ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை

Status
Not open for further replies.
ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை

பாடல்-18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் கழலீ
கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்
மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள்
கூவின காண்
பந்தார் விரலி !உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


விளக்கம்

இந்த பாடலுக்கு விரிவான
விளக்கம் தேவையில்லை ஆண்டாள்
சென்ற பாசுரத்தில் கண்ணனின் குடும்ப உறுப்பினர்களையும்
கண்ணனையும் துயில் எழுப்பினாள்
இந்த பாசுரத்தில் நந்த கோபாலனின் மருமகளான நப்பின்னையை எழுப்புகிறாள் .இதற்காகவா ஒரு பாசுரம் எழுதியிருப்பாள் ஆண்டாள் என்று நினைக்கத் தோன்றுகிறது.


இதுகாறும் உலக போகங்களிலே சுகம் கண்டு
இறைவனை மறந்து உறங்கி கிடந்தோம்.

நம்முடைய இந்த அவல நிலையைக் கண்டு
பொறுக்காமல் நம் மீது இரக்கம் கொண்டு
நம்மை அறியாமையிலிருந்து நம்மை
விடுவிக்க பெரும் முயற்சி செய்து
அதில் சிறிது வெற்றி பெற்றாள் ஆண்டாள்

images


.நம்மை தமோ குணத்திலிருந்து
விடுவித்தாள்

நம்மை எல்லாம் அழைத்துக்கொண்டு
கண்ணன் அறிதுயில் கொண்டுள்ள கோயிலுக்கு
அவனை தரிசனம் செய்ய நம்மையெல்லாம் அழைத்து செல்கிறாள்.

images


ஆனால் அங்கு கண்ணனைச் சுற்றி இருப்பவர்கள்.
தாங்கள் கண்ணனிடம் இருக்கிறோம். அதனால் அவர்கள் கண்ணனைக் கண்டு விட்டோம், அவனோடுதான் நாம் இருக்கிறோமே என்று மீண்டும்தமோகுணத்தில் ஆழ்ந்து அவனை மறந்து, அவன் பெருமைகளைப் பாடி இந்த புனித மார்கழி மாதத்தில்
புண்ணியத்தை தேடாது உறங்கிக் கிடக்கின்றனர்.

அர்ச்சாவதாரமாக காண்போர்
கண்ணை விட்டு அகலாத நம்முடைய
ஊனக் கண்களுக்கு புலப்படும் வகையில் ஜீவர்கள் மீது கருணை கொண்ட அந்த கரும் தெய்வமான கண்ணன் வடிவத்தை தரிசனம் செய்ய சென்றால் அவன் மகிமையை உணராது அவனைச் சுற்றியுள்ளவர் உறங்கி கிடப்பதை இந்த பாசுரத்தில் ஆண்டாள் சுட்டி காட்டுவதோடு மட்டுமல்லாமல் அவர்களையும் உறக்கத்திலிருந்து எழுப்புகிறாள்.


எழுப்புவதுமட்டுமல்லாமல்
தாங்கள் கண்ணனை தரிசிக்க வந்துள்ளோம்

நீங்களும் உறக்கத்தை விட்டு எழுந்து உண்மையை உணர்ந்து எங்களுடன் வாருங்கள் என்று அவர்களுக்கு சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறாள்.

ஒரு ஜீவன் பகவானைப் பற்றிய சிந்தனையே இல்லாது மூடராய் கிடக்கும் தமோ குணத்திலிருந்து விடுவிக்கபட்டாலும் இன்னும் பல படிகளைக் கடந்துதான் பகவானை அறிந்துகொள்ள இயலும்.

தமோ குணத்தைக் கடக்கவேண்டும்.
கடந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்யாவிடில் மீண்டும் தமோ குணத்தில் ஆழ்ந்து உணர்ச்சிகளுக்கும் புலனின்பங்களுக்கு அடிமைகளாய் போய்விட நேரிடும்.

மனம் என்னும் குதிரையை
நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.

கட்டுப்பாட்டை இழந்துவிட்டால்
அது நம்மை மீண்டும் படுகுழியில் தள்ளிவிடும். ஆபத்து உண்டு.

அதனால்தான் நல்ல சத்சங்கத்தை விட்டு
எக்காரணத்தைக் கொண்டும் நாம் அகலக்கூடாது


ramarasam: ???? ??????? ???????? ????????? (???????(18
 
Status
Not open for further replies.
Back
Top