“சிவன் போற்றி ! ”

anamika

Active member
அகரத்து சங்கரா போற்றி !

ஆதிகுரு ஆனவனே போற்றி !

இன்பம் தரும் சிவனே போற்றி !

ஈசனே ! என் நேசனே போற்றி !

உருவில்லா அருவமானாய் போற்றி !

ஊன் உடலாய் நடம் செய்தாய் போற்றி !

எழிலார்ந்த எம் இறைவா போற்றி !

ஏகம்பனாய் காட்சி தந்தாய் போற்றி !

ஐயாறப்பனே போற்றி !

ஒருபாதி உமைக்கீந்தாய் போற்றி !

ஓங்கி அண்ணாமலையானாய் போற்றி !

ஔவைக்கு அருள் தந்தாய் போற்றி ! எங்கள்

அனைவருக்கும் அருள் தாராய் போற்றி ! போற்றி !!


(அகரா - சிவன் கோவில் இருக்கும் இடம், பெங்களூரில் உள்ளது.)

அனாமிகா.
 
Back
Top