• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் (Sri Rama Navami Special)

Status
Not open for further replies.

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் (Sri Rama Navami Special)

"ராமாயணத்தில் அறிய வேண்டிய சில கதாபாத்திரங்கள்"


1. அகல்யை -
ராமரின் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள்.


2. அகத்தியர் -
ராமனுக்கு போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்.


3. அகம்பனன் -
ராவணனிடம் ராமனைப்பற்றி கோள் சொன்னவன். ராமனின் அம்புக்கு தப்பிப்பிழைத்த அதிசய ராட்சஷன்.


4. அங்கதன் -
வாலி, தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன்.


5. அத்திரி -
அனுசூயா என்ற பத்தினியின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.


6. இந்திரஜித் -
ராவணனின் மகன். லட்சுமணனால் அழிந்தவன். மேகநாதன் என்ற பெயரையும் உடையவன்.


7. கரன், தூஷணன் - ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.


8. கபந்தன் -
தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்.


9. குகன் -
வேடர் தலைவன், படகோட்டி.


10. கும்பகர்ணன் - ராவணனின் தம்பி, எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன்.


11. கும்பன் -
கும்பகர்ணனின் மகன்.


12. குசத்வஜன் -
ஜனகரின் தம்பி, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத சத்ருக்கனின் மாமனார்.


13. கவுசல்யா,
கைகேயி, சுமித்திரை - தசரதரின் பட்டத்தரசியர்.


14. சுநைனா -
ஜனகரின் மனைவி, சீதையின் தாய்.


15. கவுதமர் -
அகல்யையின் கணவர், முனிவர்.


16. சதானந்தர் -
அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.


17. சம்பராசுரன் -
இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார்.


18. சபரி -
மதங்க முனிவரின் மாணவ, ராமனை தரிசித்தவள்.


19. சதபலி -
வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.


20. சம்பாதி -
கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக்காண அங்கதனின் படைக்கு உதவியவன்.


21. சீதா -
ராமனின் மனைவி, ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு.


22. சுமந்திரர் -
தசரதரின் மந்திரி, தேரோட்டி.


23. சுக்ரீவன் -
கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியபகவானின் அருளால் பிறந்தவன்.


24. சுஷேணன் -
வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.


25. சூர்ப்பணகை - ராவணனின் தங்கை, கணவனை இழந்தவள்.


26. தசரதர் -
ராமனின் தந்தை.


27. ததிமுகன் -
சுக்ரீவனின் சித்தப்பா, மதுவனம் என்று பகுதியின் பாதுகாவலர்.


28. தாடகை -
காட்டில் வசித்த அரக்கி, ராமனால் கொல்லப்பட்டவள்.


29. தாரை -
வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி.


30. தான்யமாலினி -ராவணனின் இளைய மனைவி.


31. திரிசடை -
அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள்.


32. திரிசிரஸ் -
ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி.


33. நளன் -
பொறியியல் அறிந்த வானர வீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன்.


34. நாரதர் -
பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர், கலக முனிவர்.


35. நிகும்பன் -
கும்பகர்ணனின் மகன்.


36. நீலன் -
வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன்.


37. பரசுராமர் -
விஷ்ணுவின் அவதாரம், ஜமத்கனியின் மகன், ராமனுடன் போரிட்டவர்.


38. பரத்வாஜர் -
பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர்.


39. பரதன் -
கைகேயியின் மகன், ராமனின் தம்பி.


40. மந்தரை -
கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி, கூனி என்றும் சொல்வர்.


41. மதங்கர் -
தவ முனிவர்.


42. மண்டோதரி -
தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.


43. மாரீசன், சுபாகு - தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்.


44. மால்யவான் -
ராவணனின் தாய்வழிப்பாட்டன்.


45. மாதலி -
இந்திரனின் தேரோட்டி.


46. யுதாஜித் -
கைகேயியின் தம்பி, பரதனின் தாய்மாமன்.


47. ராவணன் -
மிச்ரவா என்பரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன்.


48. ராமன் -
ராமாயண கதாநாயகன்.


49. ரிஷ்யசிருங்கர் -புத்திரகாமேஷ்டி செய்த முனிவர்.


50. ருமை -
சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள்.


51. லங்காதேவி -
இலங்கையின் காவல் தெய்வம்.


52. வசிஷ்டர் -
தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர்.


53. மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி - தசரதரின் மற்ற குருமார்கள்.


54. வருணன் (சமுத்திரராஜன்) - கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன்.


55. வால்மீகி -
ராமாயணத்தை எழுதியவர். ரத்னாகரன் என்பது இயற்பெயர், கொள்ளைக்காரனாக இருந்தவர், ராமனின் மகன் குசனுக்க ராமாயணம் போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்.


56. வாலி -
இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன்.


57. விஸ்வாமித்ரர் - ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர், சீதா - ராமன் திருமணத்திற்கு காரணமானவர்.


58. விராதன் -
தண்டகவனத்தில் வசித்த அரக்கன், ராமனால் சாபம் தீர்ந்தவன்.


59. விபீஷணன் -
ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.


60. வினதன் -
கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன்.


61. ஜடாயு -
கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன்.


62. ஜனகர் -
சீதை, ஊர்மிளாவின் தந்தை.


63. ஊர்மிளா -
லட்சுமணனின் மனைவி.


64. ஜாம்பவான் -
கரடி வேந்தர், பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர்.


65. அனுமான் -
அஞ்சனை, கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன், மாருதி ஆகியவை வேறு பெயர்கள்.


66. ஸ்வயம்பிரபை - குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள்.


67. மாண்டவி -
பரதனின் மனைவி.


68. சுருதகீர்த்தி -
சத்ருக்கனனின் மனைவி.


பிரம்மாவின் தலைமுறையை சேர்ந்தவரா ராமர்?
பிரம்மா வழி வந்தவர் ராமர்..!
தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தார். அவருக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினார். புத்திரபேறுக்கான யாகங்கள் பல செய்தார். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார்.திருமாலின் அவதாரங்களில் ஒப்பற்றது ராமபிரான் அவதாரம். ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். ராமபிரான் பற்றிய சில அரிய தகவல்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


பிரம்மா வழி வந்தவர் ராமர் :


பிரம்மாவின் 39-வது தலைமுறை ராமபிரான் ஆவார். சூரிய குலம் அல்லது ரகுவம்சம் என்பது கலியுக அரச பரம்பரைகளில் ஒன்றாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்துமத அடிப்படையில் வைவஸ்வத மனு என்பவர் சூரியனின் மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான இசவாகுவின் வம்சம் சூரிய வம்சமாக அறியப்படுகிறது. இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் சொல்லப்படுகின்றனர்.


சூரிய குல தோன்றலான ராமபிரானின் பரம்பரை வரிசை :


1. பிரம்மாவின் மகன் மரீசி
2. மரீசியின் மகன் காஷ்யபன்
3. காஷ்யபன் மகன் விவஸ்வான்
4. விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு
5. வைவஸ்வத மனு மகன் இசவாகு (இவர்தான் அயோத்தியை உருவாக்கினார்)
6. இசவாகு மகன் குக்ஷி
7. குக்ஷி மகன் விகுக்ஷி
8. விகுக்ஷி மகன் பானன்
9. பானன் மகன் அனரன்யன்
10. அனரன்யன் மகன் பிருது
11. பிருது மகன் திரிசங்கு (இவருக்காகத் தான் விஸ்வாமித்திரர் சொர்க்கம் படைத்தார்)
12. திரிசங்கு மகன் துந்துமாரன்
13. துந்துமாரன் மகன் யுவனஷ்வன்
14. யுவனஷ்வன் மகன் மாந்தாதா
15. மாந்தாதா மகன் சுசந்தி
16. சுசந்தி மகன் துவசந்தி மற்றும் பிரசந்ஜித்
17. துவசந்தி மகன் பரதன்
18. பரதன் மகன் அஸித்
19. அஸித் மகன் சாகரன்
20. சாகரன் மகன் அசமஞ்சன்
21. அசமஞ்சன் மகன் அம்சுமான்
22. அம்சுமான் மகன் திலீபன்
23. திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)
24. பாகீரதன் மகன் காகுஸ்தன்
25. காகுஸ்தன் மகன் ரகு (காளிதாசன் ரகுவம்சம்)
26. ரகு மகன் பிரவர்த்தன்
27. பிரவர்த்தன் மகன் ஷங்கனன்
28. ஷங்கனன் மகன் சுதர்ஷன்
29. சுதர்ஷன் மகன் அக்னிவர்னன்
30. அக்னிவர்னன் மகன் சீக்ரகன்
31. சீக்ரகன் மகன் மேரு
32. மேரு மகன் பிரகஷ்ருகன்
33. பிரகஷ்ருகன் மகன் அம்பரீஷன்
34. அம்பரீஷன் மகன் நகுஷன்
35. நகுஷன் மகன் யயாதி
36. யயாதி மகன் நபாகன்
37. நபாகன் மகன் அஜன்
38. அஜன் மகன் தசரதன்
39. தசரதன் மகன்கள் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன்
40. ராமன் மகன் லவன் மற்றும் குசன்.
ஜெய்ஸ்ரீராம்
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top