• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Arasa mara pradhakshinam--on 16-04-2018

Status
Not open for further replies.

kgopalan

Active member
அரச மர ப்ரதக்ஷிணம் சில பஞ்சாங்கங்களில் 16-04-2018 காலை 8 மணி வரை அமாவாசை இருப்பதால் ஸோம வார அமாவாசை அரச மர ப்ரதக்ஷிணம்
செய்யலாம்.

திங்கட்கிழமை அன்று அமாவாசை வரும் நாட்களில் இந்த அரச,வேப்ப மரத்தை காலையில் சுற்றி வர வேண்டும்.ஓஜோன் அதிகமுள்ள காற்று கிடைக்கிறது .108 முறை ப்ரதக்ஷிணம்வர வேண்டும்,நேரம் இல்லாதவர்கள் முடிந்த வரை சுற்றி விட்டு செல்லலாம்.



நேரம் உள்ளவர்கள் ஆண்கள்,பெண்கள் எல்லோரும் சுற்றலாம்.அரச மரத்திற்கு அடியில் உட்கார்ந்து 16உபசார பூஜை செய்துவிட்டு 108சுற்றுகள் சுற்றவேண்டும்..ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு அதிரசம் ,போட்டுகொண்டுவந்தால் எண்ணிக்கை சரியாக அமையும்.சுற்றும்போது




மூலதோப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே, அக்ரதஹ சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நமஹ எந்று சொல்லி கொண்டேசுற்றலாம்.




மரங்களின் தலைவனான அரச மரமே உன் அடிபகுதியில் ப்ரஹ்மாவாகவும்,மத்தியில் விஷ்ணுவாகவும்,கிளை பகுதிகளில் சிவனாகவும் காக்ஷியளிக்கும் உனக்கு நமஸ்காரம் என்று தமிழ் அர்த்தம்






அக்ஷிஸ்பந்தம்,புஜஸ்பந்தம்,துர் ஸ்வப்நம்,துர் விசிந்தநம்,சத்ரூணாம் ச ஸமுத்பந்நம்அசுவத்த ஸமயஸ்வமே. இதன் அர்த்தம்


தோள்கள்,கண்கள்,கைகள் காரணமில்லாமல் துடித்தல் ,கெட்ட ஸ்வப்ணம்,மனதில் கெட்ட எண்ணம்,எதிரிகளால்,துன்பம் ஆகியவற்றிலிருந்து அரச மரமே என்னை காப்பாற்றவும்.






பிறகு புநர் பூஜை செய்துவிட்டு வாத்யார் தக்ஷிணை கொடுத்து விட்டு அதிரசம் அல்லது எதோ ஒரு பக்ஷணத்தை எல்லோருக்கும் விநியோகம் செய்ய வேண்டும்.




விருதமாக செய்பவர்கள் குறைந்தபக்ஷம் 13வருடம் செய்ய வேண்டும்.உத்தியாபநம் செய்யவேண்டும் .இன்று ஒரு நாள்மட்டும் பஞ்சு தொடக்கூடாது. பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள் சாப்பிடக்கூடாது.




முதன் முதல் ஆரம்பிக்கும் போதும்,உத்யாபநம் செய்யுமன்றும் அமாவாசை திதி திங்கட்கிழமை அன்று பூரணமாக இருக்க.வேண்டும்.
 
Status
Not open for further replies.
Back
Top