• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ராமேஸ்வரம்,ப்ரயாக், காசி,கயா யாத்ரா தொடர்ச்சி

kgopalan

Active member
போதுமான தர்பை அங்கு கிடைக்காது. ஆதலால் 10 கட்டு தர்பை எடுத்துச்செல்லவும். புரச இலை-10 எடுத்து கொள்ளவும் .காசி கயா விற்கு செல்லும் போது.
தோலினால் ஆன பொருட்கள் வேண்டாம், ரப்பர் அல்லது ப்லாஸ்டிக் பெல்ட் இடுப்புக்கு தேவை. . ரப்பர் அல்லது பி.வி.சி மிதியடி வாங்கி காலில் போட்டுகொண்டு நடந்து பழகி கொள்ளுங்கள் .விலை அதிகமில்லாமல் வாங்கி போட்டுக்கொள்ளவேண்டும்.
ரயிலில் திருட ர் அதிகம் இருக்கும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வியாபாரிகள் மட்டமான பொருட்களை உங்கள் தலையில் கட்ட முயற்சிப்பார்கள்.. எச்சரிக்கை தேவை.
ரயிலிலும், போய் தங்கும் இடங்களிலும் கொசுவத்தி ; கொசுவிரட்டி, ரூம் ப்ரஷ்னர் ஸ்ப்ரேஸ். தேவை படும். எடுத்து வரவும்.
உங்கள் செல்போனில் உங்கள் லேன்ட் லைன் டெலெபோன் வரும் படி செய்து கொள்ளவும்( கால் டைவர்சன்).. செல் போன் சார்ஜர் எடுத்து வரவும்.
உங்கள் வீட்டிற்கு செக்யூரிட்டி ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.
சென்னை பக்கத்திலிருந்து ரயிலில் வருவோர் ராமேசுவரத்திற்கு காலை 4 மணி சுமாருக்கு வந்தடையும் ரயிலில் ரிசர்வ் செய்து கொண்டு வந்தால் உங்களை வாத்யார் ரயில் நிலையத்திலிருந்து அவர் வீட்டிற்கு அழைத்து வருவார்.
, தில ஹோமம் செய்ய வேண்டியவர்கள் அன்று காலையில் ஆரம்பித்து தில ஹோமம் முடிந்த பிறகு ஜீப்பில் தனுஷ்கோடி சென்று திரும்ப வரலாம்..
மற்றவர்கள் அன்று ஜீப்பில் தனுஷ்கோடி சென்று சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு வேணி மாதவர் பூஜை செய்துவிட்டு மணல் எடுத்துகொண்டு வாத்யார் வீட்டுக்கு வந்து தீர்த்த சிராத்தம் செய்யலாம்.
மாலை ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு செல்லலாம்.
தில ஹோமம் செய்தவர்கள் மறுநாள் தீர்த்த சிராத்தம் செய்து விடலாம்.
மறு நாள் அக்னி தீர்த்தத்திலும் கோவிலுக்குள் இருக்கும் 22 நாழி கிணறு களிலும் காலையில் குளித்துவிட்டு மாலையில் பக்கத்திலுள்ள சீதா தீர்த்தம்; ராமர் தீர்த்தம், லக்ஷமண தீர்த்தம்; கந்த மாதன பர்வதம் கோதண்ட
ராமர் கோவில்; நம்பு நாயகி அம்மன் கோயில்; உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில்; பாம்பன் ரயில் பாலம், பாம்பன் சாலை பாலம் பார்க்கலாம்.
தீர்த்த சிராத்தம் ஒரு முறை செய்து விட்டு பிறகு ஒரு வருடத்திற்குள் மறுபடியும் எத்தனை முறை ராமேஸ்வரம் வந்தாலும் மறுபடியும் தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டாம். .ஒரு வருடத்திற்கு மேல் வந்தால் மறுபடியும் தீர்த்த சிராத்தம் செய்ய அநுமதி உண்டு..
சமுத்ர ஸ்நானம் கோவில் கிணறுகளில் குளிப்பது ஒவ்வொரு முறை வரும் போதும் செய்யலாம்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் காலை ஐந்து மணி முதல் ஒரு மணி வரையிலும் மாலை மூன்று மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் திறந்திருக்கும்.
ராமேசுவரம் வந்து அடைந்தவுடன் பித்ருகள் ஆவலாக உணவுக்கு காத்திருப்பார்கள். ஆதலால் முதல் நாள் தீர்த்த சிராத்தம் செய்து விட்டு மறு நாள் தில ஹோமம் செய்யலாம்.. தில ஹோமமும் பித்ருக்களூக்கு தான் செய்கிறோம்.

ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலில் தினந்தோறும் காலை ஐந்து மணிக்கு ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள். காலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று ஸ்படிக லிங்க அபிஷேகம் பார்க்கலாம்.
மடிசார் புடவையுடனும் பஞ்ச கச்ச வேஷ்டியுடன் தான் எல்லாம் செய்ய வேண்டும்.. வீட்டில் குளித்துவிட்டு ஸங்கல்ப ஸ்நானம் செய்யுமிடம் சென்று ஸங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.
எந்த தீர்த்த கரையிலும் சுமங்கலிகளுக்கு ரவிக்கை துண்டு வெற்றிலை பாக்கு பழம், புஷ்பம், தக்ஷிணை மஞ்சள் பொடி, குங்குமம்; சீப்பு, கண்ணாடி,கண்மை மருதாணி பவுடர். கண்ணாடி வளயல் கொடுக்க
வேண்டும். ஆதலால் தனுஷ் கோடியிலும், ராமேஸ்வரத்திலும் சுமங்கலிகளுக்கு கொடுக்க இவைகளை வாங்கி எடுத்து செல்லவும்.
ஸ்ரீ ராமநாத ஸ்வாமி ஆலயத்தில் உள்ள 22 நாழி கிணறு பெயர்கள்,
அக்னி தீர்த்தம் என்பது சமுத்ரம்-காஞ்சி சங்கர மடம் பக்கத்தில் உள்ளது இங்கு குளிக்கு முன்னர் தலைக்கு ஒரு வாழப்ழம் கடலில் போட்டு விட்டு ஸ்நானம் செய்துவிட்டு வேறு காய்ந்த வஸ்த்ரம் மாற்றிக்கொண்டு
கோவிலுக்குள் கிணறுகளில் குளிக்க க்யூ வரிசையில் நின்று உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது..
கோவிலுக்குள்- மஹா லக்ஷமி தீர்த்தம் இதில் குளிப்பதால் இழந்த பொருள் திரும்ப கிடைக்கும்
சாவித்ரீ தீர்த்தம் இதில் குளிப்பதால் சாப நிவர்த்தி
காயத்ரீ தீர்த்தம்-: பிறர் நம்மீது செய்திருக்கும் தீமைகள் போகும்.தீய சக்திகள் விலகும்.
ஸரஸ்வதி தீர்த்தம்:-தோல் வியாதி நீங்கும். கல்வியில் நல்ல தேர்ச்சி; பேச்சு நன்றாக வரும்.
சக்ர தீர்த்தம்- நோய் விலகும்; நோய் வராமல் தடுக்கும்.
ஸேது மாதவ தீர்த்தம்:-பெருமாள்;லக்ஷிமி கடாக்ஷம் உண்டாகும்.
நள தீர்த்தம்:-நவகிரஹ தோஷம் போகும்,
நீல தீர்த்தம்;-ஸகல யாகங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும்; ராமருக்கு பாலம் அமைக்க உதவியாக இருந்தவர்.
கவய தீர்த்தம்:- வேண்டிய வரம் அருளும்.
கவாக்ஷ தீர்த்தம்:-
கந்த மாதன தீர்த்தம்:-
ப்ருஹ்மஹத்தி சாப விமோசன தீர்த்தம்;
சூர்ய தீர்த்தம்;-பிரகாசமான அறிவு கிடைக்கும்.காமன் சென்ஸ் அதிகமாகும்.
சந்திர தீர்த்தம்:- மன நோய்கள் நீங்கும்.
சாத்யம்ருத தீர்த்தம்>-
சிவ தீர்த்தம்:- கால் நடைகளுக்கு செய்த ஹிம்சை; உயிர்வதை செய்த பாவம் போகும்.
சர்வ தீர்த்தம்
சங்கு தீர்த்தம்;உயிர் கொலை செய்த பாவம் போகும்- ஈ. எறும்பு; கொசு.
கயா தீர்த்தம் கயா சிராத்தம் செய்த பலன் கிடைக்கும்;
கங்கா தீர்த்தம்
யமுனா தீர்த்தம்
கோடி தீர்த்தம்:-ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும்.

ராம நாத ஸ்வாமி ஸன்னதிக்கு பின் புறம் இரண்டாவது மூன்றாவது ப்ரகாரங்களுக்கு இடையே ஸேது மாதவர் சந்நதி உள்ளது. வெள்ளை சலவை கல்லால் ஆனவர் ஆதலால் ஸ்வேத மாதவர் என்று அழைக்க படுகிறார்.
.தனுஷ்கோடியில் சங்கல்பம் செய்து கொண்டு முப்பதாறு முறை ஸ்நானம் செய்ய வேண்டும். கணவனும் மனைவியும் கைகளை கோர்த்து கொண்டு ஒரு தடவைக்கு ஆறு ஸ்நானம் வீதம் 6 தடவை செய்ய வேண்டும்.
அல்லது முதலில் பிந்து மாதவரை பூஜித்து விட்டு கடலுக்கு சென்று தம்பதிகள் கைகளை கோர்த்து கொண்டு 12 முறை ஸ்நானம் செய்துவிட்டு கரைக்கு வந்து ஸேது மாதவரை பூஜித்து திரும்ப கடலுக்கு போய் 12 முறை ஸ்நானம்
செய்து விட்டு கரைக்கு வந்து வேணி மாதவரை பூஜித்து விட்டு திரும்ப கடலுக்கு சென்று 12 முறை ஸ்நானம் செய்து விட்டு கரைக்கு வந்து வேணி மாதவர் மணலை பித்தளை சம்படத்தில் எடுத்து கொண்டு
ஸேது மாதவரை துணி பையில் எடுத்துக்கொண்டு வந்து ஸேது மாதவர் உள்ள இடத்தில் மணலை போட்டு விடலாம்.. அல்லது
காலுக்கு அடியில் உள்ள மணல் இரு கைகளிலும் எடுத்து வந்து கரையில் இந்த மணலை மூன்றாக பிரித்து 1 ஸேது மாதவர். 2, பிந்து மாதவர்-3. வேணி மாதவர் என பூஜிக்க வேண்டும். பிறகு பிந்து மாதவரை
கடலில் அங்கேயே கரைத்து விடலாம். வேணி மாதவரை ஒரு பித்தளை (ஈயம் பூசாதது) அல்லது செம்பு ( தாமிரம் ) டப்பாவில் எடுத்து வைத்து கொண்டு அதை வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டில் அலஹாபாத் செல்லும்
வரை பூஜிக்க வேண்டும். .ப்லாஸ்டிக் டப்பா விலோ துணி பையிலோ ; எவர் சில்வர் டப்பாவிலோ இந்த மணலை எடுத்து கொண்டு வர வேண்டாம்.
ப்ரயாகையில் இந்த மணலை பூஜித்து கங்கையில் கரைக்க வேண்டும்
ஸேது மாதவர் ஆக பூஜித்த மணலை மேலே சொன்ன ஸேது மாதவர் ஸந்நிதிக்கு சென்று பூஜித்து அங்கேயே மணலை விட்டு விட வேண்டும்.
ப்ரயாகையில் இந்த டப்பா அங்கு பூஜை செய்யும் பண்டா எடுத்து கொள்கிறார்.

ராமேஸ்வரம் சென்று வர ரயில் டிக்கட் ரிசர்வ் செய்து விட்டு கிளம்பும் முன் குலதெய்வத்திற்கும் அபிஷேகம் வஸ்த்ரம், அர்ச்சனை செய்து அனுமதி பெற்று க்கொண்டு யாத்ரா தானம் மந்திரங்கள் சொல்லி யாத்ரா தானம்
செய்து விட்டு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு செக் லிஸ்ட்டில்
உள்ள படி விட்டு போகாமல் தினசரி சாப்பிட வேண்டிய மருந்துகள் பேனா ,பேப்பர் .ஒன்பது ஐந்து வேஷ்டிகள், 9 முழ புடவைகள்; உள்ளாடைகள் துடைத்துகொள்ள துண்டுகள் ஈர உடைகள் வைக்க பெரிய ப்லாஸ்டிக்
கவர்கள்; தங்கி இருக்கும் வீட்டில் உலர்த்த கயிறு க்லிப்; டூத் பேஸ்ட்; டூத் ப்ரஷ். துவைக்கும் சோப்பு, உடலுக்கு தேய்த்து குளிக்க சோப்பு; தலைக்கு தடவி கொள்ள தேங்காய் எண்ணய்; வீபூதி சந்தனம். குங்குமம் மஞ்சள்
பொடி; முக கண்ணாடி;;; கத்தி; கத்திரிக்கோல்; ;செல்லும் காலத்திற்கு தகுந்த மற்ற உடைகள்; ; பேண்ட்; சட்டை; இரவு ஆடை; ப்ரயான ஆடை; பழைய
துணிகள்; ; காற்று தலகானி; போர்வை ; டால்கம் பவுடர்;; உட்கார்ந்து கொள்ள இரு ப்லாஸ்டிக் பைகள். இன்னும் பிற.
ரயிலில் செல்லும்போது ரயிலில் கொடுக்கும் ஆகாரம் வயிற்றுக்கு ஒத்து கொள்ளாமல் பேதி ஆகலாம். வற்று வலி தலை வலி சளி; இருமல் போன்றவைகள் வரலாம். ஆதலால் இதற்குறிய மருந்துகளும் எடுத்து கொள்ளவும்.. .முன் எச்சரிக்கையாக.
ப்ரயாணத்தின் போது செல்லும் வழியில் உங்கள் உறவினர்கள்; நண்பர்கள் இருந்தால் ஆகாரத்திற்காக அவர்களிடம் முன் கூட்டியே தெரிவித்து உதவிகள் பெறலாம்.
ப்ரயாணத்தின் போது உங்கள் வீட்டு ஆகாரமே கையில் எடுத்து செல்வது நல்லது. அதற்கு தேவையான அட்டை ப்லேட்டுகள்; அட்டை கப்புகள்; தண்ணீர் பாட்டில்கள்; வாங்கி எடுத்து செல்லலாம்.
காசியிலிருந்து திரும்ப வரும்போது தேவையான ஆகாரங்கள் தயார் செய்து உங்களிடம் க்ஷேத்திரத்திலுள்ள வாத்யார் கொடுத்து அனுப்புகிறார்..
ரயிலில் வேறு ஒன்றும் வாங்கி சாப்பிட வேண்டாம். காபி மாத்திரம் வாங்கி சாப்பிடுங்கள்..
பித்ரு தர்பணம் செய்ய வேண்டிய உற்றார் உறவினர் பெயர்;
கோத்திரம், உறவு முறை எழுதிய பெயரையும் சங்கல்பத்தின் போது சொல்ல வேண்டிய கோத்திரம், , நக்ஷத்திரம் ,ராசி சர்மா, பெயர் உறவு முறை எழுதிய பேப்பரையும், எடுத்து செல்ல வேண்டும்.
கோத்திரம்
கர்த்தாவின் நக்ஷத்திரம். ராசி சர்மா, கர்த்தா எனவும். நக்ஷத்திரம் ராசி; பெயர்
கர்தாவின் மனைவி என்றும். பின் நக்ஷத்திரம் ராசி. சர்மா மகன். பிறகு உறவு என்ற இடங்களில் மருமகள், ; பேரன்; பேத்தி எனவும். பின்னர்
கர்த்தாவின் மாப்பிளையின் கோத்திரம். எழுதி நக்ஷத்திரம்—ராசி—பெயர் எழுதி உறவு என்னும் இடத்தில் மாப்பிள்ளை மகள், தெளஹித்ரன். தெளஹித்ரி எனவும் முன்பே எழுதி கொண்டு போய் ராமேஸ்வரம், ப்ரயாகை, காசி;, கயா
க்ஷேத்திரங்களில் வாத்யாரிடம் கொடுத்து விட்டால் அதை பார்த்து அவர் சங்கல்பம் செய்யவும் அந்தந்த நக்ஷத்ரங்களுக்கு ஹோமம் செய்யவும் மிகவும் செளகரியமாக இருக்கும்.
பிண்டங்கள் வைத்து மந்திரம் சொல்லும் போது இறந்தவர்களின் கோத்திரம் பெயர் உறவு முறை ஒன்று க்கூட விட்டு போகாமல் இருப்பதற்காக இப்போதே வீட்டில் யோஜித்து தயார் செய்து கொண்டு க்ஷேத்திரங்களில் வாத்யாரிடம் கொடுக்க வேண்டும்.
தரிசிக்க வேண்டிய ராமநாத புரத்தை சுற்றியுள்ள சில தலங்கள்..
தற் காலத்தில் ஆவுடையார் கோயில் என அழைக்க படுகிறது. திருபுன வாயில். இது அறந்தாங்கியிலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
திருபெருந்துறை என்பதும் இது தான். சுந்தரர்- மாணிக்க வசகர் பாடல் பெற்ற தலம். மிக பெறிய நந்தி மிகப்பெறிய ஆவுடையார் இந்த தலத்தில் பிரசித்தம்.
14 லிங்கங்கள் ப்ரதிஷ்டையில் உள்ளது. ராமநாத புரம் வடக்கு எல்லயில் தொண்டி என்ற ஊர். . இதற்கு வடக்கே உள்ளது தீர்தாண்ட தனமும் திருபுன வாயிலும்.
திருபுன வாயிலி லிருந்து தென் கிழக்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் தீர்தாண்டம். என்ற ஊர். இங்கு சிவன் ராமரின் தாஹத்தை தீர்த்தார். தீர்தாண்ட தனம் என்பது மருவி தீர்தான்டம் ஆயிற்று..
உப்பூர்:- தேவி பட்டிணத்திற்கு வடக்கே உள்ள தலம். . ராமநாதபுரம்—தொண்டி கடர்கறை சாலையில் தேவி பட்டிணத்திற்கு வடக்கே உள்ளது. ஸ்ரீ ராமர் ஆவுடையார் கோயில் எனப்படும் திருபுன வாயில் சிவனிடம் அருளாசி
பெற்று இலங்கயை நோக்கி வந்த போது இந்த உப்பூர் பிள்ளயாரை வழிபட்டு பிறகு தேவிபட்டினம் எனும் நவ பாஷானம் வந்து இங்கு நவகிரஹங்கள் ஒன்பதும் ப்ரதிஷ்டை செய்து பூஜித்துவிட்டு திருபுல்லாணி சென்றார்.
தேவி பட்டிணத்தில் ஒரு பிள்ளயார் கோயிலும், அம்பாள் கோயிலும் ஒரு பெருமாள் கோயிலும் உள்ளது, காலையில் நவகிரஹங்களுக்கு அர்ச்சனை செய்யலாம். எல்லா நவகிரஹ அர்சனை முடிந்த பிறகு ஒரு தேங்காய்
உடைத்து நைவேத்யம் .இங்கும் ஸ்நானம் செய்யலாம். படிகட்டு வசதிகள் உள்ளன. நவகிரஹங்களை வலம் வருவதற்கு செளகரியமாக ப்ளாட்பாரம் உள்ளது.
இது உப்பூருக்கு தெற்கே 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது; ராமநாதபுரத்திலிருந்து வடக்கே 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
தர்ப சயனம்=திருபுல்லாணி
ராமநாத புரத்திற்கு தெற்கே கீழக்கரை செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருபுல்லாணி என்னும் தர்ப சயனம்.
இங்கு ஸ்ரீ ராமர் சமுத்ர ராஜனை குறித்து தர்பாஸனத்தில் தவமிருந்தார். .மூலவர் ஆதி ஜகன்நாத பெருமாள். . இந்த கோவிலின் எதிரே உள்ள சக்கிர தீர்த்த குளத்தில் நீராடினால் தீரா நோய்கள் தீரும்.. கோவில் மரம் அரச மரம்.
இந்த அரச மரம் வித்தியாசமாக உள்ளது. மரத்தடியில் நாகப்ரதிஷ்டை உள்ளது. நாகத்தின் மேல் நடனமாடும் சந்தான கோபால க்ருஷ்ணன்; பட்டா கத்தியுடன் படுத்து இருக்கும் தர்பாசயன ராமர். உள்ளது.
ஆதி ஸேதுக்கரை:-
திருபுல்லாணியிலிருந்து தென் கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. . இங்கிருந்துதான் ஹனுமார் இலங்கைக்கு செல்ல ஆயத்தமானார். பெரிய ஹனுமார் கோயில் இங்கு கடலை நோக்கி உள்ளது. .
இங்கு தான் அக்னி அஸ்த்ரம் ப்ரயோகித்து கடலை வற்ற தயாரானார் ஸ்ரீ ராமர். இங்கிருந்து தான் இலங்கைக்கு பாலம் அமைத்ததாக இங்குள்ளவர் கூறுகின்றனர்.. தனுஷ்கோடியிலிருந்து அல்ல என்றும் கூறுவர்.
அருகிலுள்ள சேஷகிரி ராயர் சத்திரத்தில் உள்ள ஒரு புனித கிணற்றில் நீராடி ஆதி ஸேது கரையில் ஸங்கல்ப ஸ்நானம் செய்துவிட்டு திருபுல்லாணி சென்று ஒரு வருக்கு அன்னதானம் செய்வது கயையில் ஒரு
லக்ஷம் பேருக்கோ; காசியில் இரண்டு லக்ஷம் பேருக்கோ . ப்ரயாகையில் ஏழு லக்ஷம் பேருக்கோ அன்னதானம் செய்ததிற்கு சமமாகும் என்று ஸ்ரீ ராமர் சீதையினிடம் சொன்னதாக சொல்லபடுகிறது.
உத்தரகோச மங்கை:- உத்தரம் என்றால் உபதேசம்; கோசம் என்றால் ரகசியம் நங்கை=உமாதேவி . பார்வதிக்கு பரமசிவன் வேத ஆகம ரகசியங்களை உபதேசித்த இடம்.
ராமநாத புரத்திற்கு தென்மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவத்தலம். . . திருபுல்லாணியிலிருந்தும் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சாபத்தால் மீனவ பெண்ணாக இருந்த உமா தேவியை மீண்டும் மணந்து ஞான உபதேசம் செய்த தலம். இந்த ஆலயத்தில் மிக உயரமான மரகத நடராஜ மூர்த்தி உள்ளார்.
இங்கு ஒரு ஸ்படிக லிங்கத்திற்கும் மரகத லிங்கத்திற்கும் தினம் அன்னாபிஷேகம் நடக்கிறது..
 

Latest ads

Back
Top