• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனுக்கு அ

Status
Not open for further replies.
வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனுக்கு அ

வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது: நாளை ஜனாதிபதி வழங்குகிறார்


புதுடெல்லி, ஜன.25-

a002ff64-1acf-449c-bd6f-c9b9b477d2de_S_secvpf.gif




டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் தீவிரவாதிகளுடன் போராடி வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார். இந்த விருதினை அவரது குடும்பத்தார் பெற்றுக் கொள்கின்றனர்.

சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், கடந்த 2006-ம் ஆண்டு சென்னை ஆபீசர்ஸ் அகாடமியில் பயின்று ராணுவத்தில் சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள சோஃபியான் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் ராணுவ மேஜராக நியமிக்கப்பட்டார்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்களை துச்சமாக எண்ணி திறமையாக போரிட்டு உயரதிகாரிகளின் பாராட்டைப் பெற்ற முகுந்த் வரதராஜன், தனது கட்டுப்பாட்டில் உள்ள படையினரை திறம்பட வழிநடத்தும் ஆற்றல் மிகுந்தவர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சோபியானில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், கடுமையாக போரிட்ட அவர் நாட்டுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்தார்.

அவரது ஈடிணையற்ற தியாகத்தை போற்றும் வகையில் நாளை டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் ஜனாதிபதி பிரணாப் நாளை நாட்டின் பெருமைக்கும், சிறப்புக்கும் உரிய அசோக் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரிடம் இந்த விருது ஒப்படைக்கப்படும்.

இதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ல கலரூஸ் வனப்பகுதியில் ஒரு தீவிரவாதக் குழுவை வழிமறித்து தீரத்துடன் சண்டையிட்ட தீரஜ் சிங்கின் பெயரும் அசோக் சக்ரா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

??????????????? ?????? ??? ????? ?????? ???????? ???????????? ????? ????? ??????: ???? ???????? ???????????? || Major Mukund Varadarajan family to receive Ashok chakra on Republic day
 
hi

i saw the ceremony just now in USA....its very tearful.....his wife received the award from president....i think his mother

was weeping....
 
Status
Not open for further replies.
Back
Top