விவேகசிந்தாமணி

Status
Not open for further replies.
விவேகசிந்தாமணி

ஆபத்துக்கு உதவாப் பி்ள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம்தாபத்தைத் தீராத் தண்ணீர், தரித்திரம் அறியாப் பெண்டிர்கோபத்தை அடக்கா வேந்தன், குருமொழி கொள்ளாச் சீடன்,பாபத்தைப் போக்காத் தீர்த்தம் பயனிலை ஏழும் தானே.


கருத்துரைஆபத்தில் உதவிசெய்யாத பிள்ளையால் பயனில்லை. மிகுந்த பசியில் தவிக்கும்போது உதவாத உணவினால் ஒருபயனுமில்லை. தாகமுற்று இருக்கும்போது அதனைத் தவிர்க்க உதவாத தண்ணீரால் என்னபயன்? ஒருபயனுமில்லை. வறுமையை அறியாத, அறிந்து அதற்கேற்றபடி ஒழுகாத - நடக்காத- பெண்களால் பயன் இல்லை. கோபத்தை அடக்காத அரசனாலும் பயனில்லை. குருவின்மொழியை -ஆசிரியரின் சொல்லை- கேளாத மாணாக்கனாலும் ஒருபயனுமில்லை. அதுபோலத் தன்னுள் முழுகுவாரின் பாவத்தைப்போக்காத தீர்த்தத்தினாலும் பயனில்லை. இவ்வாறாக இந்த ஏழும் பயனில்லை என்கின்றார்.
 
Status
Not open for further replies.
Back
Top