விநாயகரின் உருவ விளக்கம்

praveen

Life is a dream
Staff member
விநாயகரின் உருவ விளக்கம்

யானை முகம், பானை வயிறு கொண்ட பிள்ளையார் கேட்டதை அருளக்கூடியவர். கணபதி, விநாயகர் என பல பெயர் கொண்ட பிள்ளையாரின் திருவுருவத்தை பற்றி இங்கு பார்ப்போம்.


#பெருவயிறு :


உலகிலுள்ள எல்லா உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதை குறிப்பிடுகிறது.


#ஐங்கரம் :


படைத்தல் தொழிலையும், அழித்தல் தொழிலையும், காத்தல் தொழிலையும், மறைத்தல் தொழிலையும், மற்றொரு கை அருள்புரிவதையும் குறிக்கிறது.


#பெரிய காது :


செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


#கொம்புகள் :


மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துகிறது.


#கண் :


எதையும் உன்னிப்பாக கவனித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


#திருவடி :


ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.


#தலை :


நல்ல விஷயங்களையே சிந்தியுங்கள். நல்லதையே நினையுங்கள்.


#அங்குசம் :


ஆசைகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதை அங்குசம் குறிக்கின்றது.


#மோதகம் :


வாழ்வை இனிமையாக வாழ வேண்டும். நமது வாழ்க்கை நம் கையில் உள்ளது. அதை இனிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை மோதகம் உணர்த்துகிறது.
 
Back
Top