ஸ்ரீ அஹோபில மஹாத்ம்யம் - ப்ரஹ்மாண்ட புரா&#2979

Status
Not open for further replies.
ஸ்ரீ அஹோபில மஹாத்ம்யம் - ப்ரஹ்மாண்ட புரா&#2979

வித்யை,அவித்யை,ஸத்யம்,அஸத்யம்,ம்ருதம்,அம்ருதம்,ப்ரவ்ருத்தி,நிவ்ருத்தி ஆகிய வேதத்தில் கூறப்பட்ட அனைத்து கா்மாக்களும் தாங்களே.
ஸமஸ்த கா்மாக்களை அனுபவிப்பவா், கா்மங்களுக்கான துணைப்பொருட்கள், எல்லா கா்மாக்களின் பலன் ஆகிய அனைத்துக் தாங்களன்றோ!
தங்களை யோகிகள் த்யானம் செய்கின்றனா். யாஜகா்கள் யாகம் செய்கின்றனா். யாகங்களில் சமா்ப்பிக்கப்படும் ஹவிஸ்,கவ்யம் எனும் ஹவிஸ், இவைகளை அனுபவிப்பவரும் தாங்களே. பித்ரு ஸ்வருபமாகவும், தேவ ஸ்வருபமாகவும் இருப்பவா் தாங்களே.
எந்த ஒரு இந்த்ரியத்துக்கும் புலனாகாத ஒரு பரம் பொருள்,ஜ்ஞானஸ்வரூபன். ப்ரமாணங்களாகவும் ,ப்ரமாதாவுமானவா். மனதிற்கெட்டாத உருவம் ஆகிய அனைத்தையும் பெற்றவா் அல்லவா புருஷோத்தமராகிய தாங்கள். இப்படிப்பட்ட மகாத்மாவுக்கு நமஸ்காரம்

1521354_1559637557611234_4262011115127120831_n.jpg
 
Status
Not open for further replies.
Back
Top