Aani Theipirai Dwadasi

ஸ்ரீகூர்ம நாதரும்,ஸ்ரீகூரேசர் நாதரும்

நாளை ஆனி,தேய்பிறை துவாதசி(ஆனி 22 --06/07/21) ஸ்ரீகூர்ம ஜயந்தி.ஸ்ரீமந் நாராயணனின் தசாவதாரங்களுள்,
இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம்.
தேவர்களுக்கு அமுதம் கிடைக்க"வங்கக் கடல்கடைந்த மாதவன்",கடலைக்கடைந்த போது, மத்தாகப் பயன்படுத்திய மிகப் பெரிய கனமான மந்திரமலை வழுக்காமல்/சரியாமல் சரியாகப் பொருத்துவதற்காக தாமே ஒரு மேடை போல,கூர்ம அவதாரம்(வலிமையான ஓடு கொண்டு மூடிய ஆமை) எடுத்தார்.

ஸ்ரீகூர்ம காயத்ரி:

"ஓம் தராதராய வித்மஹே !
பாச ஹஸ்தாய தீமஹி !!
தன்னோ கூர்ம ப்ரஸோதயாத் !!"
ஸ்ரீகூர்மம்:

ஸ்ரீகூர்ம நாதப் பெருமாளுக்கு, உலகிலேயே ஒரே ஒரு தனிக்கோவில் தான் உள்ளது.ஆந்திரா/ஒரிஸ்ஸா எல்லையில்,ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து 13 கி.மீ.வடகிழக்கில் உள்ள ஸ்ரீகூர்மம் என்னும் ஒரு சிறு கடற்கரையோரக் கிராமத்தில்.

ஸ்ரீகூர்மம் கூர்மநாதருக்கும், கூரேசர் நாதருக்கும், (கூரத்தாழ்வான் ஜகதாசார்யர் என்று கொண்டாடிய ராமாநுஜர்) உள்ள மிக அற்புதமான சம்பந்தம் பற்றிப் பார்ப்போம்:

ஸ்ரீஜகந்நாதரும், ஸ்ரீகூர்மநாதரும்:

பூரி ஸ்ரீ ஜகந்நாதப் பெருமாள் கோயில் திருவாராதனை முறைகளை,ஸ்ரீபாஞ்ச
ராத்ர ஆகமப்படி மாற்ற விழைந்த ராமாநுஜருக்கு ஒத்துழைக்காத கோயில் பூஜாரிகள்(பண்டாக்கள்),ஜெகந்நாதப் பெருமாளிடம், பழைய முறையை மாற்ற வேண்டாம் என்று பிரார்த்தித்தனர்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, தங்கள் மூதாதையர் காலத்திலிருந்து பெருமாளுக்கு எவ்விதக் குறையும் இல்லாமல் பூஜை செய்து வரும் அவர்கள்,
பூஜை முறையை மாற்றினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும்,இதை எப்படியாவது பெருமாளே ராமாநுஜரிடம் தெரிவித்து அவரை மாற்ற வேண்டும் என்றும் வேண்டினர்.

ராமாநுஜர் கனவில் தோன்றியபெருமாள்,
அங்குள்ள ஆராதனை முறைகளை மாற்ற வேண்டாமென்றும் அவருக்கு
வேறு முக்கியமான கைங்கர்யம் காத்திருப்பதாகவும் கூறினார்.தம் வாகனமாகிய கருடனை ஏவி,
ராமாநுஜரை ஶ்ரீகூர்மத்தில் விட்டு விடுமாறு ஆணையிட்டார்,அவ்வாறே கருடன் ராமாநுஜரை இரவோடு இரவாக
ஶ்ரீகூர்மத்தில் விட்டு விட்டார்.காலையில் எழுந்து பார்த்த போது,தாம் ஒரு புதிய இடத்தில் இருப்பதையும்,தம் சீடர்கள் யாரும் உடன் இல்லாததையும் அறிந்தார்.
இது ஜெகந்நாதப்பெருமாளின் திருவிளையாடல் என்பதை உணர்ந்தார்.

சுற்று முற்றும் பார்த்த அவர் அருகில் ஒரு குளம் இருப்பதைக் கண்டார்.அவர்
இருக்குமிடத்துக்குப் பின்புறம் ஒரு இடிந்த கட்டிடமும்,நடுவில் செவ்வக வடிவில்,லிங்கம் போன்ற ஒரு கருங் கல்லும்,அதன் மேற்புறத்தில் ஒரு சிறிய கல் இருப்பதையும் பார்த்தார்.அந்த
ஊர்க்காரர்களிடம் விசாரித்ததில், அந்தக்கல் அங்கு பல நெடுங்காலமாக இருப்பதாகவும் சிலர் அவ்வப்போது அதை ஸ்வாமி என்று வழிபடுவதாகவும்
கூறினர்.அதை நன்றாக உற்றுப் பார்த்த தில் அதில் ஏதோ ஒரு உருவம் தெரிந்தது.
ஆனால் என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
பெருமாளுக்கு நைவேத்யம் செய்த பிரசாதத்தையே ராமாநுஜர் புசிப்பதால்,
பக்கத்தில் எங்கும் பெருமாள் கோயில் இல்லாததால்,அன்று முழுதும் அவர் உபவாசம் இருந்தார்.சோர்வாகக் கண்ணயர்ந்தவர் கனவில் அன்று இரவு மீண்டும் ஜெகந்நாதப் பெருமாள் தோன்றி தாமே "சமுத்ர மர்த்தனத்தில்"
அவதரித்த கூர்மாவதாரமாக அங்கு எழுந்தருளியிருப்பதாகக் அருளினார்.

எம்பெருமானாருக்குப், பாரதந்தர்யரான
எம்பெருமான்:

மிக மகிழ்ந்த ராமாநுஜர் கிராமத்தாரை அழைத்து அவர் கூர்மாவதாரப் பெருமாள் என்று கூற,அவர்கள் நம்ப மறுத்தனர்.ஆமைக்கும் அந்த இடத்துக் கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் சொன்னாலும்,அவர் பெருமாள் என்பதை யாரும் ஒத்துக்கொள்ள வில்லை.
கூர்மத்தின் பின்பகுதியில் நின்று கொண்டிருந்த ராமானுஜர்,பெருமாளை மனமுருகப் பிரார்த்தித்து தம் பக்கம் திரும்புமாறு வேண்டினார்.பெருமாளும் உடனே ராமாநுஜரை நோக்கி மேற்குப் பக்கமாகத் திரும்பி விட்டார்.
கிராமத்தார்கள் பெருமாளை உணர்ந்து, வணங்கி,ராமாநுஜரை மிகப் பெரிய ஆசார்யராக ஏற்றுக்கொண்டு நமஸ்காரம் செய்தனர்.பெருமாளை
ஶ்ரீ கூர்மநாதர் என்று போற்றினர்.
இன்றும் கிழக்குப் பார்த்த இந்தக்
கோயிலில்,ஶ்ரீகூர்மநாதர் மேற்கு நோக்கியே காட்சி தருகிறார்.
அதனால் இங்கு இரண்டு த்வஜ ஸ்தம்பங்கள் -ஒன்றுகிழக்கில் (பழையது),மற்றொன்று மேற்கில் உள்ளன.ஊர்க்காரர்களின் உதவியுடன் மிகப் பெரிய கோவிலைக் கட்டினார் ராமாநுஜர்.

அந்த ஊரில் பெருமாளுக்கும்,ராமாநுஜரு
க்கும் மிக விமர்சையான உற்சவங்கள் இன்றும் நடைபெறுகின்றன.

ஸ்ரீரங்கத்தில்,ஸ்ரீ கூர்மநாதர்:

ஸ்ரீரங்கத்தில் உள்ள 'தசாவதாரப்
பெருமாள்'கோயிலில், மற்ற அவதாரங்களுடன் கூர்மநாதரும் எழுந்தருளியிருக்கிறார்.வடதிருக்காவிரிக் கரையில்(கொள்ளிடம்),மேலூர் செல்லும் சாலையிலிருந்து, சற்று உள்ளே தள்ளி உள்ளது(அஹோபில மடத்துக்கு மிக அருகில்).திருமங்கை ஆழ்வார் பிரார்த்தனைக்கு இணங்க ஸ்ரீரங்கநாதர் இங்கு தசாவதாரக் கோலத்தில் காட்சி தந்தார்.அந்த வைபவத்தைக் கொண்டாட,
"தண்டமிழ் செய்த நீலனான"
திருமங்கைஆழ்வார்(அந்த நீலன் தனக்குஇனியான் எங்கள் இராமாநுசன்)
நிர்மாணித்த கோயிலே இந்த தசாவதாரக் கோயில்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
ஸ்ரீகூர்மம்--1 to 12
1ஶ்ரீ கூர்மநாதர் கோயில்
2.கிழக்கே உள்ள த்வஜஸ்தம்பம்.
3&4)மேற்குத்வஜஸ்தம்பம்(கல்வெட்டுடன்)
5&6ஶ்ரீ கூர்மநாதர்
7:உடையவர் திருநட்சிரத்தன்று அலங்கார ராமாநுஜர்
8,9: உடையவரின் 998வது(2015),திருநட்சித்திரக் கொண்டாட்டங்கள்
10ஸ்ரீகூர்மத்தில் கூர்மர்கள்/ஆமைகள்

ஸ்ரீரங்கம்:(11,12,13)
11.தசாவதாரக் கோயிலில் தசாவதாரங்கள்.
12.கூர்ம அவதாரம்.
13..இந்தக் கோயில் திருமங்கை ஆழ்வார்.

1625555330670.png

1625555339064.png


1625555347826.png


1625555357631.png


1625555366176.png


1625555373417.png


1625555385619.png


1625555394305.png


1625555402314.png
 
Back
Top