ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?
Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought powered helicopter.
(English version of this article is posted separately)
வால்மீகி ராமாயணத்தில், யுத்த காண்டத்தில், ஸ்ரீராமரின் விமானம் பற்றிய ஒரு தகவல் வருகிறது. இதுவரை புரியாதிருந்த இவ்விஷயம் இப்போது வெளியான அறிவியல் செய்தியால் நன்கு விளங்குகிறது. பாரத்வாஜ மஹரிஷி சம்ஸ்கிருதத்தில் எழுதிய வைமானிக சாஸ்திரம் ‘’விமானம் செய்வது எப்படி?’’ என்று கூறுகிறது. ஆனால் அவை எல்லாம் காற்றடைத்த பலூன் விமானங்களைப் போன்றவை. ராமரின் விமானமோ அதி நவீன விமானம். நினைத்த மாத்திரத்தில் பறக்கும், இறங்கும். இதை அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இப்போது செய்து காட்டியுள்ளனர்.
ராவணனை வதம் செய்த ராம பிரான் உடனே அயோத்தி திரும்ப வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார். ஆனால் விபீஷணனோ கொஞ்சம் குளித்துவிட்டுப் போகலாமே. இதோ பாருங்கள் நறுமணப் பொருட்கள்; அதை உடலில் தேய்த்துவிட அழகான நங்கைகள் என்று கூறுகிறான். அப்படிபட்ட ஆடம்பர வேலைகளுக்கு நேரமில்லை என்று ராமன் கூறவே விபீஷணன் கூறுகிறான் (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 123)
“ஓ, ராஜனே, கவலைப்படாதீர்கள். குபேரனிடம் இருந்த புஷ்பக விமானத்தை என் அண்ணன் ராவணன் வலுக் கட்டாயமாக பறித்து வந்தான்; அது ஒரே நாளில் உங்களை அயோத்தியில் சேர்த்துவிடும். அது வெள்ளை நிற மேகம் போல வண்ணமுடையது. சூரிய வெளிச்சத்தில் தக தக என்று மின்னும். பாதுகாப்பாகச் செல்லாலாம்; நினைத்த மாத்திரத்தில் பறக்க வல்லது”
விபீஷணனின் கூற்றில் நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன: 1.நினைத்த மாத்திரத்தில் பறக்கும், அதாவது எண்ண அலைகளால் பறக்க வல்லது, 2.வெள்ளி போல, அலுமினியம் போல, வெள்ளை மேகம் போல, நிறம் உடையது 3.பயப்படவேண்டாம், பாதுகாப்பானது 4.ஒரே நாளில் அயோத்திக்குப் போகும் அளவு வேக்மானது!!
இந்த 4 விஷயங்களும் இக்காலத்திலும் பொருந்தக் கூடியவை: வெள்ளி போல நிறம் மற்றும் பாதுகாப்பு; நாங்கள் லண்டனில் ஏறி சென்னை வரும் போதெல்லாம் விமானம் புறப்படுவதற்கு முன் முதலில் பாதுகாப்பு அறிவிப்பும் ‘’டெமான்ஸ்ட்ரேஷனும்’’ வரும். அந்தக் காலத்தில் விபீஷணன் சொன்ன பாதுகாப்பு விஷயம் இன்று வரை நடை முறையில் உள்ளது!
புதிய கண்டு பிடிப்பு!
ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் பறந்ததா? என்று எல்லாம் கேட்போருக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. லண்டன் ‘மெட்ரோ’ பத்திரிகையில் எண்ண அலைகளால் பறந்த ஹெலிகாப்டர் பற்றிய செய்தி ஜூன் 5ஆம் தேதி (05/06/2013) வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் மின்னசோட்டா பல்கலைக் கழக அறிவியல், பொறியியல் துறை செய்த ஆராய்ச்சியை ‘’ஜர்னல் ஆF ந்யூரல் எஞ்சினீரிங்’’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் ஒரு மாடல் (மாதிரி) ஹெலிகாப்டர் செய்தனர். இதைப் பறக்கவைக்க சில ஆய்வாளர்கள் தங்கள் தலைகளில் ‘’எலெக்ட்ரோட்ஸ்’’களைப் பொருத்திக் கொண்டனர். நாம் பொம்மை விமானத்தைப் பறக்கச் செய்யும் ‘’ரிமோட் கண்ட்ரோல்’’ கருவிகள் எதையும் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக ‘’விமானமே பற, விமானமே இறங்கு, வலது பக்கம் போ, இடது பக்கம் போ’’ என்று மனதில் நினைத்தனர். மூளையில் இருந்து கிளம்பிய எண்ண அலைகள், எலெக்ட்ரோட்ஸ் மூலம் விமாத்துக்குச் செல்ல அதில் இருந்த கருவிகள் விமானத்தைப் பறக்க வைத்தன.
இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் ரோபோ எனப்படும் இயந்திர மனிதர்களை இயக்கமுடியும். விபத்துக்களில் சிக்கியோரை மீட்க இது உதவும். இன்னும் எவ்வளவோ அற்புதங்களைச் செய்ய முடியும்.
ராமபிரான் விமானத்தில் கருவிகள் இருந்தனவா? அவை என்ன? என்பதை நாம் அறியோம். ஆனால் எண்ணத்தினால், நினைத்த மாத்திரத்தில் விமானங்களைப் பறக்கவைக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை சில “பகுத்தறிவுகள்” இதை நம்ப மறுத்தாலும் இன்னும் பல விஞ்ஞான செய்திகள் வரும் வரை பொருத்திருக்கலாம். அதுவரை சிறந்த விஞ்ஞான புனைக் கதை எழுதிய பரிசையாவது வால்மீகி முனிவருக்கு அளிக்கலாம்.உலகில் முதல் முதலில் நினைத்தமாத்திரத்தில் பறக்கும் ஏரோ பிளேன் பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டாரே!
Those who use this article in other blogs must name the author London Swaminathan and Blog name.
சங்க இலக்கியத்தில், புறநானூற்றில் உள்ள, ஆள் இல்லாத விமான சர்வீஸ் பற்றி “சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்” என்ற கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்.
Read my earlier posts on Ramayana Wonders:
1.Ramayana Wonders- 1[SUP]st[/SUP] part 2.How Many Miles Did Rama walk? ( Ramayana Wonder –Second part 3.Rama and Sanskrit G’ramma’R (Ramayana Wonder part 3), 4.Who can read all 300 Ramayanas? (Ramayana Wonder part 4), 5.Indus Valley Cities in Ramayana (Ramayana wonder part 5), 6.Aladdin’s Magic in Valmiki Ramayana (Ramayana Wonder part 6), 7.Where is Rama Setu (Rama’s Bridge)? 8.Miracles by the Departed Souls from two epics 9.Why Hindus Worship Shoes? 10.சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ் 11.மாண்டவர் மீண்டுவந்த மூன்று அதிசய நிகழ்ச்சிகள் 12.ராமாயண வினா விடை 13.Maruti Miracle: 600 kilometres per hour! 14.அதிசய அனுமார் சிலை 15.Superman of India: Anjaneya 16.Do Hindus believe in Aliens and ETs? 17. Hindus’ Future Predictions (parts 1 and 2) 18.Time Travel by Two Tamil saints 19. Is Brahmastra a Nuclear Weapon? 19.தியாகராஜ சுவாமிகளுடன் 60 வினாடி பேட்டி 20..நாமும் அனுமார் ஆகலாம் 21.கம்பனுடன் 60 வினாடி பேட்டி 22.Free Charter Flight to Heaven
(Two articles on Subbaraya Shastry, author of Vaimanika Shastra, written by my brother S Nagarajan have been posted in this blog last year.:-London swaminathan)

Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought powered helicopter.
(English version of this article is posted separately)
வால்மீகி ராமாயணத்தில், யுத்த காண்டத்தில், ஸ்ரீராமரின் விமானம் பற்றிய ஒரு தகவல் வருகிறது. இதுவரை புரியாதிருந்த இவ்விஷயம் இப்போது வெளியான அறிவியல் செய்தியால் நன்கு விளங்குகிறது. பாரத்வாஜ மஹரிஷி சம்ஸ்கிருதத்தில் எழுதிய வைமானிக சாஸ்திரம் ‘’விமானம் செய்வது எப்படி?’’ என்று கூறுகிறது. ஆனால் அவை எல்லாம் காற்றடைத்த பலூன் விமானங்களைப் போன்றவை. ராமரின் விமானமோ அதி நவீன விமானம். நினைத்த மாத்திரத்தில் பறக்கும், இறங்கும். இதை அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இப்போது செய்து காட்டியுள்ளனர்.
ராவணனை வதம் செய்த ராம பிரான் உடனே அயோத்தி திரும்ப வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார். ஆனால் விபீஷணனோ கொஞ்சம் குளித்துவிட்டுப் போகலாமே. இதோ பாருங்கள் நறுமணப் பொருட்கள்; அதை உடலில் தேய்த்துவிட அழகான நங்கைகள் என்று கூறுகிறான். அப்படிபட்ட ஆடம்பர வேலைகளுக்கு நேரமில்லை என்று ராமன் கூறவே விபீஷணன் கூறுகிறான் (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 123)
“ஓ, ராஜனே, கவலைப்படாதீர்கள். குபேரனிடம் இருந்த புஷ்பக விமானத்தை என் அண்ணன் ராவணன் வலுக் கட்டாயமாக பறித்து வந்தான்; அது ஒரே நாளில் உங்களை அயோத்தியில் சேர்த்துவிடும். அது வெள்ளை நிற மேகம் போல வண்ணமுடையது. சூரிய வெளிச்சத்தில் தக தக என்று மின்னும். பாதுகாப்பாகச் செல்லாலாம்; நினைத்த மாத்திரத்தில் பறக்க வல்லது”
விபீஷணனின் கூற்றில் நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன: 1.நினைத்த மாத்திரத்தில் பறக்கும், அதாவது எண்ண அலைகளால் பறக்க வல்லது, 2.வெள்ளி போல, அலுமினியம் போல, வெள்ளை மேகம் போல, நிறம் உடையது 3.பயப்படவேண்டாம், பாதுகாப்பானது 4.ஒரே நாளில் அயோத்திக்குப் போகும் அளவு வேக்மானது!!
இந்த 4 விஷயங்களும் இக்காலத்திலும் பொருந்தக் கூடியவை: வெள்ளி போல நிறம் மற்றும் பாதுகாப்பு; நாங்கள் லண்டனில் ஏறி சென்னை வரும் போதெல்லாம் விமானம் புறப்படுவதற்கு முன் முதலில் பாதுகாப்பு அறிவிப்பும் ‘’டெமான்ஸ்ட்ரேஷனும்’’ வரும். அந்தக் காலத்தில் விபீஷணன் சொன்ன பாதுகாப்பு விஷயம் இன்று வரை நடை முறையில் உள்ளது!
புதிய கண்டு பிடிப்பு!
ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் பறந்ததா? என்று எல்லாம் கேட்போருக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. லண்டன் ‘மெட்ரோ’ பத்திரிகையில் எண்ண அலைகளால் பறந்த ஹெலிகாப்டர் பற்றிய செய்தி ஜூன் 5ஆம் தேதி (05/06/2013) வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் மின்னசோட்டா பல்கலைக் கழக அறிவியல், பொறியியல் துறை செய்த ஆராய்ச்சியை ‘’ஜர்னல் ஆF ந்யூரல் எஞ்சினீரிங்’’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் ஒரு மாடல் (மாதிரி) ஹெலிகாப்டர் செய்தனர். இதைப் பறக்கவைக்க சில ஆய்வாளர்கள் தங்கள் தலைகளில் ‘’எலெக்ட்ரோட்ஸ்’’களைப் பொருத்திக் கொண்டனர். நாம் பொம்மை விமானத்தைப் பறக்கச் செய்யும் ‘’ரிமோட் கண்ட்ரோல்’’ கருவிகள் எதையும் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக ‘’விமானமே பற, விமானமே இறங்கு, வலது பக்கம் போ, இடது பக்கம் போ’’ என்று மனதில் நினைத்தனர். மூளையில் இருந்து கிளம்பிய எண்ண அலைகள், எலெக்ட்ரோட்ஸ் மூலம் விமாத்துக்குச் செல்ல அதில் இருந்த கருவிகள் விமானத்தைப் பறக்க வைத்தன.
இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் ரோபோ எனப்படும் இயந்திர மனிதர்களை இயக்கமுடியும். விபத்துக்களில் சிக்கியோரை மீட்க இது உதவும். இன்னும் எவ்வளவோ அற்புதங்களைச் செய்ய முடியும்.

volunteers send commands to the helicopter by thinking. Picture from Minnesota University, US
ராம பிரானின் விமானம் இலங்கையின் ஏதோ ஒருபகுதியில் இருந்த இலங்காபுரி நகரில் இருந்து 3000 மைல்கள் பறந்து அயோத்திக்குப் போக ஒரே நாள்ததன் ஆனது! மேலும் 3000 ஆண்டுகளுக்கு முன் விமானங்கள் பகல் நேரத்தில் மட்டுமே பறந்திருக்கும். ஆக, 12 மணி நேரத்துக்குள் 3000 மைல் பறந்தார் ராமர்! இப்பொழுதைய விமானங்கள் சராசரியாக மணிக்கு 500 முதல் 600 மைல்கள் செல்லுகின்றன.ராமபிரான் விமானத்தில் கருவிகள் இருந்தனவா? அவை என்ன? என்பதை நாம் அறியோம். ஆனால் எண்ணத்தினால், நினைத்த மாத்திரத்தில் விமானங்களைப் பறக்கவைக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை சில “பகுத்தறிவுகள்” இதை நம்ப மறுத்தாலும் இன்னும் பல விஞ்ஞான செய்திகள் வரும் வரை பொருத்திருக்கலாம். அதுவரை சிறந்த விஞ்ஞான புனைக் கதை எழுதிய பரிசையாவது வால்மீகி முனிவருக்கு அளிக்கலாம்.உலகில் முதல் முதலில் நினைத்தமாத்திரத்தில் பறக்கும் ஏரோ பிளேன் பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டாரே!