தில், இந்தக் கோயில் போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்டது என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களது கருத்து’ என்று குறிப்பிட்டுள்ளார் பம்மல் சம்பந்த முதலியார். 1923-ல் கோயிலின் எஞ்சிய பகுதிகள் சாந்தோம் கடற்கரையில் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் கண்டெடுக்கப்பட்டன.


bulletflo.gif
தற்போது கோயில் இருக் கும் இடத்தில் முன்பு அருள் பாலித்தது ஸ்ரீசிங்காரவேலர் மட்டுமே என்கிறார்கள். இதற்குச் சான்றாக கபாலீஸ்வரரின் கருவறை விமானத்தை விட சிங்காரவேலரின் கருவறை விமானம் சற்றே உயரமாக இருப்பதைக் கூறுகின்றனர்.


bulletflo.gif
கி.பி.1672- இல் பிரெஞ்சுக் காரர்களுக்கும், மூர் பிரிவைச் சேர்ந்த துருக்கியர்களுக்கும் நடந்த போரின்போது பிரெஞ்சுப் படையின் ஒரு பகுதியினர் இப்போதுள்ள கோயிலில் பதுங்கியிருந்தனர். நூறாண்டுகளுக்கு முன்பு மாட வீதிகளைச் சுற்றிச் சத்திரங்களும், மடங்களுமே இருந்தனவாம். குன்றக்குடி ஆதினம், குமாரதேவர் மடம் ஆகியவையும், சித்திரச் சத்திரம் (விநாயக முதலியார் சத்திரம்) ஆகியன இன்றும் உள்ளன.


bulletflo.gif
தற்போதுள்ள ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயம், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதைக் கட்டியவர், வள்ளல் நயினியப்ப முதலியாரின் மகன் முத்தியப்ப முதலியார். கபாலீச்சரம் சுமார் 80 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலத்துடன் 2,080 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.

p12b.jpg

bulletflo.gif
கோயிலுக்கு அருகே சுமார் பெரிய திருக்குளம் அமைந்துள்ளது. இதை ‘கபாலி தீர்த்தம்’ என்பர். இதைக் கட்டியதும் முத்தியப்ப முதலியாரே.


திருக்கோயிலுக்கு அருகே திருக்குளம் ஒன்றை அமைக்க விரும்பினார் முதலியார். இதற்கான நிலத்தை அப்போது இந்தப் பகுதியை (கலச மஹால்) ஆண்டு வந்த நவாப் ஒருவர், சில நிபந்தனைகளின் பேரில் அளித்தார். அவற்றை ஏற்றுக் கொண்ட முதலியார், மூன்றே நாட்களுக்குள் இந்தத் திருக்குளத்தை அமைத்தாராம். நவாபின் நிபந்தனைகள் இன்றும் அனுசரிக்கப்படுவதாக, எஸ். நடராஜன் என்பவர், ‘மயிலை கற்பகம்’ எனும் நூலில் குறிப்பிடு கிறார்


திருக்குளத்தின் மையத்தில் உள்ள நீராழி மண்டபம் சிறப்பானது. குளத்தின் மேற்குக் கரையில், எட்டுக்கால் மண்டபம் அருகில் ஜ்யேஷ்டாதேவியின் சிலை உள்ளது. குளத்தின் வடமேற்கு மூலையில் ‘மூன்று கால்’ மண்டபமும், தென் கரையில் ‘ஞானப்பால்’ மண்டபமும் வடக்கில் சிவலிங்க மண்டபமும் உள்ளன. கிழக்கில் உள்ளது மாட்டுப் பொங்கல் அன்று அம்மன் நீராடும் இடமாகும். மேற்குக் கரையில் உள்ள சிறு மண்டபங்களில் அறுபத்துமூவர் விழாவன்று சம்பந்தருக்கும், சிவநேசருக்கும் அபிஷே கம் நடைபெறுகிறது.


இந்தக் குளத்தில் தைப்பூசத்தன்று நடைபெறும் தெப்போற்சவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். பங்குனி- பிரம்மோற்சவத்தின்போது, இந்தக் குளத்தின் மேற்குக் கரையில்- திருஞானசம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பித்த வைபவமும், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகின்றன.

 
Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai - Continued

Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai - Continued




bulletflo.gif
கலிங்க தேச அரசன் தருமனின் மகன் சாம்பவன் என்பவன், தனது பெரும் பாவங்கள் தீர இங்கு வந்து, பங்குனி உத்திரத்தன்று இந்தத் தீர்த்தத் தில் நீராடி, ஸ்ரீகபாலீஸ்வரரை தொழுது, முக்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது. ‘இந்தக் குளம் உட்பட மயிலையின் பிற தீர்த்தங்களிலும் நீராடினால், இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறலாம்!’ என்கிறது ‘தீர்த்தச் சருக்கம்’ எனும் நூல்.


bulletflo.gif
ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் ராஜ கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் உயரம் சுமார் 40 மீட்டர். ஏழு நிலைகள் மற்றும் ஒன்பது கலசங்கள் கொண்டு திகழும் இந்த கோபுரம், கி.பி. 1902-ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டதாகக் கூறுவர். இந்த கோபுரம், 1947-ஆம் ஆண்டு, அப்போதைய கோயில் அறங்காவலர் அரசூர் பார்த்தசாரதி முதலியாரால் திருப்பணிகள் செய்யப் பெற்று, 1948-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாம். இதன் பிறகு, 8.7.1982, 6.6.1996, மற்றும் 30.8.2004 என மும்முறை கும்பாபிஷேகம் நடைபெற்றபோதும் மீண்டும் கோபுரம் சீர்திருத்தம் செய்யப் பெற்றது.


bulletflo.gif
2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த கபாலீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகத் திருவிழாவில் சிருங்கேரி ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ தொண்டை மண்டல ஆதீனம், திருப்பனந்தாள் முத்துக்குமார சுவாமி தம்பிரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
p13a.jpg

bulletflo.gif
கபாலீஸ்வரர் ஆலயத்தின் ராஜகோபுரம் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்தது. இந்த கோபுரத்தில்- பகீரதன் தவம், அட்ட வீரட்டங்கள், காளி கர்வபங்கம், திருஞானசம்பந்தர், அப்பர், அப்பூதியடிகள் மற்றும் கண்ணப்பர் ஆகியோரது வாழ்க்கைச் சம்பவங்கள், பிட்டுக்கு மண் சுமந்த ஈசனின் திருவிளையாடல்கள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட புராணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த கோபுரத்தில் ‘சிவ பராக்கிரமம்’ எனும் நூல் குறிப்பிடும்- மச்சாரி, கூர்மாரி, நரசிம்மாரி ஆகிய சிவ வடிவங்களின் சிற்பங்களும் உண்டு.


ராஜகோபுரத்தில் இடம் பெற்றிருக்கும் சிற்பங்களில் குறிப்பிடத் தக்கது ரிஷப குஞ்சரம். ஒரு பக்கம் காளை, மறு பக்கம் யானை உருவில் காட்சி தரும் அபூர்வ சிற்பம் இது. இதில் காளையின் மீது சிவ- பார்வதி, யானையின் மீது திருமகள்-மகாவிஷ்ணு அமர்ந் திருப்பது போல் இதை வடிவமைத்துள்ளனர். காளை மீது அமர்ந்த நிலையில் தன்னிடம் திருவோட்டை நீட்டும் ஈசனாருக்கு மகாலட்சுமி அன்னமிடுவது போன்ற காட்சி அற்புதம். உமையவளின் மடியில் விநாயகர் அமர்ந்திருக்கிறார்.



இந்த ராஜ கோபுரத்துக்கு நேர் கிழக்கில், 16 தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. உலாத் திருமேனிகள் வெளியில் உலா செல்லுமுன் இதில் தங்கிச் செல்வர்.
p14.jpg


bulletflo.gif
ஸ்ரீகபாலீஸ்வரர் சந்நிதிக்கு நேர் எதிரில், சுமார் 8 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலத்துடன், நான்கு நிலைகள் மற்றும் ஏழு கலசங்களுடன் திகழ்கிறது மேலைக் கோபுரம். இதன் உயரம் சுமார் 30 மீட்டர்.

.

bulletflo.gif
ராஜகோபுர வாசல் வழியே உள்ளே சென்றால், முதலில் நர்த்தன கணபதி சந்நிதி. ஒரு காலைத் தூக்கிக் கூத்தாடும் கோலத்தில் காட்சி தருகிறார். ஜலந்தராசுரனை அழிக்க ஈசன் உபயோகித்த சக்ராயுதத்தை, அவரிடம் வேண்டிப் பெற்றார் மகா விஷ்ணு. ஒரு முறை இந்த ஆயுதத்தை சிவனார் மீதே மகாவிஷ்ணு பிரயோகிக்க, சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கபால (தலைகளால் கோக்கப்பட்ட) மாலையில் உள்ள தலை ஒன்று, அதை விழுங்கியது. சக்ராயுதத்தை மீட்டுத் தருமாறு வேண்டினார் நாராயணன். அவரிடம், ‘விநாயகரைச் சிரிக்க வைத்தால், அதை மீண்டும் பெற லாம்!’ என்றார் சிவபெருமான். அதன்படி மகாவிஷ்ணு கூத்தாடினார். இதனால் மகிழ்ந்த விநாயகர், தானும் கூத்தாடியபடியே சக்ரா யுதத்தை திருப்பித் தந்தாராம். இப்படி கூத்தாடும் கோலத்திலேயே இந்த நர்த்தன விநாயகர் இங்கு அருள் பாலிப்பதாக ஐதீகம்.


அடுத்தது ஸ்ரீஉண்ணாமலையாள் சமேத ஸ்ரீஅண்ணாமலையார் சந்நிதி. தெற்குப் பிராகாரத்தில் ஸ்ரீசிங்காரவேலர் சந்நிதி உள்ளது. உள்ளே ஆறு முகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் ஸ்ரீசிங்காரவேலர். இவருக்கு இரு புறமும் யானையின் மீது அமர்ந்த கோலத்தில் வள்ளி- தெய்வானை தேவியர் உள்ளனர்.
இந்த சந்நிதியின் முன்புறம் 14 தூண்கள் கொண்ட ஒரு மண்டபம். இதில் கொடி மரம், மயில் வாகனம் மற்றும் பலி பீடம் ஆகியன உள்ளன.


ஸ்ரீசிங்காரவேலரை- பூரணீ மாமகன், துடியேற்ற செங்கைக் கபாலீசர் மைந்தன், விமலையன் பால் பெற்ற திருமகன், வாலிச் சரவணன், குசலர்க்கதிபதி, சங்கரன் பாலகன், மீனேறுயரிய காமார்க்கு மைத்துனன், விடையர் திருமகன், கார்த்திகைப்பால் முலைமாரியுண் டருள் சிங்கார வேலவர், கார்த்திகையார் மைந்தன், கந்தன், சேந்தன், முடுகிய மஞ்ஞையை யூர்ந்தருள் ஆறுமுகன், ஆறுமாமுகன் என்றெல்லாம் போற்றுகிறார் திருமயிலைக் கோவையூர் அம்பலவாணக் கவிராயர். அருணகிரிநாதர், சிங்காரவேலரை சிறப்பித்து பல திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
ஸ்ரீசிங்காரவேலர் சந்நிதி தவிர, தெற்குப் பிராகாரத் தில் வடக்கு நோக்கி ஸ்ரீபழநியாண்டவர் மற்றும் வாயிலார் நாயனார் சந்நிதிகள் உள்ளன. யோக நிலை யில் அமர்ந்திருக்கும் வாயிலார் நாயனாரது சந்நிதி, அம்பாள் சந்நிதியை நோக்கி அமைந்துள்ளது தனிச் சிறப்பு. இந்த சந்நிதி 1911-ல் கட்டப்பட்டது என்பர்.
p15.jpg
இதையடுத்து ‘பன்னிரண்டு கால்’ மண்டபம். நவராத்திரியின்போது ஸ்ரீகற்பகாம்பாள் இங்கு கொலுவிருப்பதை தரிசிக்கலாம். பிரதோஷத்தின்போது, இந்த மண்டபத்தில் இருந்துதான் உற்சவமூர்த்தி திருவுலா கிளம்புவார். விழாக் காலங்களில் சமயப் சொற் பொழிவுகளும் இங்கு நிகழ்த்தப் பெறுகின்றன. இந்த மண்டபம் கற்பகாம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ளது. அருகே வில்வமரமும், நூலகமும் உண்டு. மேற்கு பிராகாரத்தில் அருணகிரிநாதருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. இதை அடுத்து மேற்கு கோபுர வாசல். இதன் வழியே சென்று கோயில் திருக் குளத்தை அடையலாம். இந்தக் கோபுர வாயிலின் வடப் பக்கம் ஸ்ரீகற்பக விநாயகர்; தெற்குப் பக்கம் ஸ்ரீபாலமுருகன்.


இந்த பிராகாரத்தில் ஸ்ரீகபாலீஸ்வரர் சந்நிதிக்கு நேர் எதிரே ஓங்கி உயர்ந்த கொடி மரம். அருகே பூம்பாவை- திருஞானசம்பந்தர் சந்நிதி. இந்தச் சந்நிதிக்கு எதிரில் பெரிய கோயில் மணி உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் தென்கிழக்கு மதிலையட்டி பசு மடம், வாகன அறைகள் மற்றும் மடப்பள்ளி ஆகியன உள்ளன. அந்த வரிசையில் கிழக்குப் பகுதியில் ஆலய அலுவலகம், யாக சாலை மற்றும் கல்யாண மண்டபம் ஆகியன உள்ளன.

p15a.jpg

bulletflo.gif
வடக்குப் பிராகாரத்தில் உள்ள முக்கியமான சந்நிதி ஸ்ரீபுன்னைவனநாதர் சந்நிதி. அருகில் ஸ்தல விருட்சமான புன்னை மரம். இந்தச் சந்நிதியில் உள்ள சிவ லிங்கத்தை, அம்பாள் மயில் உருக் கொண்டு பூஜிப்பதை தரிசிக்கலாம்.

ஒரு முறை பார்வதிதேவிக்கு ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தார் சிவபெருமான். அப்போது அங்கு தோகை விரித்தாடிய மயில் ஒன்று அம்பிகையை ஈர்த்தது. இதனால் மந்திர உபதேசத்தில் இருந்து அவளின் கவனம் சிதறியது. சிவனார் கடும் கோபம் கொண்டார். ‘‘மயிலுருக் கொண்டு மண்ணுலகம் செல்வாயாக!’’ என்று உமையவளை சபித்தார்.


பதறித் துடித்த தேவியார், பெருமானிடம் சாப விமோசனம் வேண்டினார்; பலனில்லை. சாபத்தின்படி மயில் உருவம் கொண்டு பூலோகம் வந்த பார்வதிதேவி, தொண்டை நாட்டை அடைந்தாள். அங்கு புன்னை மரம் நிறைந்த சோலை ஒன்றில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டாள். இதனால் மகிழ்ந்த சிவனார் அவளுக்கு அருளி ஆட்கொண்டார். மேலும், ‘‘நீ மயிலாக வலம் வந்த இந்த இடம் மயிலை என்று பெயர் பெறும். நீ இங்கு கற்பகவல்லியாக அருள்பாலிப்பாய்!’’ என்றும் அருளினார். அதன்படி அன்னை இங்கு ஸ்ரீகற்பகவல்லியாக- கற்பகாம்பாளாக அருள்பாலிக்கிறாள். இந்த புராணச் சம்பவத்தை விளக்கும் விதம் அமைந்துள்ளது ஸ்ரீபுன்னை வனநாதர் சந்நிதி. இந்தச் சந்நிதிக்கு விமானம் உண்டு. புன்னை மரத்தின் அருகில் மயில் வளர்ப்பிடம் ஒன்றும் அமைந்துள்ளது.



TO BE CONTINUED
http://www.vikatan.com/astrology/article.php?nid=7657
 
Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai - Continued

Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai - Continued




ஈசான மூலையில் சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி. காக வாகனத்தின் மீது வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் சனி பகவான். இதன் அருகில் உற்சவமூர்த்தியரது கொலு மண்டபம்.


கிழக்கு சுற்றில் திரும்பினால் ஸ்ரீசுந்தரேஸ்வரர் சந்நிதி, நவக்கிரகங்கள், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் ஜெகதீஸ்வரர் சந்நிதிகள் ஆகியன உள்ளன.


மகா மண்டபத்தின் தெற்குப்புறத் தூணில் ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.

bulletflo.gif
கற்பகாம்பாளை வணங்கிய பிறகே ஸ்ரீகபாலீஸ் வரரை தரிசிக்கச் செல்வது இங்குள்ள மரபு. ஸ்ரீகபாலீஸ்வரர் சந்நிதிக்கு இடப் புறம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீகற்பகாம்பாள் சந்நிதி. வேண்டுவோருக்கு வேண்டியதைத் தரும் தேவலோக மரமான கற்பகத் தருவைப் போன்று பூலோகவாசி களுக்கு வேண்டிய வரம் தருவதால், இந்த அம்பிகைக்கு ஸ்ரீகற்பகாம்பாள் என்று திருநாமம். நின்ற திருக் கோலத்தில் அபய-வரத ஹஸ்தத்துடன் அழகே உருவாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீகற்பகாம்பாள். சந்நிதியின் தென் மேற்கில் பள்ளியறை உள்ளது.

p16.jpg
bulletflo.gif
வெள்ளிக் கிழமைகள் மற்றும் சில விசேஷ தினங்களில் மலர்களால் ஆன பூப்பாவாடைகளை அணிந்து காட்சித் தருகிறாள் ஸ்ரீகற்பகாம்பாள். மேலும் வெள்ளிக்கிழமைதோறும் மாலை வேளையில் அன்னை கற்பகாம்பாளுக்கு தங்கக் காசு மாலையும், வைரக் கிளி தாடங்கமும் அணிவிக்கப்படுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு.


bulletflo.gif
அம்பாள் சந்நிதியை அடுத்து மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது ஸ்ரீகபாலீஸ்வரர் சந்நிதி. நுழைவாயிலின் வலப் புறம் விநாயகர் திருவுருவம். சந்நிதிக்குள் நுழைந்ததும் வட புறத்தில் வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீஆறுமுகர். கிழக்கு நோக்கியுள்ளார். அடுத்து தெற்கு நோக்கிய ஸ்ரீநடராஜர். இவர் அருகில் ஸ்ரீசிவகாமி மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர். நடராஜருக்கு எதிரில் வடக்கு கோஷ்டத்தில் ஸ்ரீதுர்கை காட்சியளிக்கிறாள். இந்த தேவிக்கு செவ்வாய்க் கிழமை- ராகு கால வேளையில் (பிற்பகல் 3:00 முதல் 4:30 வரை) ‘ராகு கால துர்கா பூஜை’ சிறப்புற நடைபெறுகிறது.


வடக்கு கோஷ்டத்தில் அடுத்து, மாடம் ஒன்றில் தரிசனம் தரும் பிரம்ம தேவர். ஸ்ரீசண்டேஸ்வரர் சந்நிதி. ஸ்ரீகபாலீஸ்வரர் சந்நிதியின் இந்த வடக்குச் சுற்றில் ஸ்ரீசந்திரசேகரர், சுக்கிரவார அம்மன், வள்ளி- தெய்வானை சமேத முருகர், பிட்சாடனர், மோகினி, குண்டோதரன், அஸ்திர தேவர், விநாயகர், வீரபாகு மற்றும் சுமித்திரத் தொண்டர் ஆகியோரது விக்கிரகங்களையும் தரிசிக்கலாம்.

கருவறை கிழக்குச் சுற்றில்- மேற்கு நோக்கிய சிவலிங்கம் ஒன்றும் ஐந்து தலைப் பாம்பு படம் விரித்து குடை பிடிக்க அதன் கீழ் மற்றொரு சிவலிங்கமும் உள்ளன. சிவன் சந்நிதிக்குப் பின்புறம் லிங்கோத்பவர் உள்ளார். தொடர்ந்து ஸ்ரீவிநாயகர், வீரபத்திரர், மற்றும் ஒரு சிவலிங்கம் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையை வலம் வரும் வடக்கு மற்றும் கிழக்குச் சுற்றில் அறுபத்து மூன்று நாயன் மார்களின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
p17.jpg


bulletflo.gif
பொதுவாக சிவாலயங்களில் அறுபத்து மூவருக்கு கல்லால் ஆன விக்கிரகஙகள் இருப்பதைக் காணலாம். ஆனால், அவர்களுக்கு ஐம்பொன்னாலான விக்கிரகங்களும் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இருக்கின்றன.


bulletflo.gif
கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகர் காட்சி தருகின்றனர். அடுத்து, மேற்கு சுற்றில் கிழக்கு நோக்கியவாறு ஸ்ரீசோமாஸ்கந்த மூர்த்தி உள்ளார்.



bulletflo.gif
கருவறையில் மேற்கு நோக்கிய லிங்கத் திருமேனியராக காட்சி தருகிறார் ஸ்ரீகபாலீஸ்வரர். பிரம்மனின் ஒரு தலையைக் கொய்த சிவனார், பிரம்ம கபாலத்தை தன் கையில் ஏந்தி தரிசனம் தர, அவரை முப்பத்து முக்கோடி தேவர்களும் ‘கபாலீஸ்வரர்’ என அழைத்து வழிபட்டனராம். ‘ஊழிக் காலத்தில் அனைத்தும் தன்னிடத்தில் ஒடுங்க, உலகெல்லாம் உணர்ந்து ஓதுவதற்கு அரியவனான சிவபெருமான், கையில் கபாலம் (மண்டையோடு) தாங்கித் தனித்திருக்கிறார். இந்தக் கோலத்தில் ‘கபாலீசன்’ என்ற நாமம் கொண்டார்!’ என்றும் கூறுவர். இவரை புன்னை வனத்து ஈசன், வேத நகரினான், சுக்கிர புரியான், கபாலீச்சரத்தினான், பூம்பாவை ஈசன், புன்னை வன மயூரநாதன், கபாலி மாநகரான் என்றெல்லாம் போற்றுவர்.


மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் இந்த லிங்கப் பெருமானை சத்யோஜாத அம்சத்தினர் என்பர் (சிவபெருமானின் ஐந்து திருமுகங்களில் மேற்கு நோக்கியது சத்யோஜாத திருமுகம்.) தன்னை வழி படுவோருக்கு உடனே காட்சி தந்து அருள் வழங்கும் ஈசன் இவர் என்கிறார்கள். சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளில் நவீன குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. ப மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள காளை, மயில், யானை, ஆடு மற்றும் கிளி போன்ற வாகனங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை; வேலைப்பாடு மிக்கவை. இந்தக் கோயிலுக்கு தங்க ரதமும் உண்டு.


bulletflo.gif
ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு மன்னர்களும் வள்ளல்களும் கொடைகள் வழங்கிய விவரங்களைக் குறிக்கும் கல்வெட்டுகளையும் இங்கே காணலாம்.

p17c.jpg
p17a.jpg
bulletflo.gif
கபாலீஸ்வரர் கோயிலில் 5 கால பூஜை நடை பெறுகின்றன. அவை: கோபூஜை - திருப்பள்ளியெழுச்சி காலை 5:00 மணி, வைகறை பூஜை- 6:00 மணி, கால சந்தி- 8:00 மணி, உச்சி காலம்- 11:00 மணி, சாயங்காலம் பூஜை- 5:00 மணி, இரண்டாவது காலம்- மாலை 6:30 மணி, அர்த்த ஜாம பூஜை - 9:00 மணி. விழா நாட்களில் பூஜை காலம் மாறுதல் அடையும். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5.00 முதல் பகல் 12:30 மணி வரை. மாலை 4.00 முதல் இரவு 9:30 மணி வரை.

bulletflo.gif
இங்குள்ள திருக்குளத்தில் நீராடி கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் தரிசித்தால் பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.



bulletflo.gif
இங்கு வந்து ஸ்ரீகற்பகாம்பாளையும் ஸ்ரீகபாலீஸ்வர ரையும் தரிசித்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்; சாப விமோசனம் கிட்டும்.


bulletflo.gif
திருமணத் தடை உள்ளவர்கள், மயிலை ஸ்ரீகற்பகாம்பாளுக்கு, தங்கள் சக்திக்கு ஏற்ப, புடவை சாத்தி பூஜித்து வழிபட்டால், தடைகள் யாவும் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.



bulletflo.gif
இங்குள்ள ஸ்ரீசனீஸ்வரருக்கு எள் தீபம் மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தின் பல்வேறு பிரச்னைகள் தீரும்.


bulletflo.gif
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து ஸ்ரீசிங்காரவேலரை தரிசித்து வழிபட்டால் தோஷம் நீங்கி நலம் பெறலாம். ப திருமயிலையின் கிராம தேவதையாக ஸ்ரீகோல விழி அம்மனை குறிப்பிடுவர். இந்த அம்மனை பிடாரி, ஊர்க் காளி, பத்திரகாளியம்மன் என்றும் அழைக்கின்றனர்.
ஆண்டுதோறும் இந்த அம்பிகைக்கு நடைபெறும் 1008 பாற்குட விழாவின்போது, அந்த பாற்குடங்களை கபாலீஸ்வரர் ஆலயத்தில் வைத்து வழிபட்ட பிறகே ஊர்வலமாக கோல விழி அம்மன் கோயிலுக்குக் எடுத்துச் செல்கிறார்கள்.

bulletflo.gif
வருடம் முழுவதும் விழா காணும் கபாலீஸ்வரர் ஆலயத்தின் வார வழிபாடுகளை. ‘வார விழா’ என்றே சிறப்பிக்கின்றனர்.


அவை: வியாழக் கிழமை- தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனை. வெள்ளிக் கிழமை- கற்பகாம்பாளுக்கு வெள்ளித் தொட்டிலில் பிராகார உற்சவம். அப்போது அம்மனை அலங்கரித்து விமானத்தில் வைத்து வேத பாராயணம் முழங்க தேவார ஓதுவார் மற்றும் மேள- தாளத்துடன் உள் பிராகாரத்தை மூன்று முறை வலம் வருவர்.


ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையில் கற்பகாம்பாளின் பிராகார உற்சவத்துடன், ஊஞ்சல் உற்சவமும் சிறப்பாக நடைபெறும்.


bulletflo.gif
கபாலீஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாக்கள்: சித்திரை- சித்ரா பௌர்ணமி; வசந்த உற்சவம், வைகாசி - லட்ச தீபம்; விசாகம்; ஞானசம்பந்தர் விழா 10-ஆம் நாள்; ஆனி - 1008 சங்காபிஷேகம் (கும்பாபிஷேக திரு நட்சத்திரம்); பவித்ரோத்சவம்; ஆனித் திருமஞ்சனம், ஆடி - ஆடிவெள்ளி 5 வாரம்; பன்னிரு திருமுறை 12 நாள் விழா, ஆவணி - விநாயகர் சதுர்த்தி; லட்சார்ச்சனை, புரட்டாசி - நவராத்திரி விழா; நிறைமணிக் காட்சி, ஐப்பசி - கந்தர்சஷ்டி விழா 6 நாள்; சிங்காரவேலர் லட்சார்ச்சனை; ஐப்பசி திருவோணத்தன்று ஸ்ரீராமன், கபாலீஸ்வரரை வணங்கி வழிபட்டு அமுதூட்டிய ஐதீக விழா, கார்த்திகை - கார்த்திகை சோமவாரம்; சங்காபிஷேகம் 5 வாரம்; கார்த்திகை தீபம்; சுவாமி லட்சார்ச்சனை, மார்கழி - உஷத்கால பூஜை; திருவெம்பாவை 10 நாள் விழா; ஆருத்திரா தரிசனம், தை - அம்பாள் லட்சார்ச்சனை; தெப்பத் திருவிழா 3 நாள், மாசி - மகா சிவராத்திரி; மாசி மகம் கடலாட்டு விழா, பங்குனி- பிரம்மோற்சவம் 10 நாள்; விடையாற்றி 10 நாள்.


bulletflo.gif
ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்களில் குறிப்பிடத் தக்கவை: அறுபத்து மூவர் விழா, அதிகார நந்தி சேவை மற்றும் தேரோட்டம் ஆகியன.


bulletflo.gif
பங்குனித் திருவிழாவில் எட்டாம் நாளன்று அறுபத்து மூவர் விழா நடைபெறுகிறது. அன்று சூலம் ஏந்தியவராக சிவபெருமான் பவனி வர அவருக்கு வலப் புறம் கற்பகாம்பாள், இடப் புறம் வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசிங்காரவேலர் உடன் வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து பல்லக்குகளில் ஒருவர் பின் ஒருவராக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் (பல்லக்கு ஒன்றுக்கு நான்கு நாயன்மார் வீதம்) பவனி வருவது கண் கொள்ளாக் காட்சி.


மயிலை- திருவள்ளுவர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும் திருவள்ளுவர் உற்சவரும் இதில் கலந்து கொள்வது சிறப்பு! விழாவின்போது மயிலையின் பல பகுதி களிலும் அன்னதானம் நடைபெறும்.


இந்த விழாவைச் சிறப்பித்து இயற்றப்பட்ட, ‘திருமயிலை அறுபத்து மூவர் வழிநடைச் சிந்து’ (1,888-ஆம் ஆண்டு) எனும் நூல் ஒன்றும் உள்ளது.
p16.jpg
bulletflo.gif
இங்கு ‘திருமயிலைச் சிங்காரவேலர் திருப்புகழ்ச் சபை’ 1970-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.



bulletflo.gif
நவராத்திரி விழாவின்போது ஒன்பது நாட்களும் ஒவ்வொரு கோலத்தில் ஸ்ரீகற்பகாம்பாள் கொலுவிருப்பது தரிசிக்க வேண்டிய ஒன்று.

முதல் நாள்- கற்பகாம்பாள் அன்ன வாகனத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருள்கிறாள். 2-ஆம் நாள்- கௌரி அலங்காரம்; காமதேனு வாகனம், 3- ஆம் நாள்- சரசுவதி அலங்காரம், 4-ஆம் நாள்- பத்மாசினி அலங்காரம்; நாக வாகனம், 5-ஆம் நாள்- மகேஸ்வரி அலங்காரம்; இடப வாகனம், 6-ஆம் நாள்- ராஜராஜேஸ்வரி அலங்காரம், 7-ஆம் நாள்- ஸ்ரீமீனாட்சி அலங்காரம்; குதிரை வாகனம், 8-ஆம் நாள்- ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி அலங்காரம், 9-ஆம் நாள்- கம்பா நதி தீரத்தில் சிவபூஜை செய்யும் காமாட்சி அலங்காரம். இந்த ஒன்பது நாட்களும் ஸ்ரீகற்பகாம்பாள், கோயில் பிராகாரத்தை வலம் வந்து, யதா ஸ்தானத்தில் எழுந்தருள்வாள்.


bulletflo.gif
ஸ்ரீகபாலீஸ்வரருக்கு கார்த்திகை நான்கு சோமவாரங்களிலும் 108 சங்கு அபிஷேகமும் ஐந்தாம் சோமவாரம் 1008 சங்கு அபிஷேகமும் நடைபெறுகின்றன.



bulletflo.gif
பாபநாசம் சிவன், மார்கழி மாதத்தில் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் மாட வீதிகளில் பஜனை பாடி, கபாலீஸ்வரரின் மகிமையை தனது வாழ்நாள் வரை பரப்பினாராம்.

இவர், ஸ்ரீகபாலீஸ்வரர் மற்றும் ஸ்ரீகற்பகாம்பாள் மீது பல கீர்த்தனை களைப் பாடியுள்ளார்.
அவற்றுள்- மோகன ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘காபாலி கருணை நிலவு பொழிவதன மதிய னொரு’ எனும் பல்லவியுடன் கூடிய கீர்த்தனை மற்றும் காம்போதி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘காணக் கண்கோடி வேண்டும். கபாலியின் பவனி’ எனத் துவங்கும் கீர்த்தனை ஆகியன பிரசித்திப் பெற்றவை ஆகும்.



தொகுப்பு: சி.எஸ். ஏகாம்பர முதலியார், மு. முருகேசன், ஆர். பழனி, சுந்தரவல்லி, சங்கரிபுத்திரன், இராமச்சந்திரன், ஆர்.ஆர். பூபதி, க. ரவீந்திரன், எம்.வி. குமார், எஸ். காந்திமதி, இரா. செயபாலன், தீபா பாலச்சந்தர், ஆர். சுப்பிரமணியன், சியாமளா ராஜகோபால், கே.என். மகாலிங்கம், இரா. கல்யாண சுந்தரம், வி. சீதாலக்ஷ்மி, செ. வரதராசன், பா. கண்ணன், தேனி முருகேசன், ஜெயலெட்சுமி கோபாலன், ஆர். மகாதேவன், ஆர். மீனாட்சி, கீதா வெங்கடேஸ்வரன், ராதா பரிமளம், எஸ். பாலச்சந்தர், சு. ராஜசேகரன்.


To Be Continued


http://www.vikatan.com/astrology/article.php?nid=7657
 
Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai - Continued

Arulmigu Sri Kapaleeswarar Temple, Mylapore, Chennai - Continued

Saints



Tirugananasambandar, the Nayanmar of the 7th Century who visited the Kapaleeswarar temple said, “The Lord of Kapalisvaram sat watching the people of Mylapore - a place of flowering coconut palms - taking ceremonial baths in the sea on the full moon day of the month of Masi.” Saint Arunagirinathar of the 15th century A.D., sang, “O Lord of Mylapore temple, situated on the shores of the sea with raging waves…” (Both the translations are from the book ‘Kapaleeswara Temple' by Lakshmi Vishwanathan).

Thirugnanasambandar has made a mention about the grandeur of the temple and festivals associated with it. The East gopuram follows the Vijayanagara style of architecture. It also houses highly damaged inscriptions belonging to the 12th and 14th Century. The speciality of this temple is that, apart from a dwajasthambam in front of the main deity, there is one more in front of the Singaravelan sannadhi. The main festival associated with it is the Brahmotsavam, in which the Arupathumoovar takes the predominant place. A lot of stone sculptures, depicting Siva in various forms are found in the pillars of the Vasantha Mandapam.


indianstemples.blogspot.com+Kapaleeswar+temple+chennai8.jpg



Karpaga Vallinin Porpathangangal


https://www.youtube.com/watch?v=QXpAR_uWW5I




http://www.templetravel.net/2013/05/kapaleeswar-temple-in-mylapore-channai.html
http://www.thehindu.com/features/do...hirumayilai-thiruvallikeni/article3422248.ece

https://apostlethomasindia.wordpres...nt-and-enduring-landmark-lakshmi-venkatraman/
 
hi
thanks....i used live in mylapore more than three decades....i was working in mylapore too...thanks for detailed info...
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top