• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீபூஸ்துதி

praveen

Life is a dream
Staff member
எம்பெருமான் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி ஸமேதராய் கடாக்ஷிக்கிறான். பூதேவி நீளாதேவி இருவரும் ஸ்ரீதேவியின் அம்சமே. வேதமும் எம்பெருமான் விஷயமாக புருஷஸுக்தம் அருளியும், மற்றும் அவனுடைய தேவியர்கள் விஷயமாக ஸ்ரீஸுக்தம், பூஸுக்தம், நிளாஸுக்தம் ஆகியவற்றை அருளியும் தேவியர்களுக்கு பெருமை சேர்க்கின்றது. ஆசார்ய வள்ளல் ஸ்வாமி தேசிகரும் எம்பெருமான் விஷயமாக தசாவதார ஸ்தோத்ரமும் மற்றும் பல ஸ்தோத்ரங்களும், தேவியர்கள் விஷயமாக ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி, கோதாஸ்துதி போன்றவற்றையருளியிருக்கிறார். இவற்றைத் தவிர திருவேங்கடமுடையானின் தயா குணத்தையும் ஒரு தேவியாக பாவித்து, தயாதேவியாக திருநாமமிட்டு, “ஸ்ரீதயாசதகம்” என்கிற ஒரு திவ்யமான ஸ்லோகத்தை அருளினார். ஒவ்வொரு ஸ்லோகமும் அற்புதமானவை. பாராயணம் செய்ய செய்ய திகட்டாதவை. இவற்றைப் பற்றி கிஞ்சித்தும் அறியாத, பொருள் புரியாத அடியேன் இதனை எழுத முயற்சிப்பது ஒரு பேதமையே. எனினும், நம்முடைய ஆசார்ய புருஷர்கள் தெளிவித்ததை தொகுத்துக் கொடுப்பதால் ஒருமுறையாவது அநுஸந்தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிற ஒரு நம்பிக்கை.

இது யஜ்ஞவராஹ மஹிஷியான பூமிப்பிராட்டி விஷயமாக அருளிச் செய்யப்பட்ட ஸ்தோத்ரம். இந்த ஸ்தோத்ரத்தை அநுஸந்திப்பவர்கள் தாங்கள் விரும்பிய எல்லாப் பலன்களையும் சாச்வதமாக பெறலாம்.

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிககேஸரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஸங்கல்ப கல்ப லதிகா
மவதிம் க்ஷமாயா:
ஸ்வேச்சா வராஹ
மஹிஷீம் ஸுலபாநுகம்பாம் |

விச்வஸ்ய மாதர
மகிஞ்சந காமதேநும்
விச்வம்பரா மசரண:
சரணம் ப்ரபத்யே ||

ஸங்கல்ப – நினைத்த பயனை அளிப்பதில்

கல்ப லதிகாம் – கற்பகக் கொடியாய்

க்ஷமாயா: - பொறுமைக்கு

அவதிம் – எல்லை நிலமாய்

ஸுலப அநுகம்பாம் – எளிதில் அருள் புரிபவளாய்

அகிஞ்சன – கைம்முதலில்லாதவர்க்கு

காமதேநும் – காமதேநுவாய்

ஸ்வ இச்சா – தன் ஸங்கல்பத்தால்

வராஹ – வராஹ வடிவு கொண்ட

எம்பெருமானுக்கு
மஹிஷீம் – மனைவியாய்

விச்வஸ்ய – உலகுக்கு

மாதரம் – தாயாயுள்ள

விச்வம்பரம் –
பூமிதேவியை

அசரண: - வேறு கதியற்ற அடியேன்

சரணம் – சரணமாக

ப்ரபத்யே – அடைகின்றேன்.

எண்ணினதை எல்லாம் தரும் கற்பகக் கொடியாகவும், பொறுமை என்னும் மஹா குணத்தின் எல்லையிலே நிற்பவளாகவும், திவ்ய வராஹமூர்த்தியின் தேவியாகவும், எளிதே அருளுபவளாகவும், உலகை ஈன்ற தாயாகவும், கதியற்றவர்களுக்குக் காமதேநுவாகவும், உள்ள பூமிப்பிராட்டியைப் போக்கற்ற அடியேன் புகலாகப் பற்றுகிறேன்.

வராக அவதாரம் -

பூமி பாதாளத்தில் அழுந்திவிட, பூதேவி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். அவள் செய்த துதியே கேசவ துதி எனப்படுகிறது. இதைச் செய்பவர்கள் வறுமை, பாவங்களிலிருந்து விடுபடுவர். புத்திரப்பேறு கிடைக்கும். இறுதியில் விஷ்ணுலோகம் அடைவர். பூமித்தேவியின் முறையீட்டைக் கேட்ட பகவான் விஷ்ணு மிகப்பெரிய வராக (பன்றி) உருவெடுத்தார். இப்படி எடுத்த வராக அவதார பகவான் பூமியைக் காத்திட சமுத்திரத்திற்குள் பிரவேசித்தார். பிரஜாபதிகளில் காசியப முனிவரும் ஒருவர். அவருடைய மனைவியரில் ஒருத்தி திதி. அவள் ராக்ஷசர்களின் தாய். ஜயவிஜயர்கள் அவள் வயிற்றில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற இருவர்களாய் உதித்தனர். அவர்களில் இளையவன் ஹிரண்யாக்ஷன். அவன் பிரம்மாவைக் குறித்துக் கோர தவம் செய்தான். அதன் வெப்பம் மூன்று லோகங்களையும் தகித்தது. இதனால் அச்சம் கொண்ட தேவர்கள் சத்தியலோகம் சென்று பிரம்மாவைக் கண்டு இரண்யாக்ஷன் தவம் பற்றிக் கூறித் தங்களுக்கு அருள்புரிய வேண்டினர். அப்போது பிரம்மா தான் சென்று இரணியாக்ஷன் தவத்தை முடிக்கச் செய்வதாகவும், தேவர்களை ரக்ஷிப்பவனாகவும் இருப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் இரணியாக்ஷன் தவம் செய்யுமிடம் அடைந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு அவன் சிருஷ்டியில் தோன்றிய யாராலும், எதாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக்கூடாது. தனக்கு மூவுலகத்திற்கும் அதிபதியாகும் வரங்கள் இரண்டும் வேண்டினான். அப்போது பிரம்மா விஷ்ணுவைத் தியானித்து எல்லாம் அவன் செயலே என்று நினைத்து அரக்கன் கேட்ட வரங்களைக் கொடுத்தார். வரம் பெற்ற இரணியாக்ஷன் மூவுலகங்களையும் வென்று தனக்கு எதிரி யாருமின்றி ஆளத் தொடங்கினான். அடுத்து அவன் சத்தியலோகம் அடைந்து பிரம்மனை வெல்ல முயன்றபோது யுக்தியுடன் அவனைச் சமாதானப்படுத்தி உலக நாயகனாகிய விஷ்ணுவை வென்றால் உனக்குச் சமமாக யாரும் இருக்கமாட்டார் என்று கூற விஷ்ணுவின் இருப்பிடம் அடைந்தான் இரணியாக்ஷன். அங்குத் துவாரபாலகர்கள் அவனைத் தடுக்கவில்லை. அவன் வருகை அறிந்து விஷ்ணு பாதாளலோகம் சென்று விட்டார். இரணியாக்ஷன் வைகுந்தத்தில் அனைவரும் விஷ்ணு ஸ்வரூபியாகக் காணப்பட்டனர். செய்வதறியாமல் விஷ்ணுவைத் தேடி பாதாளலோகம் செல்ல முனைந்தவன் வழித்தெரியாமல் தவித்து இறுதியில் தனக்குத் தடையாயிருக்கும் பூமியைப் பாயாகச் சுருட்ட மறைந்தது. அதுகண்டு எல்லோரும் ஸ்ரீஹரியிடம் முறையிட்டனர். பூமாதேவி கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்தாள்.
உடனே பகவான் விஷ்ணு யஜ்ஞ வராகமாக உருவெடுத்தார். குர்குர் என்று சப்தம் செய்தது வராகம். பூமியைப் பாயாகச் சுருட்டிய இரணியாக்ஷன் மீது பாய்ந்து தன் தந்தத்தால் (கோரைப் பல்லால்) குத்தினார். அவன் அதைத் தாளமுடியாமல் சமுத்திரத்திலே குதித்து மறைந்தான். அவனை வராகம் தனது கால்களால் பற்றிக் கொண்டு மறுபடியும் தந்தத்தால் குத்தியது. அதனால் அவன் உடனே மரணமடைந்தான். அவனால் சுருட்டப்பட்ட பூமியை வராகமூர்த்தி வெளிக்கொணர்ந்து அதனை நிலைப்படுத்தி வைகுண்டம் அடைந்தார். இதுவே வராக அவதாரம்
 
Bhoosthuthi எல்லா பாசுரங்களிற்கும் இது போல் விளக்கம் கிடைக்குமா
 
தயவு செய்து பூஸ்துதியின் அனைத்து ஸ்லோகங்களுக்கும் அர்த்தம் பதிவிடவும்
 
Latest ads

Back
Top