P.J.
0
ராமசேது பாலம் உடைக்கப்படாது: மத்திய அரசு
ராமசேது பாலம் உடைக்கப்படாது: மத்திய அரசு உறுதி!
புதுடெல்லி: ராமசேது பாலம் உடைக்கப்படாது என்றும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற நான்கு மாற்று வழிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும் மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று இது தொடர்பான விவாதத்தின்போது இத்தகவலை தெரிவித்த அவர், இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு இதுகுறித்து விரிவாக எதுவும் தெரிவிக்க இயலாது என்றும், ஆனால் நான்கு மாற்று வழிகள் குறித்த யோசனை கூறப்பட்டுள்ளது என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ராமசேது பாலத்தை இடிக்கலாம் என கூறியிருந்தது. அதே சமயம் இது தொடர்பாக ஆய்வு செய்த பச்சவுரி கமிட்டி, ராமசேது பாலத்தை இடிக்காமல் மாற்று வழியில் அத்திட்டத்தை நிறைவேற்ற யோசனை தெரிவித்திருந்த நிலையில், அதனை அப்போதைய காங்கிரஸ் அரசு நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
??????? ????? ?????????????: ?????? ???? ?????!