ramba= plantain fruit.
13-06-2021 ரம்பா த்ருதியை:- ஸ்ம்ருதி கெளஸ்துபம்-118 சொல்கிறது. புஷ்ப மண்டபிகா கார்யா ரம்பா ஸ்தம்போப ஶோபிதா தத்ர ஸம்பூஜயேத் தேவீம்
சக்த்யா ஸ்வர்ணாதி நிர்மிதாம் மண்டபத்தின் நடுவில் தேவி படம் அல்லது விக்கிரஹம் வைத்து அதன் நான்கு பக்கங்களும் வாழை மரம் கட்டி நிறைய வாழைபழங்களும், நெய்யில் தயாரித்த பக்ஷணங்களையும் 16 உபசார பூஜை செய்து சுவாசினிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வினியோகம் செய்ய வேண்டும்.கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி வேண்டி கொள்ளவும். ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை அன்று செய்ய வேண்டும்.
வேதேஶு ஸர்வ சாஸ்த்ரேஷு திவி பூமெள ரஸாதலே ஸ்ருதோ த்ருஷ்டஸ்ச பஹுஶோன சக்த்யா ரஹித: சிவ: த்வம் சக்திஸ், த்வம் ஸ்வதா, ஸ்வாஹா த்வம், ஸாவித்ரீ ஸரஸ்வதீ, பதீம் தேஹி ஸுதான் தேஹி க்ருஹம் தேவி நமோஸ்துதே.யோஷித: புருஷோ வாபிக்யாதம் ரம்பா விருதம் புவி பார்யாம் புத்ரம் க்ருஹம், போகான் குலவ்ருத்தி மவாப்யுனு: என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.
கணவனுடன் சேர்ந்தும் செய்யலாம், தனியாகவும் பெண்கள்/ஆண்கள் செய்யலாம். இதனால் நல்ல கணவன், நீண்ட ஆயுள்; நல்ல புத்ரன், வீடு , சுக போகங்கள், வம்ச விருத்தி கிடைக்கும். ஆண்களுக்கு நல்ல மனைவி, வீடு,குழந்தை செல்வம். சயன சுக போகம் வம்ச விருத்தி கிடைக்கும்.