• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

96 tharpanam

kgopalan

Active member
23/10/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய ஷண்ணவதி தர்ப்பணம் முறைகளை எப்படி செய்வது அதை செய்யாவிடில் என்ன விதமான பாவங்கள் நமக்கு வந்து சேரும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொண்டு வருவதை மேலும் தொடர்கிறார்.*

*இந்த 96 ஷண்ணவதி தர்ப்பணங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. அதாவது அமாவாஸ்ய யுகாதி மன்வாதி சங்கராந்தி வைதிருதி வய்தீபாதம் மஹாளயம் திஸ்ரோஷ்டகாஹா இந்த எட்டு புண்ணிய காலங்களை தான் நாம் ஷண்ணவதி என்று சொல்கிறோம். இப்படியாக தர்மசாஸ்திரம் காண்பித்த வழியிலே ஒவ்வொருவரும் இந்த 96 தர்ப்பணங்களை செய்ய வேண்டும்*

*காலப்போக்கில் எப்படியோ நாம் 1 or 2 புண்ணிய காலங்களில் மட்டும் செய்வது என்று வைத்துக் கொண்டுள்ளோம். ஆகையினால் இந்த நாட்களில் என்ன ஆகிவிட்டது என்றால் நான் ஷண்ணவதியை ஆரம்பித்து செய்துகொள்கிறேன் என்று சொல்லுவதை கேட்க முடிகிறது.*

*ஷண்ணவதி தர்ப்பண முறை என்று ஒன்று தனியாக இருப்பதாக நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் வருடத்திலே 96 தர்ப்பணங்கள் நாம் செய்ய வேண்டியது அதில் சில செய்கிறோம் சில. விட்டுவிடுகிறோம். விட்டுப்போன தர்ப்பணங்களுக்கு பாவங்கள்

மிகவும் ஜாஸ்தி. முக்கியமாக பிதுர் கர்மாக்கள் எப்பொழுதும் விட்டு போகவே கூடாது. மற்ற காரியங்களுக்கு கூட கௌன காலங்கள் உண்டு. கௌன காலங்கள் என்றால் சொல்லப்பட்ட காலத்தில் அதை செய்ய முடியவில்லை என்றால் தள்ளி செய்வதற்கான ஒரு காலம் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குத்தான் கௌன காலம் என்ற பெயர்.*

*இதை அனைத்திற்குமே சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது சந்தியாவந்தனம் மே விட்டுப் போயிருந்தால் அவ்வளவு சந்தியா வந்தனங்கள் செய்ய வேண்டும். அனைத்து சந்தியாவந்தனங் களுக்கும் சேர்த்து ஒரே சந்தியாவந்தனம் என்பது கிடையாது. ஒருவருக்கு 10 சந்தியா வந்தனங்கள் விட்டுப் போயிருந்தால் பத்து பத்து காயத்ரியாக செய்து சந்தியாவந்தனம் செய்யவேண்டும். பத்து நாட்கள் சந்தியாவந்தனம் விட்டு போய் இருந்தது என்றால் மாத்யானிகம் சேர்த்து 30 சந்தியா வந்தனங்கள் செய்ய வேண்டும்.*

*ஒரு மாதம் விட்டுப் போயிருந்தால் 90 செய்ய வேண்டும் ஒரு வருடமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் சேர்த்து சேர்த்து செய்ய வேண்டும்.*

*ஆனால் இந்த பித்ரு கர்மாக்களில், ஒரு புண்ணிய காலம் விட்டு போனால் அது விட்டு போனது தான். அதை பிறகு, சேர்த்து செய்ய முடியாது. அது அமாவாசை அல்லது மாதப்பிறப்பு அல்லது தாயார் தகப்பனார்களுக்காக செய்யக்கூடியதாக வருடாந்திர ஸ்ராத்தமாக இருந்தாலும் சரி, ஆகையினாலே தான் நம்முடைய தர்மசாஸ்திரம் அதை வலியுறுத்தி காண்பிக்கிறது.*

*அதை விட்டுவிட்டால் பிதுர் கர்மாவை விட்டு விட்ட தோஷம் 1 நித்தியமாக சொல்லப்பட்ட பிர்த்தியவாயம் என்பது 2 வேதம் நமக்கு பிறப்பித்த உத்தரவை மீறுவது என்பது 3. இந்த மூன்று விதமான பாவங்களின் மூலமாகத்தான் நாம் நிறைய வியாதிகளினால் கஷ்டபட வேண்டிய சூழ்நிலைகள் வருகின்றன.*

*நித்தியம் கட்டாயம் செய்து ஆக வேண்டும், என்று தர்ம சாஸ்திரம் எதை நமக்கு காண்பிக்கின்றதோ, அதை நாம் மீறவே கூடாது. அதாவது கட்டாயம் செய்துதான் ஆகவேண்டும்.*

*யார் அதை விட்டானோ அவன் நித்தியத்தை விட்டுவிட்டான் என்கின்ற தோஷம் 1 வேதத்தை அவமானம் செய்தான் என்கின்ற தோஷம் 2. இவைகளினால் பல்வேறு நோய்களின் மூலமாக நாம் திண்டாட வேண்டி வரும். ஆனால் சில காரணங்களினால் சில புண்ணிய காலங்களில் செய்ய முடியாமல் போனால், அப்போது என்ன செய்யலாம் என்றால், அதற்காக சில மந்திரங்களை நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*

*அதாவது ஒரு புண்ணிய காலம் விட்டுப் போகிறது என்பதற்கு சில காரணங்கள் இருக்க வேண்டும். ஒரு நோய் வந்துவிட்டது அதனால் மருத்துவமனையில் நாம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறோம், அந்த சமயத்தில் சில புண்ணிய காலங்கள் வந்தால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது ஒன்று. பிறப்பு அல்லது இறப்பு தீட்டு காலங்களில் புண்ணிய காலங்கள் வந்தால், செய்ய முடியாது. அந்த சமயங்களில் வந்த புண்ணிய காலங்கள் விட்டுப் போயிருந்தால் அதற்கு என்ன செய்யலாம் என்பது ஒரு முறை.*

*செய்யமுடியும் செய்யக்கூடிய நிலைமையில் நாம் இருக்கிறோம் அப்படியும் நாம் செய்யவில்லை என்றால், மறந்து போய் விட்டது அல்லது தெரிந்தே நாம் விட்டுவிட்டோம், என்பது மூன்றாவது முறை. இப்படி மூன்று பிரிவுகள் இருக்கின்றன.*



*ஒரு தீட்டு வந்து அதனால் சில புண்ணிய காலங்களில் நம்மால் அனுஷ்டிக்க முடியவில்லை என்றால் அது பாவங்கள் கிடையாது, ஏனென்றால் அங்கே ஒரு சூட்சுமம் இருக்கின்றது.*

*ஒரு பத்து நாள் தீட்டிலே நாம் இருக்கிறோம், அப்பொழுது ஒரு அமாவாசையோ அல்லது மாதப்பிறப்பு வந்தால், அந்தப் புண்ணிய கால தர்ப்பணம் செய்யக்கூடாது. அப்பொழுது அதை விட்டு போன பாவம் வராதா என்றால் வராது.*

*ஏனென்றால் ஒரு ஜீவனை உத்தேசித்து நாம் தீட்டு காத்துக் கொண்டிருக்கிறோம். அந்த தீட்டு காப்பது நாளையே இந்த புண்ணியகாலம் செய்ததாக ஆகிவிடுகிறது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*

*நமக்கு நோய்கள் வந்து நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்தில் ஏதாவது புண்ணிய காலங்கள் வந்து அது விட்டுப் போயிருந்தால், அன்றைய தினம் மௌனமாக இருக்க வேண்டும். மருத்துவமனையில் கூடியவரையில் சாப்பிடாமலும் மௌனமாக இருக்க வேண்டும். மருந்துகள் சாப்பிடலாம் அதற்காக உறுதுணையாக ஏதாவது

ஆதாரங்கள் சொல்லப்பட்டிருந்தால் அதை சாப்பிடலாம். அதைவிடுத்து பழங்களோ பால் மற்றும் இதர பானங்களோ சாப்பிட கூடாது. அப்படி உபவாசம் இருப்பதினாலேயே அந்த விட்டுப்போன புண்ணிய காலத்தின் மூலமாக ஏற்படக்கூடிய பாவங்கள் போய்விடுகிறது.*

*தெரிந்தோ அல்லது மறந்து ஒரு புண்ணிய காலம் விட்டு போய்விட்டால் அதற்காகத்தான் நமக்கு இந்த மந்திரங்களை காண்பித்து இருக்கின்றனர். ரிக் வேதத்திலும் யஜுர் வேதத்திலும் சில மந்திரங்களை நமக்கு எடுத்து காண்பித்து இருக்கின்றன. அந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட ஆவர்த்தி ஜபம் செய்ய வேண்டும். அப்படிக் ஜபம் செய்வதன் மூலம் விட்டுப்போன பாவங்கள் விலகும்.*

*அடுத்தமுறை அந்த புண்ணிய காலம் வரும் பொழுது நாம் விழித்துக்கொண்டு அதை செய்ய வேண்டும். இந்த மந்திரங்கள் தான் இருக்கின்றது என்று நாம் வழக்கமாக செய்யக்கூடிய அமாவாசை மட்டும் செய்துவிட்டு, மற்ற புண்ணிய காலங்கள் எல்லாம் வரும்போது அந்த

மந்திரத்தை நாம் ஜெபம் செய்து கொண்டே இருக்கிறோம் என்று இருக்கக்கூடாது. ஒரு தடவை அல்லது இரண்டு தடவை விட்டுப் போனால் மட்டுமே அந்த மந்திரங்களை சொல்லலாமே தவிர, அந்த மந்திரங்களே தர்ப்பணம் செய்ததாக ஆகாது. பரிகாரங்கள் இதெல்லாம் என்ன விதமான பலன் என்றால் அதிலே வித்தியாசங்கள் இருக்கின்றன.*

*ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு பரிகாரம் என்று நமக்கு காண்பித்திருக்கிறார்கள் அந்த பரிகாரம் என்ன செய்கிறது என்றால் அதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 
Adiyen Dasan. Sriman Gopalan swamy was explained in very simple and detailed manner. our pranamam's to Swamin.
Is there any book is available with all these information. swamin If so kindly iet me(us) me know where i can get such books in Tamil text.Sorry for the trouble. This may useful to other readers and followers also.
Dasan,
K.Govindan.
 

Latest ads

Back
Top