Visalakshi Ramani
Well-known member
208. வாழும் வகை அறிமின்!
வீடு, வாசல், மனைவி, மக்கள்,
மாடு, வயல், தோட்டம், துறவு...
அநித்யமானவை இவை அனைத்துமே!
நித்தியமானது இறைத் துணை ஒன்றே!
ஏகாந்தத்தில் அமர்ந்து செய்மின் சாதனை,
ஏகாக்கிரச் சித்தத்துடன் சாதிக்கும் வரையில்.
தவளையே தன் முன் வந்து குதித்தாலும்
தாவிப் பிடிக்காத பாம்பு போல் மாறுங்கள்.
படகு நீரில் கிடந்து மிதக்கலாம் - ஆனால்
படகினுள் நீர் நிரம்பி அது முழுகலாகாது.
சாதகன் உலகப் பற்றுக்களில் மிதக்கலாம்;
சாதகன் உலகப் பற்றுகளில் மூழ்கலாகாது.
பற்றுங்கள் இறைவனை ஒரு கரத்தால்;
பற்றுங்கள் உலகை மற்றொரு கரத்தால்!
மாறுங்கள் சேற்றில் மாட்டிக் கொள்ளாத மீனாக!
மாறுங்கள் நீரில் மூழ்காத தாமரை இலையாக!
மனதை நிலை நிறுத்துங்கள் இறைவனிடம்;
மற்ற கடமைகளையும் கை விட்டு விடாதீர்கள்.
நித்திய, அநித்திய விவேகம் வளர வேண்டும்
நிலையற்ற பொருட்களின் பற்றினைத் துறக்க.
அர்ப்பணம் செய்மின் அனைத்துக் கர்மங்களையும்;
சமர்ப்பணம் செய்மின் உம் மன, மொழி, மெய்களை.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
வீடு, வாசல், மனைவி, மக்கள்,
மாடு, வயல், தோட்டம், துறவு...
அநித்யமானவை இவை அனைத்துமே!
நித்தியமானது இறைத் துணை ஒன்றே!
ஏகாந்தத்தில் அமர்ந்து செய்மின் சாதனை,
ஏகாக்கிரச் சித்தத்துடன் சாதிக்கும் வரையில்.
தவளையே தன் முன் வந்து குதித்தாலும்
தாவிப் பிடிக்காத பாம்பு போல் மாறுங்கள்.
படகு நீரில் கிடந்து மிதக்கலாம் - ஆனால்
படகினுள் நீர் நிரம்பி அது முழுகலாகாது.
சாதகன் உலகப் பற்றுக்களில் மிதக்கலாம்;
சாதகன் உலகப் பற்றுகளில் மூழ்கலாகாது.
பற்றுங்கள் இறைவனை ஒரு கரத்தால்;
பற்றுங்கள் உலகை மற்றொரு கரத்தால்!
மாறுங்கள் சேற்றில் மாட்டிக் கொள்ளாத மீனாக!
மாறுங்கள் நீரில் மூழ்காத தாமரை இலையாக!
மனதை நிலை நிறுத்துங்கள் இறைவனிடம்;
மற்ற கடமைகளையும் கை விட்டு விடாதீர்கள்.
நித்திய, அநித்திய விவேகம் வளர வேண்டும்
நிலையற்ற பொருட்களின் பற்றினைத் துறக்க.
அர்ப்பணம் செய்மின் அனைத்துக் கர்மங்களையும்;
சமர்ப்பணம் செய்மின் உம் மன, மொழி, மெய்களை.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி