• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Aja Ekadesi 2023

அஜ ஏகாதசி 2023 : இந்த விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் ?

ஆவணி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசியை அஜ ஏகாதசி என்று அழைக்கிறோம். இந்துக்களின் மிக முக்கியமான விரதங்களில் ஒன்றான ஏகாதசி நாளில் உபவாசமாக இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. பெருமாளுக்குரிய மந்திரங்களை நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும்.

அஜ ஏகாதசி சிறப்புகள்:

ஏகாதசி விரதம், புண்ணிய பலன்களை தரும் விரதம் என்பது அனைவரும் அறிந்தது தான். மகாவிஷ்ணுவின் அருளை பெறுவதற்காக இருக்கப்படும் ஏகாதசி விரதத்தின் பலன் பல பிறவிகள் தொடர்ந்து வரும் என சொல்லப்படுகிறது. ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகளில் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், சிறப்பும், தனித்தனியான பலன்களும் உண்டு.
ஏகாதசி விரதமே சிறப்பானது என்றாலும், இது குறிப்பிட்ட மாதங்களில் வரும் போது கூடுதல் சிறப்பு பெறுகிறது. அது போல் ஆவணி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு அஜ ஏகாதசி என்று பெயர். இதை ஆனந்த ஏகாதசி என்றும் அழைக்கிறோம். இந்த நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மகிழ்ச்சி, செல்வ வளம், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து நலன்களும் கிடைப்பதுடன், இந்த பிறவியில் செய்த பாவங்கள் மட்டுமின்றி, முந்தைய பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும்.

அஜ ஏகாதசி 2023 தேதி :

அஜ ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் மோட்சம் அடைவார்கள். நேரடியாக வைகுண்ட பதவி கிடைக்கும்.இந்த விரதம் இருப்பவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்ததற்கு இணையான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அஜ ஏகாதசி இந்த ஆண்டு செப்டம்பர் 10 ம் தேதி வருகிறது. ஏகாதசி திதியானது செப்டம்பர் 09 ம் தேதி காலை 07.17 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 10 ம் தேதி இரவு 09.28 வரை உள்ளது. பாரணை செய்யும் நேரமாக செப்டம்பர் 10 ம் தேதி காலை 05.33 முதல் 08.01 வரையிலான நேரம் சொல்லப்படுகிறது.

அஜ ஏகாதசி மகிமையும் கதையும் :

இந்து புராணங்களின் படி, இந்த விரதம் மன்னர் ஹரிசந்திரனால் கடைபிடிக்கப்பட்டதாகும். உண்மையை மட்டுமே பேசுவது, எந்த நிலையிலும் நேர்மையாக இருப்பதை மட்டுமே தனது வாழ்வின் லட்சியமாக கொண்டு வாழ்ந்தவர் ஹரிசந்திரன். ஆனால் அவரது முற்பிறவி கர்மாவால் ராஜ்ஜியம், மனைவி, குடும்பம் என அனைத்தையும் பிரிந்து, காட்டில் வாழ்ந்து, இடுகாட்டில் பிணங்களை எரிக்கும் தொழில் செய்யும் நிலை ஏற்பட்டது.
ஹரிசந்திரன் ஒருமுறை, கெளதம முவிவரை சந்தித்து, தனது நிலையை விளக்கி கூறினார். அதோடு தனது நிலை மாற ஏதாவது வழி உண்டா என கெளதம முனிவரிடம் உதவி கேட்டார். அவருக்கு உதவும் பொருட்டு, அஜ ஏகாதசி விரதம் பற்றி கெளதம முனிவர் எடுத்துரைத்தார். இந்த விரதத்தின் அற்புத மகிமைகள், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் கூறினார். கெளதம முவிவர் சொன்னதை கேட்டு ஹரிசந்திரனும், அதற்கு அனைத்து முறைகளையும் பின்பற்றி அஜ ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து இழந்த தனது ராஜ்ஜியம், குடும்பம் அனைத்தையும் திரும்பப் பெற்றார். அதற்கு பிறகு தனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் ஹரிசந்திரன் விரதம் இருக்க துவங்கினார்.

அஜ ஏகாதசி விரத முறை :

அஜ ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள், அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு மரப்பலகையின் மீது பெருமாளின் படம் அல்லது சிலையையும், ஸ்ரீயந்திரத்தையும் வைத்து, பூக்கள் மற்றும் துளசி சாற்றி, நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
மாலையில் கெளதோலி நேரத்தில் பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். பஞ்சாமிர்தம், துளசி இலை, பழங்கள், பாயசம் அல்லது வீட்டில் செய்த ஏதாவது ஒரு இனிப்பு உணவை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

அஜ ஏகாதசி கதை, "ஓம் நரோ பகவதே வாசுதேவாய" மந்திரம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். விஷ்ணு மகா மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரிப்பது சிறப்பானதாகும்.

துவாதசி திதியிலேயே ஏகாதசி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஆனால் பசி பொறுக்க முடியாதவர்கள் ஏகாதசி அன்று மாலை பால், பழம் சாப்பிடலாம். மறுநாள் சாதம், மற்ற உப்பு கலந்த உணவுகளை சமைத்து சாப்பிட்டு தங்களின் விரதத்தை நிறைவு செய்த கொள்ளலாம்.

ஏகாதசி மந்திரங்கள் :

1. ஓம் நமோ பகவதே வாசுதேவாய

2. ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சகஸ்தரனாம் ததுல்யம் ராம நாம் வரனானே!!

3. ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ் கிருஷ் ஹரே ஹரே
 

Latest ads

Back
Top