ஸ்ரீபொய்கையாழ்வார் திருநக்ஷத்திரம்

ஸ்ரீபொய்கையாழ்வார் திருநக்ஷத்திரம்.....!!!
(ஐப்பசி - திருவோணம்)

பெருமாளின் பாஞ்சன்னியத்தின் அம்சமாக அவதரித்தவர்
ஸ்ரீபொய்கையாழ்வார்.

செய்ய துலா திருவோணத்தில் செகத்துதித்தான் வாழியே!

திருக்கச்சி மாநகரம் செழிக்கவந்தோன் வாழியே!

வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே!

வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே!

வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே!

வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே!

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே!

பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே!

அருள் மிகுந்ததொரு வடிவாய்க் கச்சி தன்னில்
ஐப்பசி மாதத் திரு வோணத்து நாளில்
பொருள் மிகுந்த மறை விளங்கப் புவியோர் உய்யப் பொய்கை தனில் வந்து உதித்த புனிதா முன்னாள்
இருள் அதனில் தண் கோவல் இடைகழிச் சென்று
இருவருடன் நிற்கவும் மால் இடை நெருக்கத்
திரு விளக்காம் எனும் வையம் தகளி நூறும்
செழும் பொருளா வெனக்கு அருள் செய் திருந்த நீயே.

ஸ்ரீபொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்......!!!

---------------------------------------------------------------------------------------------------------------

இன்று ஐப்பசி திருவோணம் - பொய்கையாழ்வார் + பிள்ளைலோகாசாரியர் திருநக்ஷத்திரம்.

ஐப்பசியில் ஓணம், அவிட்டம், சதயம் இவை, ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் ! எப்புவியும் பேசுபுகழ் பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் - தேசுடனே தோன்று சிறப்பால் ! ?

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து, நல் தமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த பெற்றிமையோர் என்று, முதலாழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு, நின்ற துலகத்தே நிகழ்ந்து ! ?

படம் ஸ்ரீ பூதத்தாழ்வார் ஸ்ரீ பொய்கையாழ்வார்(நடு) ஸ்ரீ பேயாழ்வார் (இடமிருந்து வலம் வரிசையாக) - பெருமாள்கோயிலில் சேவை சாதித்தபடி

1572837862527.png
 
Back
Top