25 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே இனி சிகரெ&#297

Status
Not open for further replies.
25 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே இனி சிகரெ&#297

25 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே இனி சிகரெட் புகைக்க முடியும்


புதுடில்லி,: சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களின் பயன்பாடு மீதான பிடியை, மத்திய அரசு மேலும் இறுக்க முடிவு செய்துள்ளது. சிகரெட் புகைப்பதற்கான வயது வரம்பை, தற்போதுள்ள, 18லிருந்து, 25ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்பட்டு, ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இதனால், புகையிலை பொருட்கள் பயன்பாட்டை குறைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.'சிகரெட், பீடி ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு, நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும்' என்ற கோரிக்கை ஏற்கனவே வலுத்து வருகிறது. இந்நிலையில், சிகரெட் மீதான வரியை, மத்திய அரசு, சமீபத்தில் அதிகரித்தது. அடுத்த கட்டமாக, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை, தற்போதுள்ள, 18லிருந்து, 25 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததும், இந்த இரண்டு முடிவுகளும் அமலுக்கு வரும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

http://www.dinamalar.com/news_detail.asp?id=1049898
 
Status
Not open for further replies.
Back
Top