• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

வந்தாச்சு தூக்கி அடிச்சிருவேன் பார்த்த&#

Status
Not open for further replies.
வந்தாச்சு தூக்கி அடிச்சிருவேன் பார்த்த&#

வந்தாச்சு தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க... டி - சர்ட்!


(29/09/2015)
லைவர்கள் படங்கள் பொறிக்கப்பட்ட அரசியல் டி சர்ட்டுகள், தலைவர்களது பொன்மொழிகள் பொறிக்கப்பட்ட டி- சர்ட்டுகள் கடைகளில் விற்பனைக்கு வருவதுதான் இதுவரை வாடிக்கையாக இருந்தது.
t%20shirt%204.jpg



முக்கியமாக அரசியல் கட்சிகளின் மாநாட்டின் போது, தலைவர்கள் படங்கள் பொறிக்கப்பட்ட டி- சர்ட்டுகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும். தொண்டர்கள் அந்த டி - சர்ட்டுகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

தற்போது முதல் முறையாக அரசியல்கட்சித் தலைவர் ஒருவர் பயன்படுத்திய கோபமான வார்த்தைகள் பொறிக்கப்பட்ட டி- சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன. குறிப்பாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பொன்மொழியாக பயன்படுத்திய 'தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க.. !' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி சர்ட்டுகள் அதிகமாக மக்களை கவர்கிறது.


காவிரி பிரச்னைக்காக தமிழக எதிர்காட்சித் தலைவரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வீட்டில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் கோபமடைந்த விஜயகாந்த், 'தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க...! என்ற டயலாக்கை கோபத்துடன் பயன்படுத்தினார். அந்த டயலாக் அப்போது வெகு பிரபலமானது.

இணையங்களிலும் 'தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க' டயலாக் பரவலாக வலம் வந்தது. தற்போது அந்த வாசகம் பொறிக்கப்பட்ட டி சர்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.


t%20shirt%203(1).jpg


இது மட்டுமல்ல தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையான' என்னம்மா, இப்படி பண்றீங்களேமா...!' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி சர்ட்டுகளும் சந்தைக்கு வந்துள்ளன.


t%20shirt%202(1).jpg


காமெடி நடிகர் வடிவேலு ஒரு படத்தில் பயன்படுத்தும் 'ஆஹான்' என்ற வார்த்தையும், 'நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் ' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டிசர்ட்டுகளும் தயாரிக்கபபட்டு விற்பனைக்கு வந்துள்ளன.


http://www.vikatan.com/news/article.php?aid=53020
 
இந்த கேவலத்தை கூட கட்டம் போட்டு விக்க வந்துட்டாங்க ஐயா! வந்துட்டாங்க!
 
Status
Not open for further replies.
Back
Top