ஸ்பரிசம் !!!

Status
Not open for further replies.

திருமணத்திற்கு பிறகு கணவனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு அவன் ஸ்பரிசத்துக்காக ஏங்கும் மனையாளின் உள்ள வார்ப்புகள்... !!!


ஸ்பரிசம் !!!

பூந்தோட்டமாய் பூத்த உன் நினைவுகளின் வாசம் வீசும்
போதெல்லாம் வசப்பட ஏங்குதடா என் இதயம் ... !!!
மொத்தமாய் தந்த உறவுக்கு தவணை முறையில்
தார்மீக உறவைத் தருகின்றாய் ....!!!

அதிகாலை குளித்து நுனிக் கூந்தல் முடித்து ...
அரை முழம் மல்லிகை சூடி ஆண்டவனை
தொழும்போது வெட்கமாய் வந்தெதிரே நிற்கின்றாய் ..!!!!

வேண்ட நினைத்த மனதை வேட்கைக்கு தள்ளுகிறாய் ....!!!
விழியீர்ப்புக்கு முன் புவியீர்ப்பு என்ன செய்து விடும் ....???!!
வந்தே வீழ்ந்திடுவேன் உந்தன் மார்பில் ....!!!

விரல் வந்து தொடு முன்னே வெட்க விதை எனக்குள்
முளைத்துவிட ... தலை கவிழ்ந்தே இருக்கின்றேன் ...!!!
உன் அழகு முகம் காண கோடி ஆசை இருந்தும்....!!!

நீ எந்தன் இதழ் பற்றி நீந்திய பொழுதும் உன் உயிர் கடலில்
மூழ்கி போவேன் ... வியர்வையில் குளிப்பாட்டி என் வேட்கை
அணைத்திடுவாய் ....

வேள்விகள் எல்லாம் வதையாகும்
நாவின் ஈரம் வற்ற
வெற்றுடல்களின் வேதனை தீர ...
மயக்கம் தெளியாது உந்தன் மார்பில்
சாய்ந்திடும் சுகம் இனியொருமுறை
பெற்றிட இன்னும் எத்தனை திங்களாகும் .....!!!

காத்திருக்கிறேன் உன் ஸ்பரிசத்துக்காக ....

ஏக்கத்தின் எழுத்துக்களில் ....
இங்கு நான் ..!!!
அங்கு நீ ....!!!
 
Status
Not open for further replies.
Back
Top