வேண்டுதலில் மாறுபட்டவன் ஐயப்பன்

drsundaram

Active member
ஒருதெய்வத்திடம் ஒரு காரியம் வேண்டி அது நடந்தால் உன் கோவிலுக்கு வந்து இந்த நேர்த்திகடனை செய்கிறேன் என்று வேண்டிக்கொள்வோம்...!!! நடந்தால் உடனே செல்வோம் நடக்கவில்லை என்றால் நடக்கும்வரை காத்திருப்போம்...!!



ஆனால் ஐயப்பனிடம் அதுகிடையாது வேண்டுதல் வைத்து காத்திருந்தால் காலம்தான் போகும் ஏன் தெரியுமா அவன் சன்னதியில் நிற்பதற்கே குலதெய்வத்தின் அருளும் குருநாதரின் ஆசியும் வேண்டும்..!! அப்புறம் எப்படி இவ்வளவு கூட்டம் என்று கேட்குறீர்களா.?



அள்ளிக்கொடுப்பதில் வள்ளல் அவன் முதலில் அவனை காண்பதற்கு மாலை போட வேண்டும் என்றால் அவன் உங்கள் பெயரை கூறி அழைப்பானாம் அப்படி அழைக்கும் போது சென்று விடவேண்டும் அந்த புண்ணியபூமியை தொட்டு அவன் முகத்தை பார்த்த பிறகு உங்கள் வேண்டுதலை சொல்லிப் பாருங்கள் உடனே நீங்கள் கேட்டது கிடைத்து விடும். அதனால்தான் சிறுகுழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வருகையை அதிகமாக அங்கே காண்கிறோம்..!

ஆகவே விண்ணப்பங்களை வீட்டிலிருந்து வைக்காமல் அவன் சன்னதியில் சர்வேஸ்வரனின் அழகு முகத்தை பார்த்தபிறகு கேளுங்கள் நிச்சயம் கிடைக்கும் கிடைத்ததால் தான் ஒவ்வொருவரும்40 வருஷம் 50 வருஷம் என தனது புனித யாத்திரையை தொடர்ந்து வருகிறார்கள் புரிகிறதா...


அது புண்ணியபூமி மட்டுமல்ல நமது கர்மாக்களை தீர்க்கும் நீதிதேவன் வாழும்பூமியாகும் அதனால்தான் நம்மை அவ்வளவு சீக்கிரம் செல்லவிடாமல் பல தடைகள் தடுத்து வருகிறது அது நமது கர்மவினை பாவம்தான் அதையும் தாண்டி ஒருமுறை சென்று விட்டால் அதன் பிறகு பலமாற்றங்கள் வாழ்வில் வந்து சேரும் நம்பிக்கை இருந்தால் வாருங்கள் வந்து பாருங்கள்...

சாமி சரணம் ஐயப்பா..!!


courtesy : Shri Jambunathan: chennai
 
Back
Top