ஸ்ரீதேவராஜ அஷ்டகம்

திருக்கச்சி நம்பிகள் பெருந்தேவித் தாயாரின் ப்ரிய கேள்வனான வரதராஜப் பெருமாளின் பெருமையை வெளிப்படுத்தும் நோக்குடன் ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார்.

ந்யாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி இந்தப் ப்ரபந்தத்திற்குத் தமிழில் ஒரு எளிய பொழிப்புரை அருளியுள்ளார். அதை இங்கே நாம் காண்போம்.

தனியன்கள்:-

ஸ்ரீமத் காஞ்சீ முனிம் வந்தே கமலாபதி நந்தனம் |
வரதாங்க்ரி ஸதா ஸங்க ரஸாயன பராயணம் ||

கமலாபதி என்பவரின் புதல்வரும் பேரருளாளன் திருவடிகளில் இடைவிடாத பற்று என்னும் ரசாயநத்தையே கதியாகக் கொண்டவருமான ஸ்ரீமத் திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.

தேவராஜ தயா பாத்ரம்
ஸ்ரீ காஞ்சீ பூர்ணமுத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

தேவப் பெருமாள் க்ருபைக்குப் பாத்ரமானவரும் ராமாநுஜ முநி என்னும் எம்பெருமானாருடைய மதிப்பைப் பெற்றவருமான நல்லவர்கள் ஆச்ரயிக்கத் தகுந்த திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.
 
Back
Top