• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

விபூதி இட்டுக்கொள்வதன் பலன்!

Status
Not open for further replies.
விபூதி இட்டுக்கொள்வதன் பலன்!

விபூதி இட்டுக்கொள்வதன் பலன்!

ஜூலை 22,2015


LRG_20150722162659913486.jpg




சிவபெருமானை தியானித்து, தண்ணீருடன் சேர்த்துக் குழைத்து, மூன்று கோடுகளாக விபூதியை இட்டுக்கொள்ளல் வேண்டும். இதற்கு திரிபுண்டரம் என்று பெயர். மூன்று வகைப்பாவங்களைப் போக்கும் விபூதியின் மூன்று கோடுகள் மகத்தானவை.

முதல் கோடு: அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை, மஹாதேவன் ஆகியவை அடங்கியது.

இரண்டாவது கோடு: உகாரம், தட்சிண அக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.

மூன்றாவது கோடு: மகாரம், ஆவஹனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர். சிவபெருமானை எண்ணி விபூதியை அணிவதே மாஹேஸ்வர விரதம் எனப்படும். இந்த விரதம் எல்லா பாபங்களையும் நீறாக்கும்; மோட்சம் தரும்; பயம் போக்கும்.


http://temple.dinamalar.com/news_detail.php?id=45415
 
Status
Not open for further replies.
Back
Top