ஸ்ரீஆளவந்தார் திருநக்ஷத்திரம்

மச்சணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியே!

மறை நான்கும் ஓர் உருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே!

பச்சை இட்ட ராமர் பதம் பகருமவன் வாழியே!

பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே!

கச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தோன் வழியே!

கடக உத்தராடத்துக் காலுதித்தோன் வாழியே!

அச்சமற மன மகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே!

ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே!
 
Back
Top