• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

10 Avatars of Parasakthi

பராசக்தியின் பத்து பெரும் சக்திகள் பற்றிய பதிவுகள்

காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேசுவரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி கமலாத்மிகா ஆகியோர் பதின்பெருவித்தையர். தச என்றால் பத்து வித்யா என்றால் அறிவு எனப் பொருள்.

இந்தப் பத்து தேவிகளும் பெண்மையின் சக்தியை தாய்மை முதல் கோபம் வரை அனைத்து வடிவிலும் காட்டுபவர்கள். தசமகா வித்யா தேவிகளின் வருகை சாக்த மார்க்கத்தில் பக்தி என்ற வழியை காட்டியது.

*காளி*

பரம்பொருளின் இறுதி வடிவம். காலத்தின் தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறார். காளி என்பதற்கு 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியதிலும் விரிவாக வழங்கபட்டுள்ளது. இவரை வழிபடும் முறைகள் பல தந்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

*தாரா*

தாரா, காளி போல கருப்பாக அன்றி, நீலமாகக் காட்சி தருவாள். தாராவின் இடையில், புலித்தோலாடையும் கழுத்தில் மண்டையோட்டு மாலையும் காணப்படும். குருதி வடியும் செவ்விதழும் தொங்கிய நாக்கும் தாராவுக்கும், காளிக்குமிடையிலான இன்னோர் ஒற்றுமை. இருவரும் ஒன்றுபோலவே இருந்தாலும், தாந்திரீக நூல்கள், இருவரையும் வேறுபடுத்திக் காட்டுவதுடன், தாரா தாய்மை நிறைந்தவள் என்றும் கூறுகின்றன. எனினும், வங்காளப் பகுதியில் காளியே அதிகளவில் வழிபடப்படுகின்றாள். வழிகாட்டியாய் பாதுகாவலியாகவும் விளங்கும் தெய்வம். மோட்சத்தைத் தரும் பேரறிவை வழங்கும் ""நீல சரசுவதி" எனும் பெருந்தெய்வமும் இவளே.

*திரிபுரசுந்தரி (ஷோடசி)*

திரிபுரசுந்தரி சக்தி வழிபாட்டு முறையின் முதன்மைக் கடவுள். இலலிதை, இராசராசேசுவரி முதலான பெயர்களிலும் அழைக்கப்படுபவள், பத்து மகாவித்யாக்களில் ஒருத்தியாவாள். ஸ்ரீவித்யா என்றழைக்கப்படும் இவளது முடிந்த முடிவே ஏனைய மகாவித்யாக்கள் ஆகும். ஆதிசக்தியின் மிகவுயர் அம்சமான லலிதையே பார்வதியாகத் திகழ்கின்றாள். தாய் குழந்தையுடன் விளையாடுவது போல, லலிதை தன் அடியவர்களுடன் விளையாடுகின்றாள். மாயையின் வடிவமானதால், அவளே, மகாமாயையும் ஆகின்றாள் பேரழகி!... தாந்திரீக நெறியின் பார்வதி. "மோட்சமுக்தி" என்றெல்லாம் போற்றப்படுபவள்.

*புவனேசுவரி*

பிரபஞ்ச வடிவாய்த் திகழும் அன்னை வடிவம். புவனேசுவரி இந்து சமய நம்பிக்கைகளில் மகாவித்யா சக்தியின் பத்து அம்சங்களில் நான்காவது சொரூபமாக விளங்குகின்றாள். பௌதீக உலகின் தோற்றத்திற்கு காரணமான மகா சக்தியாக வர்ணிக்கப்படுகின்றாள். மேலும், உலகின் தீயவற்றை அழிப்பவளாகவும், நல்லவற்றை உருவாக்குபவளாகவும் போற்றப்படுகின்றாள். இவளே சரஸ்வதி, இலக்குமி, காளி மற்றும் காயத்ரி முதலான தெய்வங்களின் தாய்த் தெய்வம் என்பர்.

*பைரவி*

பைரவி என்பவர் ஒரு கொடூரமான மற்றும் திகிலூட்டும் இந்து தெய்வமும் தச மகாவித்யாக்களுள் ஒருவரும் ஆவார். அவர் கால பைரவரின் துணைவியார். பார்வதி தேவியின் அம்சமான பைரவி இந்துக்களால் வணங்கப்படுகிறாள். அஞ்சத்தகும் அன்னையின் வடிவம்

*சின்னமஸ்தா*

சின்னமஸ்தா அல்லது அரிதலைச்சி, பத்து மகாவித்யா தேவதைகளில் ஒருத்தி. தன் தலையைத்தானே அரிந்து கையிலேந்தி, மறு கையில் கூன்வாள் ஏந்திக் காட்சி தரும் மிகக் குரூரமான வடிவம் இவளுடையது. "பிரசண்ட சண்டிகை" எனும் திருநாமமும் இவளுடையதே! தன் தலையை தானே அரிந்த அன்னையின் தியாகத் திருவுருவம்.

*தூமாவதி*

தூமாவதி என்பவள் பத்து மகாவித்யாக்களில் ஒருத்தி ஆவாள். "புகைத்தேவதை" எனப்பொருள் படும் பெயர்கொண்ட இவள், அன்னைத் தெய்வத்தின் குரூரமான வடிவங்களில் ஒன்றைத் தாங்கியவள். அசிங்கமான- வயதான விதவையாக இவள் சித்தரிக்கப்படுகிறாள். அமங்கலகரமான சந்தர்ப்பங்கள், தீய சகுனங்களுக்குரிய பறவையான காகம், பீடமாதங்கள் முதலியவை இவளுக்குரியவையாகச் சொல்லப்படுகின்றன. இறப்பின் தெய்வம், விதவையாய்க் காட்சியருள்பவள்.

*பகளாமுகி*

பகளாமுகி பத்து மகாவித்யா தேவியரில் ஒருவர். தன் கையிலுள்ள தண்டத்தின் மூலம், பகளா, தன் அடியவர்களின் தீய எண்ணங்களையும் அவர்களது எதிரிகளையும் அழித்தொழிப்பதாகச் சொல்லப்படுகிறது. வட நாட்டில் "பீதாம்பரி அம்மை" என்ற பெயரில் இவள் வழிபடப்பட்டு வருகிறாள். எதிரிகளை அடக்கியாளும் தேவதை. பகளம் என்றால் கடிவாளம் எதிரிகளுக்கு கடிவாமிடுபவள்.

*மாதங்கி*

லலிதாம்பிகையின் தலைமை மந்திரிணி அம்பிகை, மதங்கரின் மகளாக பிறந்தமையால் மாதங்கி என அழைக்கப்படுகிறார். இவருக்கு ராஜ மாதங்கி, ராஜ சியாமளா என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இந்தியாவின் வடபகுதியில் சியாமளா தேவி என்று அறியப்படுகிறார். இதற்கு நீலம் கலந்த பச்சை நிறம் என்று பொருளாகும். இந்த தேவி சாக்த வழிபாட்டில் சப்தமாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்தியாக்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவள் தாந்திரீக நெறியின் கலைமகள்.

*கமலாத்மிகா*

கமலாத்மிகா என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் தசமஹாவித்யாக்களுள் ஒருவர் ஆவர். செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியான லட்சுமியாக கருதப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, ருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு தாமரையை விரும்புகின்றவள். தாந்திரீக நெறியின் திருமகள்.

1631534062805.png
 

Latest ads

Back
Top