வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் !

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் !

திருநெடுந்தாண்டகம் !


மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்
புனலுருவாய் அனலுருவில் நின்ற எந்தை
தளிர்புரையும் திருவடியென் தலைமே லவே


வேதம் போற்றும் கதிரவனின் ஒளியிலிருந்து ஒளிரும் நிலவு போல், பராமாத்மாவிடமிருந்து தோன்றிய இவ்வுயிர்களில் இறப்பு, பிறப்பு முதுமையில்லாத ஆத்மாவாக உயிர்களுக்குள் உறையும் என் இறைவனே உன் திருவடி சரணம்.


"ஒளிர்கின்ற மின்னலாக, நான்கு வேதங்களாக, இருள்போக்கும் சூரியனாக, முளைத்து எழுந்த திங்களின் ஒளியாக, பிணியோ மூப்போ இல்லாத , பிறப்பில்லாத இறப்பின் பின் வீடு பேற்றைக் கொடுக்க எண்ணாதவனாய், பொன்னின் தன்மையனாய், மணியின் வடிவினாய், நிலம், நீர், தீ, காற்று என்ற ஐந்து பூதங்களாக, நீர் உருவாக, தீ உருவமாக, என் உடலில் தானே தன் உருவாக நிற்பவன், என் அப்பன் திருமால் திருவடிகள் என் தலைமேல் உள்ளன'' என்கிறது இந்த திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாசுரம்.
 
Back
Top