ஆடிப்பூரம் திருநாள். செல்வ வளம் பெருக.. அம்மனின் அருளை பெற.. இதை தவறாமல் செய்யுங்கள்..!
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும்.
அதுபோல மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. ஆடிப்பூரம் நன்னாளில் பெருமாள் கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இன்றைய தினத்தில் அன்னையை வழிபட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்? மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்..
ஆடிப்பூர சிறப்புகள் :
ஆடி மாதத்தில் அன்னையை வழிபட்டு, அவளின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாட்களில் ஒன்று ஆடிப்பூரம் ஆகும். ஆண்டாள் அவதரித்த தினம் தான் ஆடிப்பூரம். அதாவது, ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்திலேயே பூதேவியின் அம்சமான ஆண்டாள் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டாளின் நினைவாகவே ஆடிப்பூர விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தை போல, பூரம் நட்சத்திரமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தவம் இருக்க விரும்பும் சித்தர்களும், முனிவர்களும் ஆடிப்பூர நாளில் தான் தங்களின் தவத்தை துவங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
ஆடிப்பூர நன்னாளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, சந்தன காப்பு, குங்கும காப்பு, வளைகாப்பு, வளையல் அலங்காரம் ஆகியவை நடத்தப்படுகிறது.
அம்மனுக்கு வளைகாப்பு :
அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
அதேபோல் திருமணமாகியும் குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு விரைவில் மக்கட்பேறு கிட்டும்.
ஆடிப்பூர தினத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது நன்மை மட்டுமின்றி புண்ணியத்தையும் தரும்.
அம்பிகையை தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி நிறையும்.
தீய சக்திகள் உங்களை நெருங்காது.
திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பலன் உண்டாகும்.
செல்வ வளம் பெருகும்.
குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
மறவாமல் அம்பிகையை இந்த புனித ஆடிப்பூரத் திருநாளில் வணங்கி அவர் அருள் ஆசி பெறுவோம்.