ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்!

Maha52

Active member
ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்!

1571529150730.png



நாடாளும் மன்னவன் பெருவிருப்பத்தோடு அந்த ஆலயத்தை எழுப்பினான். ஈசனே தன் கனவில் தோன்றிக் கட்டளையிட்டதற்கேற்ப எழுப்பும் ஆலயம் என்பதால், அவன் அந்தத் திருப்பணியைத் தலையாய பணியாகக் கருதிச் செய்தான். ஆலயமும் அழகுடன் எழுந்தது. காலமெல்லம் அந்த ஆலயம் நிலைத்து சிவனருள் அங்கு நிலைகொள்ள வேண்டும் என்று விரும்பினான்.

``பி
ற்காலத்தில் இந்த ஆலயத்தில் சிறு பழுது ஏற்பட்டாலும், அதைத் தீர்த்து, திருக்கோயிலைப் புனரமைப்ப வர்களின் பாதங்களில் விழுந்து இந்த உலகம் அறியும் வண்ணம் தொழுவேன்’’ என்று சொல்லி அதைக் கல்வெட்டா கவும் வடித்துவைத்தான் அந்த மன்னன். அவன், பராக்கிரமப் பாண்டியன். பார்போற்றும் அந்த ஆலயம் தென்காசி விசுவநாதர் கோயில்.

`ஆராயினும் இந்தத் தென்காசி மேவும்பொன் ஆலயத்து

வாராததோர் குற்றம் வந்தால்; அப்போதங்கு வந்ததனை

நேராகவே திருத்திப் புரப்பார் தமை நீதியுடன்

பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே'
என்னும் பாடலாக அவனின் வேண்டுகோள் இன்றும் நிலைத்து அவன் புகழ்பேசுகிறது.

காசி, இந்த பாரத தேசத்தின் புண்ணியத் தலங்களுள் முதன்மையானது. பாவம் போக்கும் காசியில் உறைந்து அருள்பாலிப்பவர் காசி விசுவநாதர்.

Read more at: https://www.vikatan.com/spiritual/temples/story-of-tenkasi-kasi-viswanathar-temple

நன்றி: விகடன்
 
தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தில் மாசி மகப்பெருவிழா

Click the link to view the video:



தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தில் மாசி மகப்பெருவிழா
 
Back
Top