இது ஒரு உயிருடன் பேசும் மலைக்குச் செல்வது…
அதிகாலை வெளிச்சம் தெளியத் தொடங்கும் நேரம்…
நம்மை அழைத்தது மதுரையில் இருக்கும் அழகர் மலை.
காற்று கூட அங்கே ஒரு பாட்டு போல… மரங்களின் வீசும் ஒலி ஒரு மந்திரம் போல…
முதலில், "லூப்பர் கங்கை" தீர்த்தத்தில் குளித்து, நம்முள்ள எல்லா அழுக்குகளும் போய் தூய்மை அடைகிற மாதிரி ஒரு நிம்மதி...
அந்த பனிக்குளிர் நீர் நம்மை விழிப்பிக்கிறது.
பின், மலையின் மேல் ஏறி செல்லும் பாதை…
மனதில் ஒரு வாசல் திறக்கிறது — இந்தப் பாதை இறைவனின் அடியெடுத்து செல்லும் பாதை! காற்றின் சத்தம் கூட நமக்கே பாட்டு போல் கேட்கும்!

முதல் தரிசனம் – ராக்காயி அம்மன்!
அம்மனின் பார்வையிலே ஒரு வலிமையும் ஒரு தாய்மையும் ஒருசேர நமக்கு ஊற்றாக தருகிறாள்.
அங்கேதான் பேச்சியம்மன், ராகு-கேது மூலவர்களும் இருப்பதால்,
இந்த இடத்தில் பாபங்களை தீர்க்கும் சக்தியாக இருக்கின்றனர். தரிசிக்கும்போது மனதிலேயே அமைதி பிறக்கிறது.
மெல்ல மெல்ல மேலே சென்றோம்...
பசுமையாக காட்சியளிக்கும் பழமுதிர்சோலை நம்மைக் கடைசி படை வீட்டு முருகனிடம் கொண்டு செல்கிறது.
அங்கே முருகன், வள்ளி, தேவயானி மூவரும் ஒரே சன்னதியில்!
இந்த தரிசனம்… வெறும் கடவுள் தரிசனம் அல்ல…
இல்லற வாழ்க்கையின் அழகு, புரிதல், பொறுப்பின் மேன்மை – அனைத்தையும் கற்பிக்கும் நமக்கு காண்பிக்கிறார்.
முருகனின் முகத்தில் ஒரு அழகும், கண்களில் ஒரு அர்த்தமும்!
ஒருபக்கம் காதலின் இனிமை, மறுபக்கம் பற்றுடைய அர்த்தம்!
இது ஒரு மனித வாழ்க்கையின் உயர்ந்த போதனை போல் மனதில் பதியும்!
அந்த தரிசனத்தோடு மனம் நிறைந்த நிலையில்,
பாதையைக் கடந்து கீழே இறங்கும்போது,
எதிரே காட்சியளிக்கிறார் –
சுந்தர பெருமாள் மற்றும் சுந்தரவல்லி தாயார்!
அந்த தரிசனத்தில் ஒரே ஒரு வார்த்தை வந்தது –
"அழகு".
முருகனின் அழகு நமக்குப் பழக்கம்…
ஆனால் இங்கு சுந்தர பெருமாளின் அழகு – அழகு மட்டும் இல்லாமல் சாந்தம், கருணை, அமைதி – எல்லாம் சேர்ந்து ஒரு பார்வை!ஒரு தெய்வீக வடிவம்!
மலைபாதையில் ஓடிக்கொண்டிருந்த குரங்குகள் நம்மை சுற்றி வந்தது!
எங்களோட பையிலிருந்த பழங்களை எடுத்து கொடுத்தோம்.
மரத்தில் இருந்த மேல் குரங்கு ஒரு கையை நீட்டியது, அதுக்கு நானொரு வாழைப்பழம் கொடுத்தேன்...
அது என் கண்ணை நேராக பார்த்தது...
அந்த நிமிடம் ஒரு உயிரோட நேரடி தொடர்பு ஏற்பட்ட மாதிரி இருந்தது.
பாசமும் நன்றியும் எதையும் சொல்லாமலே சொல்லும் ஒரு பார்வை – அந்த குரங்கு கொடுத்தது!
அந்த தரிசனங்களும், அந்தப் பாதைகளும், அந்தக் குரங்குகளும்…
இவை அனைத்தும் சேர்ந்து –
மனத்துக்குள் ஒரு புத்துணர்வும், உயிருக்குள் ஒரு சாந்தமும் பொங்கியது.
அழகர் மலை என்னும் அந்த இயற்கையின் சன்னதியில் கடவுளை பார்த்தோம்,
மனதை தெளிவாக்கி உயிரையும் பரிசுத்தமாக்கி வந்தோம்.
உண்மையிலே சொல்றேன்…
கடவுளை தேடுறது சில நேரம் கோவிலுக்குள் அல்ல… அவர் நம்மை தேடுகிறார் அந்த மலைப்பாதையில்!
இந்த ஒரு நாள் மட்டும் – ஆனால் நினைவில் என்றும் நிலைத்து நிற்கும்!
regards
Dr. Shrikanth Iyer

Last edited: